சில்லுனு ஒரு அரட்டை

வந்தனம் வந்தனம்னு வாசகர்களுக்கு வணக்கம் சொல்றது கொங்கு நாட்டு சிங்கி.

எல்லோரும் எப்படியிருக்கீங்க?. பசங்களுக்கு லீவ் முடிஞ்சு, ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாங்களா?. இங்கே மே மாசம் பாதியில இருந்து, ஆகஸ்டு பாதி வரைக்கும் லீவோ லீவ். ‘ஹையா! 3 மாசம்’னு பசங்க குதிச்சாலும் ‘ஜயோ! மூணு மாசமா’ன்னு பெத்தவங்க பதற வேண்டியிருக்கு. நம்ம ஊரு மாதிரி அப்பச்சி ஊருக்கு பாதி நாள், அத்தாச்சி ஊருக்கு பாதி நாளுன்னு அனுப்ப முடியாது.

கொளுத்தற வெயில்ல வெளியிலேயும் போக முடியலை. லைப்ரரியும், நெட்டும் இருக்கப் போய் பொழுது போகுது. இங்குள்ள லைப்ரரிகளில் நடனம், இசை, பொம்மலாட்டம், கதை சொல்றது, மேஜிக் ஷோன்னு வாரத்துக்கு 5 நாள் கலக்கறாங்க. பாரம்பரிய கலைகள் அழியாம பாதுகாக்கும் இந்த முறையை நாமும் பின்பற்றினா நல்லா இருக்கிமில்லையா?

இன்னொரு விஷயம் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவங்க வரை 20 நிமிடம் ஒரு நூலைப் படிச்சாலோ, படிக்கச் சொல்லி கேட்டாலோ அதற்கென இருக்கும் அட்டையில் ஒரு காகிதப் பூவை பதிக்கணும். ஒரு குறிப்பிட்ட அளவு வந்ததும் பரிசு தருவாங்க. அதில நிறைய பரிசு வாங்கணும்னு சொல்லி என் பொண்ணுக்கு சொல்லித் தந்தேன். கணக்குப் பாடம் படிக்கும் போது அவளுக்கு புரியணும்னு, ‘என்கிட்ட 7 ஆப்பிள் துண்டுகள் இருக்கு. அப்பாகிட்டே 5 ஆரஞ்சு சுளைகள் இருக்கு. சித்தப்பாகிட்டே 30 திராட்சை இருக்கு. எல்லாத்தையும் சேர்த்தாக்க என்ன வரும்’னு கேட்டேன். எல்லாத்தையும் சேர்த்தா ஃபுரூட் சாலட் வரும்னு சொன்ன அவ பதிலை நினைச்சு, நினைச்சு சிரிக்கிறோம்.

இன்னொரு முறை கட்டத்துக்குள்ளே கலர் பண்ணச் சொன்னதுக்கு கட்டத்துக்கு வெளியே ஒரு பெரிய கடலே போட்டு அரிசோனாவிலிருந்து ஆவரம்பாளையத்துக்கு கப்பல் விட்டுட்டு இருந்தா. என்ன இதுன்னு கேட்டா, கிரையான் டாடா போகணும்னு சொல்லுச்சு, அதை கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் அப்படின்னா.

ஹும், முடியலைடா சாமின்னு அவளுக்காக நெட்டில் வொர்க் ஷீட் தேடினப்போ, நிறைய கிடைச்சது. அதில் இரண்டைத்தான் கீழே கொடுத்திருக்கேன்.உங்க சுட்டிகளுக்கு உபயோகப்படுத்திக்க.

http://kidsfront.com/

http://kids.noolagam.com/worksheets/index.html

ஒரு குட்டிக்கதை சொல்லட்டுமா?

ஒரு அமெரிக்கர் உலகத்திலுள்ள புகழ் பெற்ற தேவாலயங்கள் பற்றி புத்தகம் எழுத விரும்பி சுற்று பயணம் மேற்கொண்டாராம். முதலில் சீனாவுக்குப் போனானராம். அந்கிருந்த தேவாலயத்தில் உள்ள பொருட்களை ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு இடத்தில் தங்கத்தாலான ஃபோனும், அதுக்குக் கீழே $10,000 / call ன்னு எழுதியிருந்ததாம். அங்கிருந்த பாதிரியாரிடம் கேட்டப்போ, சொர்க்கத்துக்கு போன் பண்ணறதுக்காக இதை வைச்சிருக்கோம். இதன் மூலம் எங்க கம்யூனிசக் கொள்கையால வரும் பிரச்சனைகளை கடவுளிடம் சொல்லுவோம் அப்படின்னு சொன்னாராம்.

அவருக்கு ஒரு பெரிய நன்றியைச் சொல்லிட்டு அடுத்து நம்மாளு போன இடம் ஜப்பான். அங்கேயும் சீனாவில் பார்த்த மாதிரியே ஒரு போன். அங்கிருந்த சிஸ்டரிடம் கேட்டா, அடிக்கடி பூகம்பம் வருவதால், கடவுளிடம் பேச இந்த போனை வைச்சிருக்கோம்னு அவங்க சொன்னாங்களாம்.

பின், பல நாடுகளிலும் அந்த ஃபோனைப் பார்த்த அமெரிக்கர், வளர்ந்த நாடுகளிலேயே $10,000 ஒரு போன்காலுக்கு என்றால், ஏழை நாடான இந்தியாவில் எவ்வளவு இருக்கும்னு பார்க்க, நம்ம ஊருக்கு வந்தாதராம். அவர் நுழைஞ்ச தேவாலயத்திலும் அதே ஃபோன். ஆனா "One Rupee per call." அப்படின்னு எழுதியிருந்துச்சாம். ஏன் சொர்க்கத்துக்கு இவ்வளவு குறைவாக கட்டணம் விதிக்கிறீங்கன்னு கேட்ட அமெரிக்கருக்கு இந்தியா பாதிரியார் சொன்ன பதில்: "பண்பாடும், பழமையான நாகரீகமும் கொண்ட எங்கள் நாடே இப்பூமியின் சொர்க்கம். சொர்க்கத்துக்குள்ளே ஃபோன் பண்ண, லோக்கல் சார்ஜ்"

நல்ல சிந்தனை இல்லையா? கடைசி வரியைப் படிச்சதும், நம்ம கோரி சார் எழுதிய ‘அழகான இந்தியா’ கதை நினைவுக்கு வந்தது. கதை படிக்க:

https://www.nilacharal.com/ocms/log/03230901.asp

ஒரு இரண்டு வாரத்துக்கு முன்னாடி எங்க வங்கிக் கணக்கிலிருந்த மொத்த பணத்தையும் ஆன் லைன் மூலம் வேறொரு கணக்குக்கு இரு முறை மாத்திக்கிட்டாங்க. தினமும் வங்கிக் கணக்கின் கிரெடிட், டெபிட் கணக்கைப் பார்ப்பதால் உடனே வங்கிக்கு ஃபோன் செய்து மொத்த பணத்தையும் திரும்ப வாங்கி விட்டோம்.

ஆன் லைன் ஜடி, பாஸ்வேர்ட், செக்யூரிடி கேள்விகள் என அனைத்தையும் ஒரு மென்பொருள் மூலம் எடுத்ததோட, இ-மெயில், ஃபோன் அலர்ட் செய்திகளையும் வரவிடாம செய்திருக்கிறார் அந்த புண்ணியவான். இவ்வளவு திறமை இருக்கிறவன் நேர்மையா உழைக்க வேண்டியதுதானேன்னு எனக்குத் தோணுச்சு. நண்பர் ஒருத்தர் ஆன் லைன் திருட்டைத் தடுக்க, கீழே உள்ள சுட்டியை அனுப்பி வைச்சார்.

http://www.workz.com/content/view_content.html?section_id=495&content_id=6228

பணம் திரும்ப வரும் வரை எங்களுக்கு வந்த அறிவுரைகளுக்கு பஞ்சமே இல்லை. அதையெல்லாம் எழுதினா, இந்த இதழே பத்தாது. சுருங்கச் சொல்லணும்னா, உங்க ஆபிஸ் நெட்வொர்க்ல, ஆன் ஸ்கிரீன் கீ போர்ட் மூலம் வங்கி கணக்கு வழக்குகளை பாருங்கள்.

ரொம்ப சீரியஸா பேசிட்டோம். கொஞ்சம் சிரிக்க:

http://www.nilashop.com/product_info.php?products_id=1503

வாஷிங்டன்னில் தென்னிந்திய முறைப்படி எப்படித் திருமணாம் நடந்ததுன்னு பார்த்து சிரிச்சீங்களா?.

என்னதான் படிப்பு, அழகு, பணம் இருந்தாலும் அதற்கென ஒரு வேளை வந்தால் எல்லாம் தானே நடக்கும்னு சொல்றதுண்டு எங்க ஊர் பக்கத்தில். அதை விளக்கிற மாதிரி நம்ம ரிஷி ஒரு கட்டுரை எழுதியிருக்காரு. என்னடா! கலெக்டருன்னு கனவு கண்டுட்டு கடைசியில கழுவிறதிலும், விளக்கிறதிலுமே வாழ்க்கை போகுதேன்னு எனக்கு எப்போதாவது தோன்றது கூட இந்த கட்டுரையைப் படிச்சதுக்கு பின் வருவதில்லை.

https://www.nilacharal.com/ocms/log/06150904.asp

வாழ்க்கையை புதிய கோணத்தில் பார்க்க வைச்ச, ரிஷிக்கு நன்றி சொல்லி அடுத்த அரட்டையில் என் சுற்றுலா படங்களுடன் சந்திக்கும் வரை,

"அன்பாய் இருங்கள்
ஆரோக்கியமாய் இருங்கள்"

எனக் கூறி போய் வருகிறேன்.

About The Author

9 Comments

  1. Jo

    பெரிய அறிவாளியா இருக்காளே உங்க பெண்.. அழகான இந்தியா அருமையான கதை.. நைஸ்!

  2. Hema

    ஆன் லைன் திருட்ட தடுக்க கொடுத்த வழிமுறை உபயோகமா இருக்கு. இந்த காலத்து பசங்ககிட்ட பேசும்போது நாம தான் கொஞ்சம் கவனம இருக்கனும் போல. குழந்தைங்க ரொம்ப புத்திசாலியா இருக்காங்க. எல்லா கேள்விக்கும் பதில் வச்சிருக்காங்க.

  3. Rishi

    உங்க பொண்ணு சொன்ன பதில் அருமை.
    பிரகாஷோட அறிவு அப்படியே பொண்ணுக்கும் வந்திருக்கு!! ரொம்ப சமர்த்து..!
    (எப்பூடி! குடும்பத்துக்குள்ள இப்படித்தான் சிண்டு முடிஞ்சி விடணும்!!!!)

  4. kavitha

    தல ஜோ,

    எல்லாம் பெரியவங்க உங்க ஆசிர்வாதம்தான் !

  5. kavitha

    அறிவான கணவனும், பொண்ணும் கிடைச்சது நான் பண்ணினா புண்ணியம். என்னோட அறிவுதான் நண்பர் ரிஷி மாதிரியே இருக்குது.

    என்ன செய்வது?.
    🙂

Comments are closed.