சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம்! எல்லாருக்கும் புது வருஷமெல்லாம் எப்படிப் போயிட்டு இருக்கு? நேரா மேட்டருக்கு வர்றேன்.

இந்தப் புது வருட ஆரம்பத்தில் துபாய்ல உலகத்திலேயே மிக அதிக உயரமுள்ள ஒரு கட்டிடத்தைத் திறந்து வெச்சிருக்காங்க. பர்ஜ் கலீபான்னு அழைக்கப்படுகிற இந்தக் கட்டிடம் சுமார் 826 மீட்டர் உயரமுடையது. உலகில் உள்ள எல்லா உயரமான கட்டிடங்களிலும் உள்ள சிறப்பம்சங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரெக்கார்ட் ப்ரேக் செய்திருக்கிறது இந்தக் கட்டிடம். 160 மாடிகள் கொண்ட (அப்பா! தலை சுத்துது!) இந்தக் கட்டிடத்தின் 124வது தளம் பார்வையாளர்களுக்கானது. பல தளங்களில் தங்கும் வீடுகளும் உள்ளன. மிக அதிக வேகத்தில் இயங்கக்கூடிய லிஃப்ட்களும் இருக்கின்றன.

இன்னும் நிறைய விஷயங்கள் இதைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா கீழே உள்ள தளத்துக்குப் போங்க:

http://www.burjdubai.com

கொஞ்ச நாள்ல இந்தக் கட்டிடத்தை உலகத்தின் எட்டாவது அதிசயமா அறிவிச்சாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்கனவே நம்ம உலக அழகி ஐஸ்வர்யா ராயை எட்டாவது அதிசயம்னு ஒரு கவிஞர் பாடிட்டாரு. அப்புறம் நம்ம மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசயமாக்க இண்டெர்நெட்ல கணக்கெடுப்பு, ஓட்டு எல்லாம் எடுத்தாங்க. முடிவு என்னன்னே தெரியல. (யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்க). ஆமா, சாமியே வேண்டாம்னு சொல்றவங்க நிறைய பேரை ஊர்ல வெச்சுக்கிட்டு, ஒரு கோவில் உலக அதிசயமாகணும்னா அதெல்லாம் நடக்கற காரியமா? இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நம்ம விஜய் டி.வி, உலக நாயகன் கமலை உலகின் எட்டாவது அதிசயம்னு சொல்றாங்க! எதுதான் கடைசில எட்டாவது அதிசயமா ஆகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.

மீனாட்சி அம்மன் கோவில் அப்படின்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. நம்ம தமிழக சுற்றுலாத்துறையும் இப்பக் கொஞ்சம் முன்னேறி இன்டர்நெட் மூலமா மீனாட்சி அம்மன் கோவிலை எல்லாரும் பார்ப்பதற்கு வழி செஞ்சுருக்காங்க. இதுல என்ன ஸ்பெஷல் அப்படின்னா, வீட்டில் இருந்தபடியே கோவிலை இன்ச் பை இன்ச்சாப் பாத்து ரசிக்கிற மாதிரி அழகா வடிவமைச்சுக் கொடுத்திருக்காங்க. கூட்டத்தில இடிபடாம மீனாட்சியைத் தவிர எல்லா இடங்களையும் பார்த்துடலாம். நீங்களும் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துட்டு வாங்க:

http://www.view360.in/virtualtour/madurai/

முன்பெல்லாம் பெத்தவங்க ஒரு கிராமத்தில இருப்பாங்க. பிள்ளைங்க வேற எங்கயாவது வேலை பாத்துகிட்டு இருந்தா ஆறு மாசம் இல்லைன்னா ஒரு வருஷத்துக்கு ஒரு தரம் வந்து குடும்பத்தோட பெத்தவங்களைப் பாத்துட்டு போவாங்க. ஆனா இப்பல்லாம் ஒரு பிள்ளை அமெரிக்கா, ஒரு பிள்ளை U.K., பொண்ணைக் கட்டிக் கொடுத்தது துபாய் என்று எல்லோரும் ஒவ்வொரு ஊரில். அதனால் வயதான அப்பா அம்மாக்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ஆடாமல் அசங்காமல் மணிக்கணக்கா விமானத்தில் பயணித்துப் பிள்ளைகளை வந்து பார்த்துச் செல்கிறார்கள். வருபவர்களுக்கு அங்கிருக்கும் நாட்கள் முழுவதும் ஜெயில் வாழ்க்கை போலத்தான். வாயிற்கதவுகள் எப்போதாவதுதான் திறக்கப்படும். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு தெருவில் ரிலாக்ஸாக நடக்க முடியாது. அம்மாக்கள் குழந்தைகளோடும், கிச்சனில் சமையலோடும் நேரத்தை எப்படியோ ஓட்டிவிட, பாவம் அப்பாக்கள் படும் அவதி சொல்லி முடியாது.

”உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.
என்னைச் சொல்லிக் குற்றமில்லை” ன்னு பிள்ளைகளும்,

”சொர்க்கமே என்றாலும் அது
நம்மூரைப் போல வருமா” ன்னு பெத்தவங்களும் மாத்தி மாத்திப் பாடிக்க வேண்டியதுதான்!

சென்னை வாழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு:

(இது விளம்பரம் இல்லீங்க, ஒரு வேண்டுகோள்)

ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் பார்வையற்ற மாணவர்களுக்காக (Visually Challenged Students) தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். சென்ற நவம்பர் ஒன்றாம் தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு உதவ நீங்கள் அதிகம் படித்திருக்க வேண்டியது இல்லை. எந்த ஒரு சமூக நிறுவனத்தின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பணமும் கட்ட வேண்டியது இல்லை. இந்தத் தேர்வுகள் சத்ய சாய் சமிதி டிரஸ்ட் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

தேர்வுகள் நடக்குமிடம்: பத்மா சேஷாத்ரி பால பவன், (வித்யோதயா பள்ளி) YGP ஆடிட்டோரியம், திருமலைப் பிள்ளை சாலை, சென்னை-17.
தேர்வு நேரம்: பிரதி ஞாயிறு 10.00 முதல் 12.30 வரை.
பேருந்து நிறுத்தம்: வள்ளுவர் கோட்டம்
பேருந்து எண்கள்: 47,147,17,147, 10,9
நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே…!

நல்லாருப்போம்! நல்லாருப்போம்! எல்லாரும் நல்லாருப்போம்!

மீண்டும் சந்திக்கும்வரை
நட்புடன்
தேவிராஜன்

About The Author

9 Comments

  1. Mini

    Devirajan, Meenakshi amman koval romba reala beautifulla iruku. useful information. another useful informaiton is Visually Challenged Students exam. ungaluku oru big thanks for providing such info.

  2. DeviRajan

    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி மினி. உங்க பேரும் அழகாக இருக்கிறது.

  3. DeviRajan

    வணக்கம் சுந்தரம். உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!!

  4. sivaselvi

    Hஇ Dஎவிரஜன்,
    Tகன்க்ச் fஒர் ப்ரொவிடிங் தெசெ ட்ய்பெ ஒf உசெர்fஉல் இன்fஒர்மடிஒன். ப்லெஅசெ கேப் இட் உப்.

  5. maleek

    படித்துக்காட்டவேண்டியதை கேசட்டில் பதிவு செய்து,கொண்டு எல்லா மாணவர்களும்கேட்கும்படி செய்திருக்காலாமே.. டேப் ரிக்கார்ட்ர்களும் இப்போது
    அதிக விலை இல்லை.

  6. DeviRajan

    உங்கள் ஐடியாவிற்கு நன்றி மாலீக். என்னுடைய கருத்துக்கள்
    1. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வுதான் எழுதுகிறார்கள் என்று சொல்ல முடியாது.
    2. தேர்வுகள் என்பதால் ஒரு கேள்வி படித்துக்காட்டியதும் அவர்கள் பதில் எழுத நேரம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் டேப்ரிக்கார்டுகள் காத்திருக்க முடியாதல்லவா?
    3. தேர்வு என்றாலே சில சட்ட திட்டங்கள் இருக்கும் அல்லவா?. ஊடகங்கள் பயன்படுத்த அனுமதி இல்லாமல் இருக்கலாம்.
    4.உங்களைப் போன்று ஐடியா அய்யாசாமிகள் அங்கு இல்லாமல் இருக்கலாம்.

  7. DeviRajan

    வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி சிவசெல்வி!!!

Comments are closed.