சில்லுனு ஒரு அரட்டை

நிலாச்சாரல் வாசக பெருமக்களுக்கு என் உளங்கனிந்த வணக்கம். சென்ற அரட்டைக்கு கருத்துக்களை எழுதிய உள்ளங்களுக்கு என் நன்றிகள்.

சென்ற வாரம் என் அலுவலக நண்பர் ஒருவர் கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈசா யோகா ஆசிரமத்திற்கு சென்றிருக்கிறார். இங்கிருக்கும் தியானலிங்கத்தின் அருகில் செல்கையில் நம்மை தியான அதிர்வுகள் சூழ்ந்துகொள்கின்றன என்றார். நானும் அங்கு செல்வற்கு ஏற்கனவே திட்டம் வைத்திருந்தேன். இப்போது ஆர்வம் Lingamஇன்னும் அதிகமாகிவிட்டது. கோயம்புத்தூர் வாசகர்கள் யாராவது இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விபரமாய் எழுதலாமே! இந்த ரீதியில் ரிஷி அண்ணாச்சி எழுதிய சதுரகிரி தொடருக்கு அமோக வரவேற்பு, தெரியுமா? ஒரு வாசகர் அதனை அச்செடுத்து உள்ளூரில் விநியோகிக்க அனுமதி கூட வாங்கியிருக்கிறார். கட்டுரையைப் படிக்க:

https://www.nilacharal.com/ocms/log/10060812.asp

இப்போது உங்களுக்கு ஒரு சவால்! உங்களுடைய கவனிப்பு திறனை சோதனை செய்வதற்காக இந்த சவால். கீழே உள்ள படத்தைப் பாருங்க..

Face picture

என்ன பார்த்திட்டிங்களா! இதுல ஏதாவது தெரியுதா? ஒருவர் குதிரையில் போகுறது மட்டும்தான் தெரியுதா? இதுல சில மனித முகங்கள் பாறைகள்ல தெரியுது. நல்லா பாருங்க. இப்ப தெரியுதா? சரி இப்ப என்னன்னா, இதுல எத்தனை மனித முகங்கள் தெரியுதுன்னு கண்டுபிடிக்கனும் அவ்வளவுதான். கண்டுபிடிச்சி வையுங்க; எவ்வளவு இருக்குங்குறத கடைசில டிஸ்கஸ் பண்ணுவோம்.

இரண்டொரு நாட்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அந்த மானேஜர்க்கு தினமும் 11 மணிக்கு காபி கொடுக்க வேண்டும். என்றைக்கும் போல் வேலைக்கார பெண்மணி ஒருவர் காலையில் காபி எடுத்துக்கொண்டு வந்தார். அன்று தவறுதலாக அவரது மேஜையில் பட்டு காபி கொட்டிவிட்டது. அவ்வளவுதான்! பாம்பாய் சீறித்தள்ளிவிட்டார். அவரது கடும் வார்த்தைகளும் சுடு சொற்களும் அனைவரையும் வெறுப்படைய வைத்துவிட்டன. பொதுவாக நாம் கோபத்தில் இருக்கும்போது எது செய்தாலும் அது சரியானதாக இருப்பதில்லை. கோபத்தை சிறிது சிறிதாய்க் குறைப்பதற்கு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஒரு பயிற்சியே தந்திருக்கிறார். அதனை அப்படியே உங்களிடம் தருகிறேன்.

இன்று கோபம் கூடாது என்று உங்களுக்குள் சங்கல்பம் செய்துகொள்ளுங்கள். அதையும் மீறி கோபம் வரும். வந்தவுடன் ‘கோபம் கூடாது’ என்ற ரெட் சிக்னல் நம் கண்முன் தோன்றுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் கோபப்பட்ட பின்னரே இந்த ரெட் சிக்னல் ஞாபகத்திற்கு வரும். மீண்டும் உங்களுக்குள் சங்கல்பம் செய்துகொள்ளும்போது, இந்தமுறை கோபம் வரும்போதே ரெட் அலர்ட் உங்களிடமிருந்து வந்துவிடும். நாளடைவில் நீங்கள் கோபம் கொள்வதற்கு முன்பே இந்த ரெட் அலர்ட் உங்கள் கோபத்தை இல்லாமல் செய்துவிடும்.

நாமும் இதை இன்று முதல் கடைபிடித்துதான் பார்ப்போமே! என்ன, என் அட்வைஸ் கேட்டு கோபம் வருதா? ரெட் சிக்னல் ஸைட்ல எங்கேயாவது தெரியுதான்னு பாருங்க…

இப்ப ஒரு சின்ன ஜோக்..

ஆப்பிரிக்க காட்டுல மனிதர்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு புலி இருந்துச்சு. அதை ஆப்பிரிக்க போலிசால புடிக்க முடியல. அதனால அமெரிக்க, ரஷ்ய மற்றும் இந்திய போலிஸ்காரர்களை கூப்பிட்டாங்க. முதல் நாள் அமெரிக்க போலிஸ் காட்டுக்குள்ள போனாங்க, போன வேகத்துல புடிக்க முடியலன்னு திரும்பிட்டாங்க. அடுத்த நாள் ரஷ்ய போலிஸ் காட்டுக்குள்ள போச்சு. அவங்களும் திரும்பி வந்து முடியலன்னுட்டாங்க. அடுத்ததா, நம்ம இந்திய போலிஸ் களமிறங்கினாங்க. காட்டுக்குள்ள போய் மூன்று நாளாகியும் திரும்பாததால ஆப்பிரிக்க போலிஸ் காட்டுக்குள்ள போய்ப் பார்த்தாங்க.

அங்க ஒரு மரத்துல கரடிய கட்டி வச்சுக்கிட்டு நான்தான் புலின்னு ஒத்துக்கோன்னு அடிச்சிக்கிட்டு இருந்தாங்க நம்ம போலிஸ்!!!

Busநீங்கள் எப்போதாவது தொலைதூரப் பயணம் செல்பவர் எனில் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சென்ற வாரம் என் அலுவலக நண்பர் ஒருவர் S.E.T.C பேருந்தில் திருநெல்வேலிவரை சென்று வந்தார். அவருடைய பயணம், பயணம் மட்டுமல்ல பாடம் – அவர் பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திற்கெல்லாம் உடலில் அரிக்க ஆரம்பித்திருக்கிறது. அவரும் பொறுத்துக் கொண்டிருந்திருக்கிறார். இரவு நேரம் என்பதாலும் தூக்கக் கலக்கம் என்பதாலும் எப்படியோ ஓட்டிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது கைகளில் ஆங்காங்கே தடிப்புகள். அதன் பின்பு தன் சீட்டை உற்றுப் பார்த்தபின்புதான் தெரிந்திருக்கிறது எல்லம் மூட்டைப்பூச்சி வேலையென்று! இவருக்கு மட்டும் இந்த நிலைமை இல்லீங்க. பேருந்தில் இருந்த அனைவரின் கதையும் இதுதான். பெரும்பாலான S.E.T.C பேருந்துகள் இப்படித்தானிருப்பதாக 29/06/09 அன்று தினமலர் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். அரசு கவனிக்குமாக!

சரி.. இப்ப நம்ம கவனிப்புத் திறனுக்கு வருவோம். விடையைச் சொல்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம். இந்த படம் இப்ப வலையத்துல உலா வருகிறது என்றாலும் இது ஒரு மென்பொருள் நிறுவனத்துல நேர்முகத் தேர்வுல கேட்கப்பட்ட கேள்வியாம் இது. ஒரு இக்கட்டான தருணத்திலையும் எப்படி கவனிக்கிறாங்க, முடிவெடுக்குறாங்கங்கறத சோதிக்கிறதுக்காக கேட்கப்பட்ட கேள்வியாம்.

இதுல 6,7தாய்யா தெரியுதுன்னு சொல்றவங்கள்ளாம் கையைத் தூக்குங்க. ம்..ம்.. நீங்களெல்லாம் சராசரி மனிதர்கள். சரி.. 8,9 ன்னு சொல்றவங்க, ஓ.கே. நீங்களெல்லாம் ஓரளவு கவனிப்புத்திறன் உடையவங்கதான். 10ன்னு சொல்றவங்க, நீங்கள்லாம் எங்க போனாலும் பொழச்சிக்கக் கூடிய ஆட்கள். நல்ல கவனிப்புதிறன் இருக்கு, என்னை மாதிரி!!! சரி பதினொன்னுன்னு சொல்றவங்க, நீங்களெல்லாம் எக்ஸ்ராடினரி கவனிப்புத்திறன் உள்ளவங்க. வாழ்த்துக்கள். இப்போ 12ன்னு சொல்றவங்க, அதுக்கும் ஆள் இருக்கிங்களா! நீங்களெல்லாம் சரியான புருடா ஆசாமிகள், இதுல மொத்தமே பதினோரு மனித முகங்கள்தான் இருக்கு.

இப்போ மறுபடியும் எண்ணிப் பார்த்திட்டு இருங்க.. போயிட்டு இன்னும் நாலு வாரங்கள் கழிச்சி வர்றேன். மீண்டும் சந்திப்போம்!

அன்புடன்,
மாயன்.

About The Author

3 Comments

  1. kanmani

    படிக்க,ரசிக்க.சிந்திக்க அரட்டை பயனுள்ளதாக உள்ளது.

  2. Jothi

    என்னால ஒரு 7, 8 முகம் கண்டுபிடிக்க முடிஞ்சுது. ஆப்பிரிக்கா ஜோக் நல்லாருக்கு.

  3. mano

    11 ண்னு கரெக்டா கன்டு பிடிச்சிட்டோம்ல…..[அதனாலதான் பக்ரைன்ல வந்து பிழச்சிகிட்டேன்னு சொல்லமாட்டேன்]

Comments are closed.