சில்லுனு ஒரு அரட்டை

சங்கரம் சிவ சங்கரம்!
அனைவருக்கும் வணக்கம்.

கூட்டத்தில் நின்னு கை தட்டிட்டு, அப்பப்போ நானும் இருக்கேனு சொல்லுவதற்காக பின்னூட்டம் எழுதிட்டு இருந்த என்னை உங்க முன்னாடி கூட்டிட்டு வந்த நிலா அவர்களுக்கும் என்னோட அரட்டை வகுப்பறை சீனியர்களான காயத்ரி, சொர்ணா, ரிஷிகுமார், ஜோ, அனாமிகா, கவிதா, மாயன் அவர்களுக்கும் என் முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவிச்சுக்கிறேங்க.

என்ன ஆரம்பமே பெரிய பில்டப்பா இருக்குனு நீங்க சொல்றது கேட்குதுங்க. இதுல ஒரு பெரிய ரகசியம் இருக்கு (யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க). எப்பவுமே பெரியவங்களை (சீனியர்சை) முதலிலேயே பணிஞ்சிட்டோமுனா (நம்ம பாஷையில் ‘சரிகட்டிட்டோம்னா’!), பிறகு நம்மள மாதிரி (சரிங்க.. என்ன மாதிரி!) கூட்டத்தில் நின்னு சத்தம் கொடுக்காம, பின்னாடி இருந்து பேக்அப் சப்போட் கொடுப்பாங்கள்ல.. அதுக்குதான்.

நீங்ககூட இத கல்லூரியில, வேலை பார்கிற இடத்தில முயற்சி பண்ணி பாருங்க. ரிசல்ட் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தா அடிக்க வராதீங்க ப்ளீஸ்…

இப்படிதாங்க ஒரு முறை (ஹி..ஹி..பல முறை!) வீட்டுல நான் ஒரு சின்ன தப்பு பண்ணிட்டு, அழுதிட்டே (இல்லைன்னா நம்ப மாட்டாங்க!) அக்கா, அண்ணனை நோக்கி கோள் மூட்ட கை நீட்டுனப்போ வழக்கம் போல மாட்டிகிட்டேன்! அம்மா, "எப்போதும் மற்றவங்களை நோக்கி ஒரு விரலை நீட்டும் போது, மற்ற நாலு விரலும் உன்னை காண்பிக்குங்கிறதை மறந்துராதே"னுட்டாங்க.

எதைச் செய்தாலும் அதுல ஒரு தனித்துவம் இருக்கணும்னு பெரியவங்க சொன்னதால, நானும், நம்ம நண்பர்கள் கூட்டமும் சேர்ந்து பல நாள் யோசிச்சு மேதாவித்தனமா இனிமே கோள் மூட்டும் போது பத்து விரலையும் நீட்டித்தான் சுட்டிக் காட்டணும்னு முடிவு பண்ணினோம் (இப்படி தனித்துவத்தோடு யோசிக்கிறதை ஏங்க பெரியவங்க சொல் பேச்சு கேளாமைன்னு சொல்றாங்க!?)

இந்த காலத்துப் பசங்களே இப்படித்தான்னு அலுத்துக்கிற பெரியவங்களே கொஞ்சம் இதைப் பாருங்க:
http://www.youtube.com/watch?v=TQmz6Rbpnu0&feature=related

அந்த குழந்தை மாதிரி பொறுப்பா உங்க குழந்தையும் வளர நம்ம சித்ராவோட குழந்தை வளர்ப்பு படிங்க:

https://www.nilacharal.com/ocms/log/01050910.asp

பெரியவங்கன்னு சொல்லும்போது ஒருத்தரைப் பற்றி கண்டிப்பா சொல்லணும்ங்க. தலைவர் அப்படினா, "வழி நடத்துவார், மற்றவங்க அவரைப் பின்பற்றுவாங்க" அப்படித்தானே! ஆனா நம்ம சம்ரட்சணா குடும்பத்தோட தலைவர் சிவசங்கரபாபா சொல்றார், "என் கூட நடந்து வா, என் அனுபவங்களை உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன், உனக்குப் பிடித்ததை எடுத்துக் கொண்டு, உனக்கு உன் வழி தெரிந்தவுடன் உனக்கான பாதையில் போ"ன்னு. இந்த மாதிரி உயர்ந்த தலைமைப் பண்புள்ள, உங்களுக்குத் தெரிந்த பெரியவங்களை பற்றிய விஷயங்களை எங்களுக்கும் தயவு கூர்ந்து சொல்லுங்க.

அவரைப் பற்றியும் அவரது தொண்டு நிறுவனத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள நிலாஷாப்பிங் போகலாமே!

http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=642

இவர் சமீபத்தில் மற்ற நாடுகள்ள இருக்கிற அவரது குடும்பத்தினரை சந்திச்சிட்டு வந்த அனுபவத்தை பகிரும் போது சொன்னதுங்க, "ஜெர்மனி நாட்ல இஞ்ஜினியரிங் மற்றும் மருத்துவம் படிக்க, பன்னிரெண்டாம் வகுப்பில் 60 விழுக்காடு மதிப்பெண் மற்றும் ஜெர்மனி மொழி புலமைக்கான சான்றிதழ் படிப்பும் போதுமானது. வேறு தனி தேர்வு எதுவும் தேவை இல்லை."

அந்த நாட்டு கல்வி தரமானதாக இருப்பதாக அங்க படிச்ச நண்பர்களும் சொல்றாங்க. இந்தியாவில 60 விழுக்காடு எதுக்குமே உதவாது இல்லையா?

இன்னைக்கு ஆராய்ச்சி மேற்படிப்புக்காக கடல் தாண்டி வந்து இருக்கிற இயற்கை அழகு நிறைந்த ஆஸ்திரேலியா கண்டத்தில் என்னைக் கவர்ந்த சிலவற்றையும் உங்ககிட்ட சொல்லணுங்க.

Australia
ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கு முனைப் பகுதி

தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ பார்க்கும்போதே, அது காலையானாலும், மாலையானாலும் ஒரு இனிமையான புன்னகையோடு, “எப்படி இருக்கிற? இந்த நாள் எப்படி இருந்தது?” அப்படின்னு கேட்கிற வாடிக்கையாளர் உபசரிப்பு, ஒரே ஒரு பொருள் அல்லது எதுவுமே வாங்காவிட்டாலும், அதே புன்னகையோடு மீண்டும் சந்திப்போம்ன்னு சொல்லும் போது, நம்ம ஊருல, பெரும்பாலும் பண்டிகை நேரத்தில் அல்லது தள்ளுபடி காலங்கள்ல ஒரு பொருளை விலை கேட்டுட்டு வாங்காம போற மக்களுக்கு கிடைக்கிற மரியாதையை நினைச்சிப் பார்த்தேங்க. (விருந்தோம்பல் எங்கள் பாரம்பரியத்தின் தலையாய பண்பு – இது வெறும் பாட புத்தக விஷயமாக போயிடுமோன்னு கொஞ்சம் கவலையா இருக்குங்க).

இப்படித்தான், பல்கலைக்கழகத்தில ஒரு நாள் காபி குடிக்க என் கணவர் தானியங்கி காபி தயாரிக்கும் இயந்திரமுள்ள ஒரு கடைக்குக் கூட்டிட்டுப் போனார். அங்க பணம் கொடுக்க வரிசையில நிற்கும் போது பக்கத்தில அடுக்கி வைச்சிருந்த கைபேசியை (நம்ம கைபேசி வேற ஒரு வாரமா வேலை செய்யலை) வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன். ஒருத்தர் வந்து, வழக்கமான உபசரிப்போடு, அதை பத்தின விவரங்களை சொல்ல ஆரம்பிச்சார். சரி, வரிசை நகர்ற வரை கேட்போம்ன்னு கேட்க ஆரம்பிச்சதுல அவரது வாடிக்கையாளர் உபசரிப்பு நம்மள புதுசு ஒண்ணு வாங்க வைச்சிடுச்சுங்க. (இப்ப கொஞ்ச நாளா நான் ஏதாவது ஒரு புது பொருள் வாங்கப் போனா எனக்குள்ள இருக்கிற ஹேமா தொண, தொணன்னு ஒரு கேள்வி கேட்டு குழப்புறாங்க, இதை அவசியத்தின் பேரில (need) வாங்குறியா, அல்லது விருப்பத்தின் பேருல வாங்குறியான்னு (want)? சாய்ஸ் இல்லாத மிகக் கடினமான (கொடுமையான?!) கேள்வி இல்லீங்க!?

சரிங்க, விடை பெற நேரம் வந்துட்டது. மீண்டும் ஒரு குளுமையான அரட்டையில் உங்கள் அனைவரையும் சந்திக்கிற வரை நம்ம ரிஷிகுமாரோட மண் வாசனை கலந்த நகைச்சுவை பிட்ஸ் படித்து சந்தோசமா இருங்க.
https://www.nilacharal.com/ocms/log/10060809.asp

நன்றி!

About The Author

8 Comments

  1. Rishi

    ஹேமா
    ஆஸ்திரேலியா படம் சூப்பர்.
    உங்கள் தனித்துவ சிந்தனை வாழ்க!

  2. Rishi

    ஹேமா
    ஆஸ்திரேலியாவுல அன்போட உபசரிக்கிறாங்களா? போட்டுத் தாக்குறாங்களாமே!!
    இல்ல.. ஏதோ ஒரு பகுதியில மட்டும்தான் அந்த மாதிரியா?

  3. Dr. S. Subramanian

    >>இந்தியாவில 60 விழுக்காடு எதுக்குமே உதவாது இல்லையா?

  4. maleek

    நீதி:கூட்டத்தில் முன் வரிசையில் நின்றுக்கொண்டு வேடிக்கைப்பார்ப்பது
    ஆபத்தில் முடியும்!

  5. R.V.Raji

    வாங்க ஹேமா… வாங்க!!
    நீங்க பயங்கர கில்லாடிதான்…
    வீட்டில நீங்கதான் கடைக்குட்டியோ?
    ரொம்ப கலாட்டா பண்ணுவீங்க போலிருக்கே…
    வருகைக்கு நன்றி!… வந்துக்கிட்டே இருங்க….

  6. Vaanambadi

    இது அரட்டை இல்லை. உளறல். அரட்டை அடிக்கும் போது தேவைஇல்லாத வெப் சைட் சொல்லி மனசை வழி மாற செய்ய கூடாது. (வெப் சைட் தேவைதான் ஆனால் அரட்டை அடிக்கும்போது தேவை இல்லை). வெப் சைட்டை கிளிக் பண்ணினால் அரட்டை கம்ளீட் ஆகாது. என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

    வானம்பாடி

  7. R.V.Raji

    இது உளறல் இல்லை வானம்பாடி!.அரட்டை…
    மற்ற வெப்சைட்டை பார்க்கிறது தப்பில்லையே…
    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு”ன்னு கேள்விப்பட்டிருக்கோமே..
    மற்ற வெப்சைட்டை பார்த்தபிறகு இதை மறந்திடும் அளவுக்கு நம்ம ஹேமாவுடைய அரட்டை ஒன்னும் மோசமில்லையே….
    ஏன் நீங்களும், நானும் முழுசா படிச்சிட்டுதானே நம் கருத்துக்களை எழுதியிருக்கோம்?.. உங்க கருத்தை நான் தப்பு சொல்லலை.
    என் கருத்தில் தவறு இருந்தாலும் மன்னிக்கவும்!. ப்ளீஸ்..”

  8. Rishi

    நீதிக்கு நீதி : பின் வரிசையில் நின்று கொண்டு சவுண்டு கொடுத்தாலும் முன்னாடி இழுத்து விடுவோம்!!!

Comments are closed.