சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ everybody,

நான் தாங்க நிலாச்சாரலோட ‘சில்லுனு ஒரு அரட்டை’யின் 2nd innings மூலமா உங்களோட பேசலாம்னு வந்திருக்கும் யஷஷ்வினி (சுருக்கமா சொன்னா ‘யஷ்’). நிலா MT எழுத ஆரம்பிச்சப்புறம் நம்ப viewers எல்லாரும் தங்களுடைய எண்ணங்களை மடை திறந்த வெள்ளமா பகிர்ந்துக்கறதை பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோரும் நலமோடும், வளமோடும் எப்பவுமே வாழனும்ங்கறது என்னுடைய விருப்பம் .

போன வாரம் ‘மடை திறந்து’ (MT) படிச்சுட்டு என்னோட கால் தரையிலேயே இல்லைங்க. Red Bull adல வருமே அது மாதிரி wiiiings வந்து கன்னாபின்னான்னு பறக்க ஆரம்பிச்சுட்டேன். ‘போதும் யஷ் ரொம்ப பறக்காதே  கீழ வா கீழ வா’ன்னு என்ன நானே control செய்ய வேண்டியதா போச்சு. Jokes apart. உண்மையா படிச்சுட்டு கொஞ்ச நேரம் வார்த்தைகளே வரலை. என்னடா இது monitorல எதுவும் சரியா தெரியமாட்டேங்குதேன்னு யோசிச்சப்போ தான் என்னையும் அறியாம நான் அழுதிருக்கேன்னு புரிஞ்சுது. ‘நன்றி’ங்கற அந்த ஒரு வார்த்தையை தவிர நிலாவுக்கு எங்கிட்ட சொல்ல வேற எதுவுமே இல்ல. முந்தின நாள் நிலாகிட்ட Google Talkல voice chat, அடுத்த நாள் நிலாவோட MT. ஹூம்… யஷாவுக்கு ‘கோடையில் ஒரு கொடை மழை’.

நடக்கறது கனவா இல்ல நிஜமானே தெரியலை போங்க. 2010 மே வரை officeல ஜாலியா அல்லி ராஜ்யம் நடத்திட்டு இருந்த என்னை தர தரன்னு (கொஞ்சம் அதிகமாயிடுச்சோ? ) இழுத்துட்டு வந்து கல்யாணம் செய்து வெச்சுட்டாங்க. கதையில இப்படி எல்லாம் twist இல்லேனா bore அடிக்குமே. அதுக்குதான் இப்படி buildup கொடுக்க வேண்டியதா இருக்கு. என்ன வாழ்க்கைடா? (Very sorry சிம்பு. உங்க டயலாக்கை கொஞ்சமா சுட்டுட்டேன்.) ம்… அப்புறம்.. இப்படி எல்லாம் நீங்க சொன்னாதான் கதை சொல்ல எனக்கும் தோதாயிருக்கும். அடுத்து என்ன ஆச்சுன்னா, நம்பள மாதிரியே நம்ம ஆத்துக்காரரும் ITல work பண்றாரு. 2 மாதம் கயித்து மேல dance மாதிரி ஆடிப் பாத்து இனிமேலும் வேலைக்கு போகறது சரியா வராதுன்னு கால் கடுதாசி குடுத்துட்டேன். ஒரு மனுஷன் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கறது 3 வேளை சாப்பாடு அப்புறம் கொஞ்சம் தூக்கம். இதுகூட இல்லேனா என்ன வாழ்க்கை சொல்லுங்க? என்ன வேலைக்கு போகாததால வந்த ஒரு சின்ன பிரச்சனை 100% VO (அதுதாங்க Vetti Officer) ஆனது. எவ்வளவு தான் மெதுவா செஞ்சாலும் எல்லா வேலையும் 11amக்குள்ளே முடிச்சுட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம திரு திருன்னு முழிக்கறேன். ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சு கண்டுபிடிச்சதுதான் நிலாச்சாரல்ல volunteer செய்யலாம்ங்கறது. ‘நிலாச்சாரல்’ ஏற்கனவே ரொம்ப சூப்பரா போயிட்டுருக்கு பெருசா நாம்ப என்ன செய்ய முடியும்னு ஒரு doubtல தான் ‘நேயம்’ மூலமா எடிட்டரம்மாகிட்டே விண்ணப்பம் போட்டேன். அவங்க ஏதோ நல்ல மூடுல இருந்ததால சரின்னு ஒத்துக்கிட்டாங்க. இப்போ ஏண்டா சரின்னு சொன்னோம்னு ரொம்ப feel பண்றாங்க. அதுவும் நம்ம நண்பர் KP நிலைமை இன்னும் மோசம். ஒரு வேலை சொன்னா ஒன்பது கேள்வி (சந்தேகம் தான்) கேட்டு தொல்லை பண்றேன். ‘ஆரம்பமே இப்படீனா இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு என்னவெல்லாம் கேள்வி வருமோ’ன்னு தலைவர் கவலைப்படறது எனக்கு புரியுது. கொஞ்ச நாள் பொறுத்துகோங்கன்னா அப்புறம் உங்களை disturb பண்ணவேமாட்டேன் .

நிலா ‘Lotus Blind Ashram’ பத்தி எங்கிட்ட சொன்னப்போ எனக்கு உடனே என்னால முடிஞ்சதை செய்யனும்னு தோணினதுக்கு காரணம் 2 நாள் முன்னாடி CNN-IBNல நான் பார்த்த ஒரு news. பலரும் அதை பார்த்திருந்தாலும், விடுபட்ட சிலருக்காக சொல்றேன். புது தில்லியை சேர்ந்த 52 வயதான ப்ரீத்தீ மோங்கா(Preeti Monga) ஒரு Placement கம்பெனியின் successful முதலாளி. அது மட்டுமில்லாம இவங்க ஒரு சிறந்த பேச்சாளர், பகுதி நேர தன்னார்வலர் இன்னும் இப்படி எத்தனையோ. தனக்கு பார்வை இல்லேங்கறதை Jet Airwaysல பயணம் செய்யும் வரை அவங்க ஒரு குறையாவே நினைச்சதில்லையாம். பார்வை இல்லைங்கற ஒரே காரணத்துக்காக மட்டுமே அவங்க அதுல பயணம் செய்ய முடியாதுன்னு சொல்லி இருக்காங்க. இப்படி நடக்கறது முதல் முறை இல்லை, தனக்கும் இதே மாதிரி Kingfisher airlinesல பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருக்குனு சொல்றாங்க ஷப்னம் (ரெண்டு குழந்தைகளுக்கு தாய் அவங்க). நம்ம இந்திய Civil Aviation சட்டங்கள் என்ன சொல்லுதுன்னா ஒரு நபர் தன்னுடைய பயணத்துக்கான ticket பதிவு செய்யும்போது தன்னுடைய உடல் குறைகளைப் பத்தி தெரியப்படுத்தி இருக்கும் பட்சத்துல அவங்களுடைய பயணத்தை யாருமே தடை செய்ய முடியாதாம். ஆனா இதை எந்த ஒரு airlinesம் follow செய்றதில்லைங்கறதுதான் நிதர்சனமான உண்மை. அடுத்த நாள் புது தில்லி மற்றும் மஹாராஷ்டிர அரசு இளைஞகர்களின் மது அருந்தும் வயதை 21லிருந்து 25ஆக உயர்த்தியதை எதிர்த்து ‘Time Now’ நடத்தின campaignல ஹிந்தி நடிகர் Imran khan கலந்துட்டு தானும் இதை எதிர்க்கறதா சொல்லியிருக்காரு. ஒரு சக மனுஷியின் உரிமை மறுக்கப்படுறதை எதிர்த்து போராடுறதுக்கு முக்கியத்துவம் தராம அனாவசியமான மத்த விஷயங்களுக்காக தரப்படுதுன்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமாயிருக்கு.

OK. Topic change. Photos எடுக்கறதுன்னா அவ்வளவு இஷ்டம் எனக்கு. சும்மாவே Cameraவும் கையுமாதான் சுத்துவேன். என்னோட கணவருக்கும் camera, photosல இண்டெரெஸ்ட் இருக்கறதால problemமே இல்ல. நான் எங்கயாவது photo எடுக்காம விட்டா கூட அவர் விடமாட்டாரு. எங்கேயாவது வெளில போகும் போதுதான் photos எடுக்கனும்ங்கற என்னோட policy. நாம இருக்கற இடம், நம்ம சுத்தி இருக்கற விஷயங்களையும்கூட அழகா photo எடுக்கலாம்ங்கறதை அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். ஒரு நாள் எங்க வீட்டு வாசல்ல இருக்கற செடிகள்ல dew drops இருந்தது. விட்டேனா பாருன்னு அதை photo எடுத்தேன். என்னோட கணவர் எதையுமே, யாரையுமே அவ்வளவு சீக்கிரம் பாராட்டிட மாட்டாரு. ஆனா அவரே ‘பரவாயில்லையே’ன்னு சொன்னாருன்னா பாத்துக்கோங்க.  (வசிஷ்டர் வாயால ப்ரம்மரிஷி பட்டம் வாங்கின effect) அந்த Photos தான் இங்க அட்டச் பண்ணி இருக்கேன். எப்படி இருக்கு? ஏதாவது தேறுமான்னு பார்த்து சொல்லுங்க.

    
     

ரொம்ப நாளாவே கம்பராமாயணம், மஹாபாரதம் இதிகாசங்கள் வாங்கி படிக்கனும்னு நம்பள்கி ரொம்ப ஆசைபடறான் (என்ன பாஷை இது? thinkங்க thinkங்க). எப்போ இதை எங்க வீட்டுல சொன்னாலும் எல்லாரும் சொல்ற ஒரே dialogue "இராமாயணம், மஹாபாரதம் கதை உனக்கு தெரியாதா? இதுக்கு காசு செலவு செஞ்சு படிக்கனுமா"ங்கறதுதான். (ஏன் உங்களுக்கும் கூட அப்படி தோணுதா?). பொறுத்து பொறுத்து பார்த்து இதுக்கு பதில் சொல்றதுன்னு முடிவு செஞ்சேன். என்னோட கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு சொன்னேன். மஹாபாரதத்துல வரும் சகுனி, காந்தாரியோட சொந்த தம்பி. அப்படி இருக்கும் போது அவரே கௌரவர்கள் இறந்து போக காரணமா இருந்தது எதனாலேன்னு கேட்டேன். எல்லாரும் ஒவ்வோரு பதில் சொன்னாங்க ஆனா எதுவும் சரி இல்லை. அப்புறமா நான் சரியான பதில் சொன்னேன். இந்த மாதிரி சின்னச் சின்ன கிளை கதைகள் தெரிஞ்சுக்கறதுக்குதான் இதிகாசங்கள் வாங்கி படிக்க ஆசைப்படறேன்னு சொன்னேன். பதிலும் சொல்லி காரணமும் நியாயமயிருந்ததால யாரேலயும் மறுக்க முடியல. எந்த கேள்வியும் கேக்காம books வாங்கி குடுத்துட்டாங்க. உங்கள்ல யாருக்காவது பதில் தெரியுமா? தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க. (பதில் சரியா இருந்தா என்ன கிடைக்கும் தெரியுமோ? அது suspense) இல்லேன்னா நான் அடுத்த முறை எழுதும்போது சொல்றேன். இதே மாதிரி நிலாச்சாரல்லேயும் கதை இருக்கு தெரியுமா? தெரியாதவங்க இங்க படிங்க. தெரிஞ்சவங்க மறுபடியும் படிக்கலாம் தப்பில்லே.
https://www.nilacharal.com/ocms/log/01041018.asp

கடைசி கட்டி மாம்பழத்துக்கு எப்பவுமே மவுசு ஜாஸ்த்திதான் இல்லையா. அப்படி ஒரு விஷயம் தான் இது. உப்புமான்னாலே எங்க வீட்டுல அப்படி ஒரு இளக்காரம். அது ஒரு tiffinஆ அப்படி இப்படீன்னு ஏகப்பட்ட கிண்டல். மத்தவங்களுக்கு எப்படியோ மழை பெய்யும் போது எனக்கு முதல்ல நியாபகம் வர்றது உப்புமாதான். (சரியான சாப்பாட்டு ப்ரியை) யார் என்ன சொன்னாலும் அதுக்காக நான் கவலைப்பட்டதேயில்ல. அந்த உப்புமாவுக்கு இப்போ கூடுதல் அங்கீகாரம் கிடைச்சிருக்குங்கோ! அமெரிக்க வாழ் இந்தியர் Floyd cardoz washingtonல் நடந்த Top chef masters நிகழ்ச்சில நம்மளோட simple சேமியா உப்புமா செய்தது மட்டுமில்லாம, வெற்றியோட $100,000 பணமும் ஜெயிச்சிருக்காரு. நீங்களும் உப்புமா ப்ரியராயிருந்து யாராவது கிண்டலடிச்சா அவங்ககிட்ட இந்த செய்தியை கண்டிப்பா சொல்லுங்க. அதுக்கப்புறம் யாராவது பேச முடியும்? கப்சிப் கபர்தார். (நிறைய புரியாத பாஷையாவே use பண்ற யஷ் ரொம்பவே மோசம்)

சரி மறுபடியும் சந்திக்கறவரை எல்லோருக்கும் Tata Bye Bye See you…

About The Author

10 Comments

  1. Hari

    First of all my best wishes for Yash for her new venture. I read this article in between my loaded office work and it gives chill & refresh to me. Nice & Jolly articles. Keep on going with the same flow. Hats of U.

  2. குமார்

    அது சரி அம்மணியம்மா, நிலாசாரல் ஆர்ட்டிகில்ஸ்ல இங்கிலீஸ் வார்த்தையே பார்த்ததில்ல, நீங்க மூச்சுக்கு முண்ணுறு வார்த்த இங்…ஆ வருது. எல்லாத்தையும் தமிழ்லையே சொல்லலாமே அரட்டையா இருந்தாக்கூட!

    ம்ம்ம்…அப்புறம் சுதந்திரப் பறவையா ஆயிட்டீங்க……வாழ்த்துக்கள்!

  3. கலையரசி

    ’சில்லுன்னு ஓர் அரட்டை’ என்கிற தலைப்புக்கேற்றாற் போல சில்லுன்னு பனித்துளிகள் உருண்டோடும் பச்சிலைகளைப் புகைப்படம் எடுத்து இணைத்தற்கு யஷ்ஷுக்கு ஓர் ஓ போடலாம். பாராட்டுக்கள் யஷ்!

  4. maleek

    மரங்களை நேசித்துப்பாருங்கள்
    நீங்கள் பூத்து விடுவீர்கள்..என்று கவிதை சொல்வார் ஈரோடு தமிழன்பன்.
    இலைகளே நீங்கள் தான் எத்தனை அழகு என்றேன்,அதற்கு அவைகள்
    சும்மாவா தமிழகத்தையே மாத்திட்டோம்ல” என்றது.(புரியாத
    பாஷை…..பரவாஇல்லை,கேட்காத புதிய பெயர்..வாழ்த்துக்கள்)”

  5. Yash

    என்ன செய்யறது சாரே ITல வேலை செய்ததால வந்த வம்பு இது. ஏதோ நம்ப யஷ்தானேன்னு கண்டுக்காம விட்டுடக்கூடாதா?

  6. கீதா

    உற்சாகமாய் எழுதும் யஷஷ்வினிக்கு என் வாழ்த்துகள். பனித்துளிகளும் பங்கெடுத்துக்கொண்டதில் ரொம்ப சந்தோஷம். உப்புமா செய்தி உண்மையில் இனித்தது.

  7. Janani

    வருக வருக! அபாரமான ஆரம்பம். களை கட்டுது. நடத்துங்க

  8. maithreyi

    ஸகுனிக்குப் பதவி ஆசை!! வேரென்ன? ஆத்தன் பர்கிரொமெ Tகமில் ணடு பொலிடிcசில்

Comments are closed.