சென்ரியு கவிதைகள்

நாற்காலி ஆசை
யாரைத்தான் விட்டது…
நாற்காலியில் பொம்மைகள்

கர்த்தர்
நம்மைக் காப்பாற்றுவார்…
சிலுவையில் கர்த்தர்

எப்பொழுதும் அலங்காரத்துடன்
வாழ்கிறார்கள் திருநங்கைகள்…
சாயம் போன வாழ்க்கை

ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாணவனின் மனதில்…
மரம் வெட்டும் தந்தை

தமிழ் நாட்டில்
சாதிக்கவும் தடை
சாதி

அகதிகள் முகாம்
அடிக்கடி வந்து வெறுப்பேற்றும்…
மண்வாசனை

About The Author

4 Comments

  1. kumar

    னஙவது பாரா நல்லா இருக்கு.. சாதியினால் சாதிக்க தடை எல்லாம் எதுகை மோனைக்காக மட்டும் வருது.. நல்ல எழுத ரொம்ப வரிகல் தேவை இல்லை

  2. மாமதயானை

    நேற்று
    பிறந்த குழந்தையின்
    பிஞ்சு விரல்களின்
    மென்மையை
    தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்…..
    உன் வார்த்தைகளில்

  3. manisen37

    வணக்கம் குமார் அவர்களே
    ஹைக்கூ இயற்கையைப் பற்றிப்பாடுவது
    சென்ரியூ மானுடத்தைப் பற்றிப்பாடுவது
    தங்கள் கருத்திற்கு நன்றி மாமதயானை

Comments are closed.