ஜோதிடம் கேளுங்கள்

என் திருமணம் எப்போது நடைபெறும்? நல்ல குணமும், அழகும் நிறைந்த மனைவி அமையும் அமைப்பு என் ஜாதகத்தில் உள்ளதா? – அ.ரா.சுதாகர், கோபிசெட்டிப்பாளையம்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் சுதாகர் அவர்களே!

27 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் விருச்சிகம் ஆகும். தற்போது 7-ம் அதிபதியான சுக்ரனின் திசை நடைபெறுகிறது. இது திருமண பாக்கியத்தை நல்கும் காலம். தங்களின் லக்ன அதிபதியான செவ்வாயை வழிபட்டு வாருங்கள். திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் கை கூடி விடும். தங்களின் ஜாதகத்தில் 7-ம் இடமான களத்திர வீட்டைக் குறிக்கும் சுக்ரன், ஆசைகளை நிறைவேற்றக் கூடிய 11-ல் இருப்பதால், தாங்கள் விரும்பியபடியே அழகும், குணமும் உள்ள மனைவி அமைவார்.

*****

எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன. எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்? – ராமச்சந்திரன்.

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. ராமச்சந்திரன் அவர்களே!

31 வயதாகும், தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் துலாம் ஆகும். புத்திர பாக்கியத்தை நல்கும் 5-ம் அதிபதியான சனியின் புத்தி தங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் புத்திரக் காரகனாகிய குருவும், மே மாதம் முதல் தங்களின் 5-ம் வீட்டில் அமர்வதால், ஆறு மாத காலத்திற்குள் புத்திர பாக்கியம் கிட்டும். வியாழக்கிழமை தோறும் குருவை வழிபட்டு வருவதுடன், அபிராமி அந்தாதியில் "ககனமும் வானும் எனத் தொடங்கும் 65 வது பாடலைப் படித்து வாருங்கள். குழந்தைச் செல்வம் விரைவில் கிட்ட நிலாச்சாரல் தங்களை வாழ்த்துகிறது.

*****

நான் எந்த வேலையில் அல்லது தொழிலில் ஈடுபட வேண்டும்? – சிவகணேசன், புதுச்சேரி

அன்பு நிலாச்சாரல் வாசகர் திரு. சிவகணேசன் அவர்களே!

40 வயதாகும் தங்களின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம், லக்னம் கடகம் ஆகும். தங்களின் நட்சத்திரம் புதனின் சாரத்தில் இருப்பதால், தாங்கள் தங்கள் திறமை மற்றும் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தும் கணிதம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வெற்றியும், நல்ல பெயரும் பெறலாம்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

1 Comment

Comments are closed.