ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு ஏற்பட்ட வீண் பழி எப்போது போகும்? நல்ல காலம் எப்போது பிறக்கும்? – ஆர்.மாயா, கண்டி, ஸ்ரீலங்கா.

அன்பு நிலாச்சாரல் வாசகி மாயா அவர்களே!
42 வயதாகும் தங்களின் நட்சத்திரம் பூராடம், ராசி தனுசு, லக்னம் துலாம் ஆகும். தங்களின் ஜாதகத்தில், கோச்சார குரு டிசம்மர் மாதம் முதல் தங்களின் பூர்வபுண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்து அருள் பாலிப்பார். இந்த கால கட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட வீண்பழி போவதோடு, நல்ல காலமும் பிறக்கும். தங்களுக்கு வளமான வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

******

எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? என் கணவருடன் நான் எப்போது சேர்ந்து வாழ்வேன்? இரு பெற்றோர்களும் எங்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள் – அனிதா, வேலூர்.

அன்பு நிலாச்சாரல் வாசகி அனிதா அவர்களே!
29 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்ராடம், ராசி மகரம், லக்னம் மீனம் ஆகும். கோசார ரீதியாக அஷ்டமச் சனி என்ற நிலை செப்டம்பர் மாதம் முதல் மாறுவதால், இதற்குப் பிறகு தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தங்களுடைய ஜாதகத்தில் சந்திரன் 11-ம் இடத்தில் வலுவாக இருப்பதால், தாங்கள் திங்கள் கிழமை தோறும் சந்திர பகவானை வழிபட்டு வருவதோடு, வியாழக்கிழமை தோறும் தங்கள் லக்னாதிபதியான குருவை வழிபட்டு வாருங்கள். தங்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். தாங்கள் வளமான வாழ்க்கை பெற, நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

வாழ்வில் பொருளாதார ரீதியாக எப்போது நான் நல்ல நிலை பெறுவேன்? – மகாராஜன், நாகர்கோயில்

அன்பு நிலாச்சாரல் வாசகர் மகராஜன் அவர்களே!
33 வயதாகும் தங்களின் நட்சத்திரம் மூலம், ராசி தனுசு, லக்னம் விருச்சிகம் ஆகும். தங்களின் லக்னாதிபதியான செவ்வாயை செவ்வாய்க்கிழமைதோறும் வழிபட்டு வாருங்கள். 2010 தமிழ்ப்புத்தாண்டுக்குப் பிறகு தங்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தங்களின் மனம் போல் வாழ்க்கை அமைய நிலாச்சாரலின் வாழ்த்துக்கள்.

*****

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

சித்தாந்த நன்மணி. திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc.P.G. Dip.in Journalism
ஜோதிடர், எண். 8, இரண்டாவது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி-605004.
தொலை பேசி: 0413-2202077.
செல்: 99432-22022, 98946-66048, 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author