ஜோதிடம் கேளுங்கள்

எனக்கு ஏப்ரல் 23, 2007 இல் திருமணம் நடந்தது. ஆனால் இப்போது என் திருமண வாழ்க்கை நிறைவாக இல்லை. எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்? வருங்காலத்தில் என் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? இல்லையேல் விவாகரத்தில் முடியுமா? என் கணவரின் நட்சத்திரம் சுவாதி, ராசி துலாம். அவர் 26.11.1970 இல் பிறந்தவர். – சித்ரா, சென்னை

அன்பு நிலாச்சாரல் வாசகி சித்ரா அவர்களே!

தற்போது 35 வயது ஆகும் தங்களின் நட்சத்திரம் உத்திரம், ராசி சிம்மம், லக்னம் மகரம் ஆகும். ஜாதகப்படி, குரு லக்னத்தில் இருந்து எப்போதும் 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பதால் தங்களின் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். கோசார ரீதியாக, தற்போது சுபகிரகமான குரு தங்கள் ராசியிலிருந்து 5-ம் இடத்திலும், லக்னத்திலிருந்து 5, 7, 9-ம் வீடுகளைப் பார்ப்பதால், டிசம்பர் 2009க்குள் புத்திர பாக்கியம் கிட்டும். தாங்கள் மகர ராசியைச் சேர்ந்தவராதலால், உங்களுடைய கருத்துக்களை விட்டுக் கொடுக்காமல் ஆணித்தரமாக எடுத்துச் சொல்வீர்கள். மாறாக, கருத்துக்களை எடுத்துச் சொல்வதில் இதமான அணுகுமுறையை மேற்கொண்டால், வாழ்க்கை வசந்தமாகும். தங்களின் கணவர் பிறந்த தேதியன்று அவரின் ராசியில் குருவும் சந்திரனும் இணைந்திருப்பதால் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

*****

எனது காதல் திருமணத்தில் முடியுமா? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? – இந்துசன், முல்லைத்தீவு

அன்பு நிலாச்சாரல் வாசகர் இந்துசன் அவர்களே!

தற்போது தங்களுக்கு 25 வயது ஆகிறது. உங்களின் ராசி மீனம், நட்சத்திரம் உத்திரட்டாதி, லக்னம் மேஷம். தங்களின் திருமணம் காதல் திருமணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறிது காலதாமதத்திற்குப் பின் திருமணம் கை கூடும். மனம் தளர இடம் கொடாமல் உறுதியாக இருந்து செயல்பட்டால் தங்களின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.

*****

நான் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் +2வரை படித்துள்ளேன். எனக்கு ஏதேனும் நல்ல வேலை கிடைக்குமா? அல்லது திருமணம் செய்வது நல்லதா? – திவ்யா சரண்யா, மதுரை

அன்பு நிலாச்சாரல் வாசகி திவ்யா சரண்யா அவர்களே!

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மிதுன லக்னத்தை உடைய தங்களுக்கு தற்போது 20 வயது ஆகிறது. தங்களின் ஜாதகப்படி, காதல் திருமணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. தங்களுக்கு தற்போது சனி தெசை சுக்ர புக்தி நடைபெறுவதால், தங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வேலையில் அமர்ந்து, வாழ்வு சிறக்க நிலாச்சாரல் உங்களை வாழ்த்துகிறது.

*************************

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

******************

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author