திருவாதிரை

அய்யன் ஆத்தாளுக்குச்
சோறு படைச்சு
கூரை மேல கொஞ்சம்
விட்டெறிஞ்சா நாள்
முழுதும் "காக்கா"
வீட்டச் சுத்திக்
காவல் காக்கும்.

மெச்சு வீட்டுக்காரி
கொடுத்தனுப்பின
மஞ்சக்கயித்த மாத்திக்
கட்டச் சொல்லி
கோவிச்சுக்குவா
எனக்கு வாய்ச்சவ-
வருசம் ஒரு தடவ
எங்களுக்கும் கல்யாணம்.

களிய இறுகக் கிண்டி
நடராசனுக்குப்
படையல் போட்டு
வயிறு முட்டத்
தின்னு செரிப்போம்
மத்தியானக்களி.

களி தீர்ந்த மிச்சப்
பாத்திரத்தப் பார்த்துப்
போக வருவாரு
தில்லை நடராசரு
உள்ளூர் சப்பரத்துல
இராத்திரி பத்து மணிக்கு.

About The Author

2 Comments

Comments are closed.