நம்பிக்கைகள்-(4)

கோயில்கள்..

1.கும்பகோணத்திற்குத் தென் மேற்கில் 8 கி.மீ. தொலைவில் உள்ள தலம்-திருச்சக்திமுற்றம். "நாரை விடு தூது" பாடப் பெற்ற இடம். தவமிருந்த அம்பிகை, தீப்பிழம்பான அய்யனைத் தழுவி இணைந்ததால், லிங்கத் திருமேனியிலும் தீச்சுடர்கள். இல்லப் பிணக்குகளைத் தீர்த்து இணைப்பார் இத்தல ஈசன் குழைந்தநாதர் என்பது நம்பிக்கை.

2 .ஸ்ரீவாஞ்சியம்-கும்பகோணம்-நன்னிலம் சாலை-நன்னிலத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அலைமகள் திருமாலுடன் மீண்டும் சேர்ந்த தலம். நிறைந்த மண வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

3.காமரசவல்லி- திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் தூதூர் செல்லும் பாதையில் அழகிய மணவாளன் தலத்திற்கு அருகில் உள்ளது. கார்கோடன் விமோசனம் பெற்ற, ரதி மன்மதனுடன் இணைந்த தலம். காதல் வாழ்க்கை நல்ல முறையில் அமையுமென்ற நம்பிக்கை..

4.காஞ்சிபுரம் – உமையம்மை மணல் திருமேனியமைத்து இறைவனுடன் சேர்ந்த தலம் – மங்கையர் வாழ்வில் மங்களம் நிறையச் செய்யும் தலம்.

5.பாலூர்-செங்கை-காஞ்சி சாலையில் அன்னை தழுவக் குழைந்த, மண வாழ்க்கை வளம் பெற வைக்கும் பதங்கீசுவரர் ஆலயம் அமைந்திருக்கிறது.

6.உத்திரமேரூர்–காஞ்சிக்குத் தெற்கே 25 கிமீ தொலைவில், ரதி-மன்மதன் வழி பட்ட தலம்.

7.உப்பிலியப்பன் கோயில் – கும்பகோணம் – காரைக்கால் சாலையில் உள்ளது.திருமால் பிரிந்த மனையாளைச் சேர்ந்த தலம். இங்கு வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது நம்பிக்கை.

8.. ஆயுள் அதிகரிக்க…கோடியக்காடு அருகே உள்ள குழகேசர் கோயிலில் வழிபாடு செய்யலாம். அமிர்தகலச (பாற்கடல் கடைந்த போது சிதறிய அமிர்தத்தைக் கலசத்தில் தாங்கிய) சுப்ரமணியரைத் தரிசிப்பது விசேடம். நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்று அம்மையப்பனை தரிசிக்கும் தலம். சுந்தரர், அருணகிரியாரால் பாடல் பெற்ற திருத்தலம்.

இதர…

1..கோவை, துடியலூர் அருகேயுள்ள சோமையனூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் எதிரிகள் பற்றிய அச்சமின்றி மக்கள் நிம்மதியுடன் வாழ – மண்பானைக்குள் எலி விடும் விழா ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படுகின்றது.மூன்றடி ஆழத்தில் புதைக்கப்பட்ட மண்பானைக்குள் எலியும் பூனையும் உயிரோடு வைக்கப்பட்டு மூடப்படுகின்றன். இரண்டு மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது இரண்டும் உயிருடன் இருந்தால், எதிரிகள் பயமின்றி மக்கள் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

2.ஈழ மன்னனின் ஊமைப் பெண்ணைப் பேச வைத்த மாணிக்க வாசகரின் "திருச்சாழல்" பதிகம் பாடினால் பேச்சாற்றல் குறை தீரும் என்பது நம்பிக்கை.

இதற்குறிய வழிபாட்டுத்தலம்–கும்பகோணம் நாச்சியார் கோயிலுக்கு அருகிலுள்ள திருப்பந்துறை. முருகப் பெருமானுக்குப் பேச்சாற்றல வழங்கிய சிவானந்தேஸ்வரர்-மங்களாம்பிகை., குமரகுருபரருக்கும் பேச்சாற்றல் வழங்கிய தலம் இது.

3..கடலூர்-முஷ்ணம் திருத்தலத்திலிருந்து 4 கிமீ தூரத்தில் உள்ளது கூடலையாற்றூர். இங்கு எழுந்தருளி உள்ள நெறி காட்டும் நாதர்-ஞானசக்தி தம்பதியரை வழிபட்டால் நினைவாற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. அகத்தியர், சித்ரகுப்தன், ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்து மாம்பழக் கவிராயர் ஆகியோர் மறதியை மறந்த தலம்.

4.சௌந்திர லஹரியின் 63-வது ஸ்லோகம் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும் என்பது நம்பிக்கை.
"ஸ்மிதஸ்யோத்ஸ்னாஜாலம் தவ
வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா மாஸீ ததிரஸதயா
சஞ்சுஜடிமா!"

நினைவாற்றலுக்குக் கலைமகள் பிரார்த்தனை:

அதஸ்தே சீதாம்சோ ரம்ருதலஹரீ
மாம்லருசய
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி
ப்ருசம் காஞ்ஜிகதியா

5. கரப்பான் பூச்சியைத் தின்றால் – எலும்பு முறிவு குணமாகும் -அடிபட்ட காயத்திலிருந்து ரத்தம வருவது நிற்கும்-கால் வீக்கம் சரியாகும் என்பது நம்பிக்கை.

சங்க காலத் தமிழர்கள் ஈசல் பூச்சிகளை மோரில் போட்டுச் சாப்பிட்டிருக்கிறார்கள்…. சுஜாதா ..குங்குமம் 7.6.2007

6..சென்னை-ஒற்றியம்பாக்கம் – மேடவாக்கம் அருகில் – ஒற்றீசுவரர் திருக்கோயில் – இந்த ஆண்டவரை வழிபட்டால் விசா எளிதில் கிடைத்து விடும் என்பது பிரபல்யமான் நம்பிக்கை.

7. வெளிநாட்டுப் பயண யோகம் எளிதில் கிட்ட… சௌந்தர்ய லகரி 27-வது ஸ்லோகம் பாராயணம் செய்வார்கள்.

8. கட்டணம் ரூ.10 கூடவே ஊரிலிருந்து வந்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 10 பைசா கட்டண இரசீதுடன, ஒரு வெள்ளைத் தாளில், வழக்கு விபரங்களை எழுதி, நீதிபதிக்கு முகவரியிடுவது போலவே பணிந்து விண்ணப்பித்து, அர்ச்சகர் மூலம் சமர்ப்பித்துப் பின் அந்தப் பிராதுச் சீட்டை (விசாரணை அதிகாரி) முனியப்பர் கோயில் வேலில் தொங்க விட்டுவிடவேண்டும்.குறை தீர்ந்தவுடன், வாபஸ் மனு எழுதி, சமர்ப்பித்து, பிராது மனுவை வாபஸ் வாங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உட்பட தினம் ஆயிரக்கணக்கானோர் பிராது கொடுத்து நீதி பெறும் தலம்-

விருத்தாசலம்-சேலம் சாலையில் 3 கிமீ தொலைவில் உள்ள மணவாளநல்லூர் கொளஞ்சி அப்பர் கோயில். பலி பீடத்தில் முருகன் குடி கொண்டுள்ள தலம்.

11..மதுரை மஞ்சம்பட்டி கிராமம்-இந்த ஊர் முத்தாலம்மன் கோயிலைத் தாண்டிப் போகும வரையில் யாரும் காலில் செருப்புப் போட மாட்டார்கள். ..குங்குமம் 21.6.2007

12..ஸ்பெயின்- குழந்தைகளை வரிசையாக ரோட்டில படுக்க வைத்து, பேய் வேஷம் போட்டுக் கொண்டு ஒருவர் குழந்தைகளைத் தாண்டிச் செல்வார். தீவினைகள் குழந்தைகளை அண்டக் கூடாதென்று. வருடா வருடம் நடத்தப்படும் திருவிழா இது

About The Author

1 Comment

  1. s.somu

    பாலூர்-செங்கை-காஞ்சி சாலையில் அன்னை தழுவக் குழைந்த, மண வாழ்க்கை வளம் பெற வைக்கும் பதங்கீசுவரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இதிலிருந்து தங்கள் தரும் விலக்கம் புரியவில்லை காரணம் எம்பெருமன் பெயரை குறிப்பதானல் அது தவறு . நன்றி

Comments are closed.