நான்கு கவிதைகள்

1
எப்படியாகிலும்
வாழ்ந்து காட்டிவிடும் முனைப்பில்
போராடிக் கொண்டிருக்கிறேன்
யுகயுகமாய்
எனினும்
இன்னும் வாழ்ந்தபாடில்லை
எந்தக் கணத்திலும்.

2
அவன் அவள்
நான் நீ
அவர்கள் இவர்கள்
எல்லோருக்கும்
பொதுவுடைமை
ஒன்றுண்டு:
அதன்பேர்
துக்கம்

3
நான் குரங்கில்லை
எனினும்
இங்குமங்கும்
தாவித் திரிகிறேன்
நான்
நாயில்லை
எனினும்
குழைத்து குழைத்து
வாலாட்டித் திரிகிறேன்
நான்
பன்றியில்லை
எனினும்
சேற்றில் சிக்கி
சீர்கெட்டு உழல்கிறேன்
பின் எப்படிச் சொல்வது
நான் பன்றியில்லையென்று
நாயில்லையென்று
குரங்கில்லையென்று

4
அடுத்த கவிதையை
எழுதத் துவங்குமுன்
நின்றுபோனதென்
இயக்கம்
உன் விரல்நுனியொளிர்வில்.

About The Author

1 Comment

  1. bharani

    வருங்காலத்தை வளப்படுத்த நிகழ்காலத்தைப் போராட்டத்திலேயே தொலைத்திக் கொண்டிருப்பதை சுட்டிக்காட்டுவதாக உங்களின் முதல் கவிதை – வாழ்க்கை குறித்த ஒரு துளி விரக்தி தொனிப்பினும் எல்லா கவிதைகளும் அருமை.

Comments are closed.