நிதர்சனம்

இரவைக் கிழித்து
எழுகையிலே
கிழிபடத் தொடங்கிற்று
நாளேடு!!!

இன்றென்ன புதியது?
வேறென்ன புகுவது?
வகை வகையாய் எண்ணம்
அசை போட்டபடி நெஞ்சம்!
.
ஆள் பாதி
ஆடையும் பாதியாய்
பார்த்துச் சிரித்தது,
பிரதிபிம்பம்!!

ஆயிரம் ஆயிரம்
கனாக்களும் ஏக்கங்களும்
தோள் பற்றி
நாள் முழுதும்!!

எந்திரமாய் ஓடித்
திரும்புகையில்
இருள் சூழ்ந்திருந்தது!!

கதை, கவிதை, புத்தகம்
மூவிரண்டு அலசல்கள்
எதிலும் வாய்த்திடாது
அயர்ந்துறங்கிப் போயின
விழிகள் அன்றும்!!

மீண்டெழுந்தால்
நாளையும் கிழிபடும்
நாளேடில் ஓர் தாள்!!!

About The Author

1 Comment

  1. கீதா

    இயந்திரத்தனமான வாழ்க்கையை விமர்சிக்கும் அழகான கவிதை. பாராட்டுகள்.

Comments are closed.