பாதாம் பர்பி

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு – 125 கிராம்
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 50 கிராம் அல்லது தேவைக்கேற்ப
பால் – 1 தம்ளர்

செய்முறை:

பாதாம் பருப்பை இரவே நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள், அதை முதலில் தேவையான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு நீரை ஊற்றி, நன்றாகக் கரைந்ததும் இரண்டு தேக்கரண்டி பால் ஊற்றினால் சர்க்கரையில் இருக்கும் அழுக்குகள் தனியாகப் பிரிந்து வரும். அதை அப்படியே மேலோடு எடுத்து விடுங்கள். பிறகு, அதைக் கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்ச வேண்டும். பாகு வந்ததும் அதில் அரைத்த பாதாம் விழுதைப் போட்டுக் கிளறிக் கொண்டே இருங்கள். பாதி கிளறிய பிறகு, சிறிது சிறிதாக நெய் ஊற்றிக் கிளறுங்கள். பின்னர், ஒரு தேக்கரண்டி பாலில் சிறிது குங்குமப்பூவைக் கலந்து ஊற்றுங்கள். பதமாக வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி, மெலிதாகச் சீவிய முந்திரி, அக்ரூட் பருப்பு சேர்த்து அலங்கரியுங்கள்! சற்றுக் குளிர்ந்ததும் தேவையான வடிவத்தில் துண்டமிட்டால் அருமையான பாதாம் பர்பி தயார்!

செய்து அசத்துங்கள்! உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்!

About The Author

1 Comment

Comments are closed.