பாபாவின் வழிமுறைகள்

நான் எனக்கென்று சில அளவுகோல்கள் வைத்திருக்கிறேன். அது உன்னுடைய அந்தஸ்துக்குப் பணியாது, உன்னுடைய அன்புக்குப் பணியும். ஆண்டவனுக்காக நீ செய்ய வருகிற தொண்டுக்குப் பணியும். இது தான் சிவசங்கர் பாபாவின் ஆன்மீகம். இதில் எந்த காலத்திலும் மாற்றம் இருக்காது.

ஒரு முறை இராமேஸ்வரம் போய் இருந்தேன். சாமி தரிசனம் எல்லாம் பண்ணி விட்டு ராமேஸ்வரம் railway stationலே உட்கார்ந்திருந்தேன். எனக்கு மதுரையில் இருந்து தான் ticket கிடைத்தது. நான் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வருவதற்காக trainக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

ஒரு ஆள் வாட்ட சாட்டமாக லுங்கி எல்லாம் கட்டிக் கொண்டு என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்."நீங்கள் சிவசங்கர் பாபா தானே?", என்று கேட்டார். நான், "ஆமாம்", என்று சொன்னேன். "கொஞ்சம் இருங்க", என்று சொன்னார். நாம் தான் எல்லாவற்றுக்கும் துணிந்த கட்டையாயிற்றே! ஓடிப் போய் ஒரு டீ கொண்டு வந்து கொடுத்தார். குடிங்க என்றார். நான் சரி என்று குடித்தேன். "என்னுடைய பெயர் கிறிஸ்தோபர். நான் மீன் பிடிப்பவன். நீங்கள் எங்கள் இயேசுநாதரை பற்றி எல்லாம் பேசுவீர்களே! அது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்", என்று சொன்னார்.

அதற்கு பிறகு இருங்க என்று ஓடி போய் விட்டு சந்தோஷமாக என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். நான் ஒன்றும் கேட்கவில்லை. அவராகவே, "நான் சென்னைக்கு வந்து உங்களை பார்க்க வேண்டும் என்றால் எனக்கு நானூறு ரூபாய் ஆகுங்க. அதனால் தான் இராமநாதபுரம் வரையில் உன்னுடன் பேசிக் கொண்டு வரலாம் என்று ticket எடுத்து விட்டேன்", என்று சொன்னார்.

இராமநாதபுரம் போகிற வரையில் இங்கே இருந்து பார்த்தால் ஸ்ரீலங்காவில் லாரி போகிற வெளிச்சம், fishing மூலம் அவர்களுக்கு கிடைக்கிற வருமானம் எல்லாம் பேசிதீர்த்து விட்டார். அதாவது ஒரு சாதாரண மனிதன், "சிவசங்கர் பாபா என்னிடம் பேசுவார், நான் டீ வாங்கி கொடுத்தால் குடிப்பார், என் பக்கத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டு வருவார்" என்று நம்புகிறார் பார்த்தாயா? அது தான் என்னுடைய ஆன்மீகம் வெற்றி பெற்றதற்கான அடையாளம்.

About The Author