பாபா பதில்கள் – ஈயென இரத்தல் இழிந்தன்றே…

                                                                    
                                                                                                                                        

ஈயென இரத்தல் இழிந்தன்றே ஈயேன் என்றால் அதனினும் இழிந்தன்று:

ஒருவனிடம் போய் எனக்கு இது வேணும் என்று கேட்கக்கூடாது, அது தப்பு. அப்படி ஒருவன் கேட்டுவிட்டு, உன்னால் கொடுக்க முடியும் என்றால் நீ கொடுக்காமல் இருக்கக்கூடாது; இது அதைவிட தப்பு. அப்போது என்னால் கொடுக்கமுடியும் என்பதால் நான் கொடுத்துவிடுகிறேன். அது உன்னுடைய கர்மாவை மீறிய நிலையில் என்னால் செய்யப்படக்கூடிய விஷயம். எனக்கென்று ஒரு வாழ்க்கை கிடையாது; எனக்கென்று ஒரு desire கிடையாது; எனக்கென்று ஒரு தேடுதலோ, தேவையோ கிடையாது. அதனால் இங்கே வருபவர்களின் குறைகளைக் கேட்கிறபோது நான் வாயால்கூட ஒன்றும் சொல்லமாட்டேன். மனசுக்குள்ளயே நினைத்துக் கொள்வேன், "இவர்களுக்கு இது நடக்கணும்!" என்று. அருள்வாக்கு எல்லாம் சொல்லமாட்டேன்! நீங்கள் சொல்வதைக் காதால் கேட்டு, உங்கள் கையில் துளசியோ, அட்சதையோ, விபூதியோ கொடுக்கிறேன் இல்லையா, அதிலேயே நான் விளையாடிவிடுகிறேன்! அந்த நிலைதான் ஒரு சித்தனுடைய நிலை.

About The Author