பாபா பதில்கள்

Q . மனிதர்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?

கோயில்கள் என்று சொல்லக்கூடிய இடங்களிலெல்லாம் ஒவ்வொருவிதமான நம்பிக்கை இருக்கும். இந்த நம்பிக்கைகளுக் கெல்லாம் சில நேரங்களில் விஞ்ஞானபூர்வமான காரணங்கள் இருக்கலாம். சிலநேரங்களில் மனோதத்துவரீதியான காரணங்கள் இருக்கலாம். சில நேரத்தில் ஒரு நம்பிக்கையே காரணமாக இருக்கலாம். இதற்கு உதாரணமாக பரமாச்சாரியார் சொன்ன ஒரு கதையை உங்களுக்குச் சொல்கிறேன்.

"ஒரு யாகசாலையில் எலி நடமாட்டம் அதிகமான காரணத்தால் ஒரு பூனையைக் கட்டினார்கள். இதைக்கண்டவுடன் எல்லோரும் யாக சாலை என்றால் பூனையைக் கட்ட வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணி, அவரவர்கள் அமைத்த யாகசாலையிலும் பூனையைக் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் யாகசாலையில் பூனையைக் கட்ட வேண்டும் என்பது சாஸ்திரமல்ல. அந்தக் குறிப்பிட்ட யாகசாலையில் எலிநடமாட்டம் அதிகமாக இருந்தமையால் பூனையைக் கட்டினார்கள்". அந்த மாதிரி ஏதோ ஒரு காரண காரியம் இருக்கும். It could have been relevant for a particular time! இப்போது relevant – ஆ என்பது தெரியாது.

மேலும், சில நேரங்களில் ஆலமரம், அரசமரம், வேப்பமரம் இதிலெல்லாம் உள்சக்திகள் இருக்கின்றன. அவற்றில் சில ஆற்றல்கள் இருக்கலாம். அதனால் அதற்கு வழிபாடுகள் இருக்கலாம். இயற்கையில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அதை எப்படிப் பயன்படுத்துவது என்று யாருக்குப் புரியும். சில விஷயங்களை, நமது பெரியவர்கள், நமக்கு விஞ்ஞான ரீதியான காரணங்களைச் சொல்லாமலேயே விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். உதாரணமாக, பச்சை வாழை இலையில் சாப்பிடுவது என்பது நமது பெரியவர்கள் செய்து விட்டுப்போன வழக்கம். அதற்குக் காரணம் அவர்கள் சொல்ல வில்லை. ஆனால் விஞ்ஞான ரீதியாக என்ன வென்றால், அதில்

Chlorophyll அதிகமாக இருக்கிறது. அரிசியில் இருக்கும் starch- அதில் கலக்கும்போது நமது உடலுக்கு நல்லது என்கிறார்கள். இப்படி சில விஷயங்கள் scientific-ஆக இருக்கிறது. நமக்கு science அதிகம் படித்து research செய்து அவற்றைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு பக்குவம் இல்லாததனால், பெரியவர்கள் எதையெல்லாம் நல்லது என்று வழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்களோ அவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்காமல் பின்பற்றுவது நல்லது. இயற்கையில் இருக்கக்கூடிய விஷயங்களை முழுக்க ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் அளவிற்கு யாரும் இல்லை.

ஒரு வகையில் பார்த்தால் நாம் இயற்கைக்கு முரணானவர் களாக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நாம் வெளியே விடும் மூச்சுக் காற்று கார்பன்-டை-ஆக்ஸைடு. அதற்குப் பதிலாக இயற்கை நமக்கு அளிப்பதோ பிராணவாயு. இந்த மண்ணிற்கு நாம் கொடுப்பது மலமும், சிறுநீரும். இந்த மண் நமக்குக் கொடுப்பதோ இருக்க இடம், உண்பதற்கு கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் காய்கறிகள். நதிகளில் மனிதர்கள் குளிப்பதோடு, எருமை மாட்டையும் குளிப்பாட்டுகிறார்கள். ஆனால், அந்த நதி மனிதனுக்கு குளிப்பதற்கும். குடிப்பதற்கும், தாவரங்களுக்கு நீரைக் கொடுக்கிறது. ஆகவே, மிகவும் அறிவு பூர்வமாகப் படைக்கப்பட்ட மனிதன் தான் இயற்கையைவிட மிகவும் மோசமாக நடந்து கொள்கிறான். எனவே இயற்கையை நாம் pollute செய்யாமல் இருந்தாலே நல்லது.

About The Author

1 Comment

Comments are closed.