பாபா பதில்கள்

திருமணம் மணக்க

சம்ரட்சணாவில் எல்லோரும் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு உலகத்திலேயே சிரித்த முகத்தோடு இருக்கிற நிறைய ஜனங்களைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் சம்ரட்சணா வந்தால் போதும். யார் வந்தாலும் ஒரு குடும்பம் போல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இதில் status consciousness கிடையாது. Male, female inhibition கிடையாது. இது ஒரு நடைமுறை சித்தாந்தம். அந்த வகையில் இன்றைக்கு திருமணங்கள் போன்ற நல்ல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாமே நாம் அன்பை இன்னும் பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக அன்பை விருத்தி பண்ணிக் கொண்டே போய் பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் என்று உலகத்தில் இருக்கிற எல்லோரிடமும் பாரபட்சமற்ற அன்பு ஊற்றாக வருகிற போதுதான் அது உண்மையான அருள் நாட்டமாக ஆகிறது. குடும்பம் என்பது அன்பை நாம் கற்றுக் கொள்வதற்கான டிரெயினிங் சென்டர். It is not the end of living philosphy. ஒரு மனிதனுடைய கடமை என்ன என்று சொல்கிறபோது பாரதி அழகாக ஒரு கருத்தைச் சொன்னான். கடமையாவன தன்னை கட்டுதல் – ஒரு மனிதன் தன்னை அடக்குவதற்கான வித்தையை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். பிறர் துயர் தீர்த்தல் மற்றவர்களுடைய கஷ்டங்களை போக்குவது. பிறர் நலம் வேண்டல் – கஷ்டங்களைப் போக்குவது ஒன்று, மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுவது அடுத்தது. சம்ரட்சணா இன்றைக்கு அதைத்தான் சாதித்துக் கொண்டு இருக்கிறது.

சிவசங்கர் பாபா இந்தச் சமுதாயத்திற்காக சிந்தித்து செயலாக்கிக் கொண்டிருக்கக்கூடிய பல வழிமுறைகளின் வெளிப்பாடுதான் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, சிக்கனத் திருமணம் போன்றவை. அதனால் சம்ரட்சணாவில் நடத்தப்படும் திருமணங்கள் மற்ற இடங்களில் நடக்கும் திருமணங்களிலிருந்து எல்லா விதத்திலும் மாறுபட்டவை. அப்படி எந்த விதத்தில் வித்தியாசம் என்று பார்க்கலாம்.

எளிமை புதுமை

வரதட்சணையற்ற திருமணங்களை நாம் ஆதரித்துக் கொண்டிருக்கிறோம். சம்ரட்சணாவின் first priority-யே வரதட்சணை இருக்கக் கூடாது என்பதுதான். கல்யாண மண்டபம், தேவையற்ற சொந்த பந்தக் கூட்டங்கள் இவற்றால் ஏற்படும் எந்தவிதமான விரயச் செலவும் இருக்காது. நான் அநாவசியச் செலவை ஆதரிப்பதில்லை. ஒரு மத்தியதர வர்க்கத்தினரின் முக்கிய பிரச்சனை பொருளாதாரம். எல்லோரும் திருமணங் கள் எளிமையாக இருக்க வேண்டும் என்று உபதேசம் கொடுத்தார்கள். ஆனால் நான் தான் இதை practical- ஆக மாற்றி நடைமுறையில் செய்து காண்பித்திருக்கிறேன். திருமணம் என்ற பெயரால் வீண் செலவுகள் இந்த மண்ணில் நடந்து கொண்டிருக்கின்றன. அதை மாற்றி எளிமையாக மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்குள் சாஸ்திரங்களை விட்டுக் கொடுக்காமல் திருமணத்தைச் செய்யமுடியும் என்பதை prove செய்து காண்பித்திருக்கிறேன். சடங்கு, formalities எல்லாம் கிடையாது. அவரவர்கள் சம்பிரதாயப்படி நடப்பதில் நாம் குறுக்கிடுவது இல்லை. தேவையற்ற வீண் செலவுகள் செய்து கடனாளியாகி கஷ்டப் பட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்திக் காட்டியது என்னுடைய ஆன்மீகம்.

ஆன்மீகபரமான இடம்

வெளியிடங்களில் திருமணம் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கல்யாண மண்டபத்திற்கு ஒரு நாளைக்கு 50,000 ரூபாய் வாடகை வேறு. எவனோ ஒருவனை பணக்காரன் ஆக்கிக் கொண்டு இவர்கள் ஏழையாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். சம்ரட்சணா சிம்பிளான ஆனால் அதே சமயத்தில் ஒரு அற்புதமான இடம். ஒவ்வொரு நாளும் இங்கே வேத வேள்விகள் நடக்கின்றன. நாட்டில் எவ்வளவோ கோயில்கள் இருக்கின்றன. அங்கே கூட நித்ய ஹோமம் நடப்பதில்லை. இங்கே ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தேவாரம், திருவாசகம், நாதஸ்வரம், பூஜை, பாட்டு, வேத மந்திரங்கள் எல்லாம் முழங்கிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு கல்யாண மண்டபத்தைவிட சம்ரட்சணா எந்த விதத்திலும் சாந்நித்யம் குறைந்ததில்லை. இந்த இடம் ஒரு உத்தமமான இடம். இறைவனுக்கு ரொம்ப ரொம்ப உகப்பான இடம். இங்கே திருமணம் நடந்த தம்பதியினர் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று, சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஒன்றரையணா கல்யாண மண்டபத்தை நம்புகிற ஜனங்கள் இப்படி ஒரு ஆன்மீகபரமான சத்சங்கங்கள் நடந்து கொண்டிருக்கிற ஒரு கோயில் வளாகத்தில் கல்யாணம் செய்வதைக் கூட ஒரு நெளிவு சுளிவான, சங்கடமான விஷயமாக நினைப்பது மாற வேண்டும். போலித்தனமான சிந்தனைகளை விட்டுவிட்டு பிராக்டிகலாக down to earth வாழக் கற்றுக் கொண்டால் லௌகீகக் கஷ்டங்கள் குறையும்.

இங்கு கல்யாணம் நடத்த வாடகை செலுத்த வேண்டாம். Electric Bill, water charges போன்ற எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. எனவே மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ள விழைபவர்களுக்கு எந்தவிதக் குழப்பமும் தேவையில்லை. நான் சொல்வது ஒரு அறிவார்ந்த விஷயம். விவேகமான விஷயம். 

திருமண விருந்து

நாட்டில் எவ்வளவோ பேர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார்கள். ஒரு கல்யாணத்திற்கு five-star ஹோட்டலில் 350 ரூபாய் கொடுத்து லன்ச்சுக்கும் டின்னருக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். வருபவர்கள் கொஞ்சம் கொறித்துவிட்டுப் மீதியை குப்பைத் தொட்டியில் கொட்டுகிறார்கள். அதை விடவும் நமக்கு என்ன மாதிரி சாப்பாடு பிடித்திருக்கிறதோ, எவ்வளவு சாப்பிட முடியுமோ அந்த அளவிற்கு ஒரு இயல்பான மெனு போதும் என்பது சம்ரட்சணாவின் கொள்கை. Nominal budget-ல் அவரவர்கள் வசதிக்கேற்ப திருமண விருந்து அளிக்கிறோம். அதற்குத் தேவையான கிச்சன் பாத்திரம் பண்டங்களும் வசதியாக வைத்திருக்கிறோம். அதற்கான எந்தவித வாடகையும் இங்கே நாங்கள் பெறுவதில்லை.

இலவசத் திருமணம்

பொருளாதார வசதியற்றவர் களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம். சம்ரட்சணாவிற்கு வந்து முதல்நாள் தெரியப்படுத்தினால் கூட மறுநாளைக்கே திருமணம் செய்து கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். நிறைய பேர் பொய் சொல்கிறார்கள். கல்யாணம் ஆக வேண்டும் என்று திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டு போகிற வழியில் விற்று சாப்பிட்டவர்களை பார்த்திருக்கிறோம். எவ்வளவு ஏமாற்றுகிறார்கள்! நாம் நல்லது செய்யப் போனால் அதிலும் நம்மை ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் verify செய்ய ஆரம்பித்தோம். அதைத் தவிர வேறு எந்த formalityயும் நாம் வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்குத் திருமாங்கல்யம் கொடுத்து, புடவை, வஸ்திரங்கள் கொடுத்து 200 பேருக்கு விருந்தும் அளிக்கிறோம். 200 பேருக்கு அதிகமாக திருமணத்திற்கு அழைக்க வேண்டாம் என்பது என்னுடைய பிலாசபி. ஏனெனில் உங்களுக்கு உண்மையாக ‘வேண்டியவர்கள்’ என்று கணக்கெடுத்துப் பார்த்தால் 200 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களுக்கு வேண்டியவர்களா, வேண்டாதவர்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமெனில், உங்களுக்கு ஒரு கஷ்டம் வருகிறபோது, அவர்களிடம் பண உதவி கேட்டுப் பாருங்கள். அப்போது புரியும்.

‘உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.’

ஆடை அவிழும் போது உடனே அதனைத் தாங்கிப் பிடிக்கும் கையைப் போல, நண்பனுக்குத் துன்பம் வரும் போது உடனே அதனைப் போக்குவது தான் நட்பு. உங்களுக்கு அவசரமாக 500 ரூ. தேவைப் படுகிறது என்று கேட்டுப் பாருங்கள். அதன் பிறகு, உங்களைப் பார்த்தால் பார்க்காதமாதிரி அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள்.

உலக வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு myth. திருமணம் போன்ற உங்களுடைய லௌகீக விஷயங்கள் முடிந்தால்தான் நீங்கள் இறைவனைத் தேடுவீர்கள். திருமணத்திற்கென நிறைய செலவு செய்து, கடனாளியாகிவிட்டு என்னிடம் வந்து, "ஒரே கஷ்டம், ஆனால் எப்படி வந்தது என்று தெரியவில்லை" என்று கூறுவீர்கள். நான் நீங்கள் கஷ்டமே இல்லாமல் வாழ்வதற்கான வழியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் I am giving you a practical management solution to life. இதற்கு கடவுள் தேவையில்லை.

உங்களுக்கு ஒரு complex. திருமணத்தைச் சிம்பிளாகச் செய்து கொண்டால் யாராவது ஏதாவது சொல்வார்களா என்ற பயம். சமுதாயத்தில் இந்தமாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ள ஒரு will power வேண்டும். சமுதாயம் என்பது நானும் நீங்களும்தான். நாமெல்லாரும் மாறிவிட்டால் இந்த சமுதாயக் கொடுமைகளை ஒழித்துவிடலாம். கடனாளி ஆகாமல் நிம்மதியாக வாழலாம். இவை எல்லாவற்றிற்கும் நான் practical solution கண்டு பிடித்து நடைமுறைப்படுத்தி வருகிறேன்.

நான் இதுவரை சம்ரட்சணாவில் செய்து வைத்த திருமணங்களில் வரதட்சிணை கிடையாது. அதே மாதிரி வரதட்சிணை பெற்றுக் கொள்பவர்களின் திருமணம் இங்கே நடைபெறவும் நாம் ஒப்புக் கொள்வதில்லை Middle class family-ல் திருமணம் செய்கிறபோது ஆடம்பரச் செலவுகள் செய்வதால் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகள் மிகவும் அதிகம். உங்களில் பலருக்கு pseudo ego. சம்ரட்சணாவில் பாபா முன்னிலையில் திருமணம் செய்து கொண்டால் உறவினர்கள் ஏதாவது சொல்வார்களோ என்ற பயம் இருக்கிறது. இதை நீங்கள் விட்டுவிட வேண்டும்.

நீங்கள் ஏழையாக இருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்களை உங்களுக்காக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சொந்தக்காரர்கள். உங்களிடம் உள்ள பணத்திற்காகவோ, பொருளாதார வசதிக்காகவோ உங்களை ஏற்றுக் கொள்பவர்கள் உங்களுக்கு தேவையில்லை. நம்மிடம் வசதி இருக்கிறதென்று வருகிற சொந்தக்காரன் என்றால் நாளைக்கு அந்த வசதி இல்லையென்றால் போய்விடுவான். 

அற்றகுளத்து அறுநீர்ப் பறவை போற்
உற்றுழித்தீர்வார் உறவல்லர் –

அவன் சொந்தக்காரனே கிடையாது. குளத்தில் தண்ணீர் இருந்தால் பறவை வருமாம். இல்லாவிட்டால் ஓடிவிடுமாம். அந்த மாதிரி ஆட்கள் நமக்கு வேண்டாம். நம் கஷ்டத்திலும், நஷ்டத்திலும் யாரெல்லாம் என்றைக்கும் நம்மோடு ஒன்றாக, இனிமையாக நம்மை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சொந்தக்காரர்கள். அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு டாம்பீகம், பொருள்விரயம் அதன் மூலம் நமக்கு ஒரு social status இருப்பதாக மற்றவரை நம்ப வைத்து அதில் நாமும் ஏமாந்து மற்றவரையும் ஏமாற்றி, கடைசியில் உண்மையாகவே வாழ்க்கையில் ups and downs வருகிற போது யாருமே நம் பக்கத்தில் இருக்க மாட்டார்கள் We will be affected not only financially but also emotionally and psychologically. உங்களுக்கு logical thinking based on common sense and understanding of the world’s nature வரவேண்டும். நீங்களெல்லாம் educated middle class. உங்களுக்கு இந்த பாவனை என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு இந்த சமுதாயத்தில் ஒரு புரட்சியில் ஈடுபடுவீர்கள்.

நீங்கள்தான் மாற்ற வேண்டும். அதாவது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் பிரச்சனை. "அவர்கள் ஆடம்பரமாக செலவு செய்து திருமணம் செய்துவிட்டார்கள், அதனால் நாமும் செய்துவிடலாம்" என்ற எண்ணம் இருப்பதனால்தான் இன்றைய சமுதாயம் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது. இதை நாம் மாற்றவேண்டும். சிவசங்கர் பாபா முனைந்து கொண்டிருக்கிறார். இன்னும் முழுமையாக வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. முயற்சி செய்து கொண்டிருக்கிறார். சம்ரட்சணா வருகிற பெரும்பாலோருக்கு, இந்த வழிமுறை உடன்பாடாகிவிட்டது. மிகவும் வசதி வாய்ந்தவர்களாக இருந்தாலும், எளிமையான திருமணம் செய்ய முன் வருகிறார்கள். உங்களுக்கு வசதி இருந்து நீங்கள் ஆடம்பரமாக உங்கள் பெண்ணிற்குத் திருமணம் செய்ய விரும்பினால் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், கடன் வாங்கி ஆடம்பர செலவு செய்வதை நான் ஒப்புக் கொள்வதில்லை. 

திருமணத்திற்கு ஒரு ஆரோக்கியமான ஆணும், ஒரு ஆரோக்கியமான பெண்ணும் தான் முக்கியமாகத் தேவை. அதைவிட்டு விட்டு மீதியெல்லாவற்றையும் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். இதுபோன்ற சிந்தனைகள் மாற வேண்டும். சமுதாய மாற்றம் என்பது நம்மால்தான் உருவாக்கப்பட வேண்டும். சமுதாயம் என்பது மனிதர்கள்தான். மனிதர்கள் தங்களுடைய வழி முறைகளை மாற்றிக் கொண்டால் இந்த சமுதாயத்தில் நல்ல வளர்ச்சி வரும். இதையெல்லாம் நீங்கள் வேகமாக முடித்துவிட்ட பிறகு கடவுளைத் தேடலாம்.

எழுபது வயதான பிறகு உடல்நலம் சரியில்லை என்று என்னிடம் குறை சொல்கிறீர்களே! உடல் நலத்தில் சரியான முறையில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? உங்களுடைய health co-operate செய்கிற வரைக்கும் உடல் நலத்தைப்பற்றி நீங்கள் கவலைப்படுவதே இல்லை. அயல்நாட்டினர் எவ்வளவு நன்றாக உடல் நலத்தைப் பேணிக் காத்து வருகின்றனர் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அவர்கள் தினந்தோறும் walking செல்கிறார்கள். Exercise செய்கின்றனர். அதனால் physically fit -ஆக இருக்கின்றனர்.

இந்த மாதிரி விஷயங்களுக்கு இறைவன் காரணம் அல்ல. நீங்கள்தான் காரணம். அது போலவே உங்கள் பிள்ளைகள் படிக்கவில்லை என்று என்னிடம் குறை கூறுகிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளின்மீது படிப்பைத் திணிக்கிறீர்கள். ஆனால் அந்த மாதிரி force செய்து படிக்கும் படிப்பு முக்கியமே இல்லை. படித்தவர் களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விட்டதா என்ன? உங்கள் பிள்ளையிடம் என்ன திறமை இருக்கிறதோ அதைக் கவனித்து அந்தத் திறமையை வளர்க்க வேண்டும்.

அதனால் இன்னும் சிந்திப்போம். நடைமுறைப் படுத்த முயல்வோம். . ஒரு நாள் வெற்றி கைகூடும்.

About The Author