பாபா பதில்கள்

அன்பெனப்படுவது யாதெனில்…..

திரு. சிவசங்கர் பாபா அவர்களது உரையிலிருந்து…

"அன்பு என்பது ஒன்றன்தன்னை அமரரும் அறிந்ததது அன்றால்" என்று கம்பர் சொன்னார். அன்பு என்பதை புரிந்து கொள்ள தேவர்களாலும் முடியாது என்று அர்த்தம்.

"அன்பெனப்படுவது யாதெனக் கேட்டேன், அதற்கு அளித்துப் பார் என இறைவன் சொன்னான்!". நீ அதை அளிக்க வேண்டும். If you want to know what love is, you first start giving love. அறுவடை என்றால் என்ன? விதைக்கப் பட்ட பொருள் விளைவது, நீ முதலில் விதைக்கணும், அது அறுவடையாகும். எல்லோரையும் நேசி. If you want to live totally, you have to love totally. காதல் என்று நான் சொல்வது சினிமாவில் காட்டும் காதலன், காதலி மரத்தை சுற்றி ஓடுவது அல்ல. அதற்கு சரியான விளக்கம், ஒரு கன்றுக்குட்டி சேற்றை பூசிக் கொண்டு வருகின்ற போது ஒரு தாய்பசு, அதை அழுக்கு என்று, அசிங்கம் என்று பார்க்காமல் நக்கிக் கொடுக்கிறது பார்…ஒரு spontaneous overflow of emotions, எந்த தடைகளும் அற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடு, அதுதான் உண்மையான அன்பின் வெளிப்பாடு, அன்பை வெளிப்படுத்த வேண்டும். அந்த அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாத, காரண காரியத்தைத் தேடாததாக இருக்க வேண்டும்.

About The Author