பிரதோஷ வழிபாடு

எட்டெழுத்து மந்திரமும் ஐந்தெழுத்து மந்திரமும் ‘ந’ வில் ஆரம்பித்து ‘ய’ வில் முடிவது ஒர் ஓற்றுமை. சிறப்பும் கூட.

‘நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம் எப்படி உயர்வானதோ அதைப்போன்று ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரமும் மிகவும் சக்தி வாய்ந்தது.

மரணத் தருவாயில் நரக வேதனை அனுபவிக்காமல் இருப்பதற்கும், யம பயம் இன்றி சுவர்க்கம் கிடைப்பதற்கும் இவ்விரண்டு மந்திரங்களுமே நமக்கு மிகவும் உதவிகரமாக உள்ளன.

பஞ்சபூதங்கள் எவ்வாறு நம்மை ஆட்டிப்படைத்து அனுகூலமாய் இருக்கிறதோ அவ்வாறே ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரமும் நமக்கு சிவலோகப் ப்ராப்தியும் முக்தி கிடைக்கவும் வழிசெய்கிறது.

சிவபெருமானை வழிபட்டு சித்தி அடைந்தவர்கள் 63 நாயன்மார்கள் என்பது பிரசித்தம். நமக்கெல்லாம் கண்கூடு. அப்பர்,சுந்தரர், சம்பந்தர் முதலானோர் சிவபெருமானை அனுதினமும் பாடி போற்றி துதித்து முக்தியடைந்தனர் என்பது வரலாறு.

பரமசிவன் – கையிலாயநாதன் -ஈஸ்வரன் – சிவபெருமான் – சடையன் – நடராஜன் – ருத்ரன் – பித்தன் – பிறைசூடன் – சபாபதி – சதாசிவம் – பிரதோஷன் என பற்பல பெயர்களால் சிவனை அழைப்பர்.

நம்மிடமிருந்து பிற தோஷங்கள் விலகி நம் சந்தோஷம் நிலைத்து சுகம் பெற சிவனின் பிரதோஷ வழிபாடு மிகவும் அவசியம். பிரதி மாதம் பிரதோஷ (சுக்ல பக்ஷ பிரதோஷம் மற்றும் கிருஷ்ண பக்ஷ பிரதோஷம்) விரதம் இருப்பது உன்னதம்.

பிரதோஷம் திங்கட்கிழமையில் வரும்போது சோம பிரதோஷம் என்றும் சனிக்கிழமையில் வரும்போது சனிப் பிரதோஷம் என்றும் கூறுவர். இவ்விரண்டு பிரதோஷ நாட்களும் உயர்வானது.

பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு பார்வதி சமேத சிவபெருமானை வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

சோம பிரதோஷம் சரும நோயைத் தீர்க்கும். சனிப் பிரதோஷம் கர்ம வினையை நீக்கும்.

மொத்தத்தில் பிரதோஷ வழிபாடு நீண்ட ஆயுளுடன் கூடிய எல்லா நலமும் பயக்கும்.

சிவமே சிவமே – பிரதோஷப் பாடல்

ராகம் : மத்யமாவதி – தாளம் : ஆதி

பல்லவி

சிவனை நாளும் வணங்கிடுவோமே –
நமச் சிவாயமென்று பாடிடுவோமே (சிவனை)

அநுபல்லவி

சிவலாயம் சென்று வழிபடுவோமே – நமச்
சிவாயமே கதியென்று சரணடைவோமே (சிவனை)

சரணம்

சிவாலயம் சென்றால் சக்திகிடைக்குமே
சிவனடியாரை தொழுதால் பக்திபிறக்குமே – நமச்
சிவாயம் என்றுரைத்தால் முக்திகிடைக்குமே
சிவலோகப் பிராப்தியும் நமக்குண்டாகுமே (சிவனை)

About The Author

10 Comments

  1. Manikandan P

    உங்கள் அன்மிக கட்டுரை தொடரடும்

  2. logaraj

    பிரதோஷம் வழிபாடு மிகவும் அவசியம்

  3. CHIDAMBARAM

    சொன்னதை சொல்வதை விட சொல்லாததை சொல்வது உத்தமம்

  4. Dr. Sethuraman Subramanian

    Can you count 8 letters in namO nArAyaNAya? When written in Thamizh script–it is only 7 letters. But the 8 letters they talk about is Om namO nArAyaNa–when written in Thamizh letters there are 8 letters there.

  5. chandrasekaran

    உங்கல் பனி தொடரட்ம் வத்துகல்

  6. chandrasekaran

    உங்கல் பனி தொடரட்ம் வத்துகல்

  7. J AYYAPPA RAJA

    பிரதோச விரத மகிமை அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது , நன்றி

  8. deepa

    சிவனை நம்பியவர் கேடுவதில்லை.பிரதோஷத்தில் சிவனை, ஆலயத்தில் சென்று இறைவனை வழிபடுங்கள்

Comments are closed.