பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் – 300 கிராம்
எண்ணெய் – 200 கிராம்
துவரம் பருப்பு- 250 கிராம்
கடலை பருப்பு -50 கிராம்
நீள மிளகாய் வத்தல் – 5
கடுகு, உளுத்தம் பருப்பு – தேவையான அளவு (தாளிக்க மட்டும்).

செய்முறை விளக்கம்:

Paruppu Usiliமுதலில் துவரம் பருப்பையும், கடலைப் பருப்பையும் நீள மிளகாய் வத்தலுடன் மூன்று மணி நேரம் சாதாரண நீரில் அல்லது அவசரமானால் ஒரு மணி நேரம் சூடான நீரில் ஊற வைக்கவும். பீன்ஸை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி வாணலியில் நன்கு வேகவைக்கவும். பருப்பு நன்கு ஊறியதும் நீரை நன்றாக வடிகட்டிய பின் புட்டு மாவு போல் அரைத்து வைத்துக்கொள்ளவும். பீன்ஸ் நன்றாக வெந்ததும் அதனையும் வடிகட்டிச் சிறிது உப்புச் சேர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். வாணிலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்புச் சேர்த்து நன்கு வெடித்ததும் அரைத்த பருப்பு விழுதினைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். இடையிடையே சிறிது எண்ணெய் விட்டு நன்றாகப் புட்டுப் போல் மொறு மொறு என்று வந்தவுடன் பீன்ஸ் சேர்த்து இரண்டையும் ஒன்றாக நன்றாகக் கிளறவும். தேவையான அளவு உப்புச் சேர்த்துச் சற்று காந்தல் வருமளவு வாணலியை மூடி அவ்வப்போது கிளிறி விடவும். சிறிது தூள் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்ப்பது மணத்தைக் கூட்டும்.”

About The Author

6 Comments

  1. கீதா

    மிகவும் அருமையான பக்க உணவு. பகிர்வுக்கு நன்றி.

  2. Sivaramakrishnan

    ரொம்பவும் அருமை பருப்பு உசிலி. நன்றாக சாப்பிட்ட உணர்வு.

  3. chitra

    அடடா படத்தை பார்க்கும் போதே வாயில் நீருட்று!! செவிக்கு உனவு வழங்கிய பாசந்தி இப்போது வயிற்றுக்கும் சிறிது வழங்குகிறார்;

  4. Mannai Pasanthy

    முதலில் ஒரு பெண்ணின் (கீதா) பாராட்டுதல் கிடைத்தமைக்கு மிக்க நன்றி

  5. Leela Ramnathan

    பருப்பு அரைத்ததை இட்டிலிதட்டில் ஆவீயில் வென்து ஆரினபின் புட்டுப்பொல் உதிர்த்து பின்னர் தாலித்த பீன்சுடன் செர்த்தால் என்னை கம்மியான உசிலிக்கரி செய்யலாம். (னான் டயட்டில் இருக்கிரேன்….)

  6. P. Srinivasan

    மிக அருமையான பக்குவம்
    வாயிக்கு ருசியாக சாப்பிட்ட உணர்வு

Comments are closed.