புத்தாண்டே தாழ்திறவாய்….

(புத்தாண்டை வரவேற்கும் ஒரு மென்பொருள் பொறியாளன்)

மார்கழிப் பனியும்
சித்திரை வெயிலும்
கண்டறியாத
கண்ணாடிக்
கருவறை…

மூளை
கணிப்பொறிக்குள்…

அனிச்சையாய்
உயிர்பெறும்
கை கால்கள்…

தன் பெயரும்
தாய்மொழியும்
துறந்த
மனதின்
நிர்வாணம்!

முன்பகல்
வாங்கிய
குழந்தையின்
முத்தம்…

நண்பகலில்
மறந்துபோகும்
முத்தமிட்ட
முகம்!

வீட்டுச்
சிறையிலிருந்து
வெளியே வந்த
பாரதியின்
புதுமைப் பெண்கள்
கணினியின்
செல்களில்!

மென்பொருள்
புகழுக்கு
முன்னுரை
எழுதும்
பேனா!

வாழ்க்கைப்
பதிவேட்டில்
கார்பன் பதிவுகள்
முடிவுரையாய்!

கணினிப்
பார்வை
கயிறுகளினின்று
விடுபட முயலும்
விழிகள்!

‘நான் யார்’ –
அறிமுகப்படுத்தும்
அடையாள அட்டை!

புத்தாண்டே
தாழ்திறவாய்!

மார்கழிப்
பனியைப்
பருக!

சூரிய
ஒளியை
விழுங்க!

முதல்
மழைத்துளியை
கண்களில்
ஏந்த!

அன்னை
மடியில்
உறங்க!

மழலைகளின்
குரலில்
கரைய!

About The Author

3 Comments

  1. Girijamanaalan

    சிறு சிறு சொற்களில்
    சீர்மிகு கருத்துக்களைப்
    பொதிந்த கவிதை….என் மனதில்
    பதிந்த கவிதை!
    – கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.

  2. nithyan

    முன்பகல் வாங்கிய குழந்தையின் முத்தம்
    ந்ண்பகலில் மறந்து போகும் முத்தமிட்ட முகம் – வரிகளில்

    பணக்காகிதத்தைத் தேடுவதாகச் சொல்லி
    மனமகிழ்ச்சியைத் தொலைத்த கணிணி உலகினரின் கண்ணீர் தெரிந்தது.

Comments are closed.