பேசன் லட்டு

தேவையான பொருட்கள்:

ஒப்பட்டு ரவை – ½ கோப்பை,
பச்சைக்கடலை மாவு – 1 கோப்பை,
கோதுமை – 2 கோப்பை,
சர்க்கரை – 1 ¾ கோப்பை,
நெய் – உருண்டை பிடிக்கத் தேவையான அளவு,
ஏலக்காய் – 4,
லவங்கம் – 2,
முந்திரித் துண்டுகள் – 2 மேசைக்கரண்டி,
திராட்சை – 1 மேசைக்கரண்டி.

செய்முறை:

சர்க்கரை, ஏலக்காயுடன் லவங்கம் சேர்த்து மின்அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர், சிறிது நெய் விட்டு முந்திரித் துண்டுகளையும், திராட்சையையும் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். அதைத் தனியே எடுத்து வைத்துவிட்டு, சிறிது நெய் விட்டு ரவையைப் பொன்னிறமாக வறுத்து, பிறகு பச்சைக் கடலை மாவைச் சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு, அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக மணம் வந்தவுடன் ஒரு தட்டில் கொட்டி, அத்துடன் பொடித்த சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலந்து விட வேண்டும். அதே தட்டில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து விட்டு, கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகள் பிடித்துக் கொள்ளுங்கள். சத்து நிறைந்த இந்தப் பேசன் லட்டு குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. கோடை விடுமுறையில் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழுங்கள்! அவர்களிடம் இதற்கு எப்படி வரவேற்பு இருந்து என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author