மடை திறந்து… (15)

என்னப்பா, எல்லாருக்கும் வாழ்க்கை எப்படிப் போகுது? இங்கே எல்லாம் நலமே!

ஒரு நண்பருக்கு புது வேலை வாய்ப்பு ஒண்ணு வந்தது. ஆனா அதுனால எவ்வளவு பயனிருக்கும்னு சரியா தெரியலை. ஆன்மீக வழிகாட்டுதல் வேணும்னு கேட்டார். கிடைச்ச செய்தி சுவாரஸ்யமா இருந்தது. இப்போ இருக்கற வேலை ஒரு ஜாலியான ரோம்காம் போலன்னும் புது வேலை ஆக்ஷன் படம் போல இருக்கும்னும் சொல்லி உங்களுக்கு எந்த அனுபவம் வேணும்னு இருக்கோ அதைத் தேர்ந்தெடுங்கங்கறதுதான் செய்தி.. அவருக்குத் திரும்பவும் குழப்பம். இது படம் போற மாதிரி சிம்பிளான விஷயமில்லை; வாழ்க்கைப் பிரச்சினைன்னாரு. ‘சரி புதுவேலைல என்ன எதிர்பார்க்கறீங்க’ன்னு ஆரம்பிச்சு கொஞ்சம் ஆழமா போனா அவருக்குத் தேவை சுதந்தரம்னு தெரிஞ்சது. குழப்பங்கள் தீர்ந்து தெளிவான முடிவெடுக்க சுகம் செயல்முறையும் சுதந்திர உத்தியும் (இது இன்னும் உங்களுக்குச் சொல்லித் தரலை) சொல்லிக் கொடுத்தேன்.

அவருக்கு என்ன வேணும்னு தெளிவா தெரிஞ்சுக்க இந்த உத்திகள் கண்டிப்பா உதவும்கறது என்னோட நம்பிக்கை. நமக்கு என்ன சாப்பிடணும் போல இருக்குன்னு வேற ஒருத்தரால சொல்லமுடியாதில்லையா? நம்ம விருப்பங்களைக் கூட தெரிஞ்சுக்க முடியாம சில சமயம் மாயை நம்ம கண்ணை மறைச்சிடுது…

ஆழமா பாத்தீங்கன்னா, நம்மோட விருப்பங்கள் எல்லாமே ஏதோ ஒரு உணர்வை அனுபவிக்கறதுலதானிருக்கு. உதாரணமா, சில கேள்விகள் கேட்டுப் பார்ப்போம்

//ஏன் பெரிய வீடு வேணும்?
வசதிய வாழறதுக்கு
ஏன் வசதியா வாழணும்?
அப்போதான் மகிழ்ச்சியா இருக்கமுடியும்//

//ஏன் நல்ல வேலை வேணும்?
நல்ல அந்தஸ்து கிடைக்கணும்
ஏன் நல்ல அந்தஸ்து வேணும்?
அப்போதான் நாலு பேர் மதிப்பாங்க?
ஏன் நாலு பேர் மதிக்கணும்?
அப்போதான் நிறைவா இருக்கும்//

இப்படி நம்மோட எல்லா விருப்பங்களுமே மகிழ்ச்சி, நிறைவு, ஆனந்தம் போன்ற உணர்ச்சிகள் மேலதானிருக்கு. ஆனா நாம அதை மறந்துட்டு இந்த உணர்வுகளைத் தரும்னு நாம நம்பற செல்வத்துக்கோ, குறிப்பிட்ட மனிதருக்கோ அல்லது ஏதோ ஒரு வஸ்துவுக்கோ விருப்பப்படறதா நினைச்சுக்கறோம். இதெல்லாமே கிடைச்சாலும் நாம விரும்பற உணர்வுகள் கிடைக்காமப் போக வாய்ப்பிருக்கில்லையா? உதாரணமா ஒரு கோடி ரூபா லாட்டரில விழுந்தாலும் அதை அனுபவிக்கக் கூடிய சூழல் அமையலைன்னா அதனால என்ன பலன்?

அதனால நம்ம விருப்பங்களை சரியா புரிஞ்சுக்கிட்டு அவற்றை அடையறதுக்கான உத்திகளைப் பின்பற்றினா மற்ற செல்வங்கள் தானா அமையும். பிரபஞ்சத்துக்கிட்டே எனக்கு மகிழ்ச்சியா இருக்கணும்னு கேட்டுட்டு அது எப்படி வருதுங்கறதைப் பற்றி நாம கவலைப்படத் தேவையில்லை. எனக்கு கார் மூலமா மகிழ்ச்சி வேணும், காதல் மூலமா ஆனந்தம் வேணும் அப்படின்னெல்லாம் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்துக்கு நாம வழி சொல்லித் தரணுமா என்ன?

***

ஓஷோவோட பிரபஞ்சப் பூர்த்தி கவிதையை மொழி பெயர்த்த கீதா மற்றும் சரளாவுக்கு நன்றி. முதல் பங்கெடுப்பிற்காக சரளாவுக்கு ஒரு மின்னூல் பரிசு. சரளா, எல் எல் ஜே டாட் நிலா அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு ஒரு அஞ்சலனுப்பி வாங்கிக்கலாம்.

ராஜேஸ்வரி, உங்க ஊக்கத்துக்கு நன்றி. ஃபேஸ் புக்லயும் நண்பியா ஆகிட்டீங்க… நல்லது . வேற யாருக்காவது அந்த விருப்பமிருந்தா வாங்க இந்த முகவரிக்கு:

http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663

***

தாமரை இல்லப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிப் பேசிட்டிருந்தோமில்லையா? இந்தியாவில என்ன மாதிரி வேலை வாய்ப்புகளிருக்குன்னு ஒரு பட்டியல் பார்த்தேன்:

•Announcers at Railway Stations,
•Bus Stops and Airport(T),
•Caneweavers (T),
•Instrmentalists,
•(staff Artists) (T),
•Measures(T),
•Musicians (T),
•Office Superintendent (H).
•Music Teacher(T),
•Packers (T)
•Stenographers (with Dictophone and Digital Typewriters),
•Teachers) Primary -T&AR),
•Telephone Operators (Small Boards with Electronic Beep and Embossed Digits),
•Lathe Operators,
•Press operators,
•Stampers,
•Weavers,
•Packers,
•drillers,
•Fitters,
•Chippers,
•Teachers in Social Science.

T- With Training
H- With a Helper
A- With Aids

உங்கள்ல யாருக்காவது இந்த மாதிரி வேலை வாய்ப்புகள் தெரிஞ்சா எனக்கோ அல்லது இல்லத்துக்கோ எழுதறீங்களா, ப்ளீஸ்?

கவிதா கொஞ்சம் ஆராய்ச்சி செய்து ஒரு பயனுள்ள தகவல் அனுப்பி இருந்தாங்க:

அகில இந்திய வானொலி நிலையங்கள், "வாணி" எனும் சான்றிதழ் பயிற்சியை அளிக்கின்றன. இந்தச் சான்றிதழை, இதர பிற குரல் வேலை வாய்ப்புகளுக்கு, பாஸ்போர்ட் என்று சொல்லலாம். உரிய வயது வரம்புடன், ஆண், பெண், மாற்றுத் திறனாளி எவர் வேண்டுமானாலும், விண்ணப்பிக்கலாம். பட்டதாரியாக இருப்பது நல்லது.குரல் தேர்விற்கு, சிறிய அளவிலான ஆடிஷன் நடக்கும். இது, குரல் இனிமையைப் பரிசோதிக்கும் அடிப்படைத் தேர்வு. பயிற்சிக் காலம், ஐந்து தினங்கள் மட்டுமே. இந்தப் பயிற்சிக்குப் பின், வானொலி பகுதி நேர பணிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்; எதிர்காலத்தில், முழு நேரப் பணியை பெறவும் முடியும்.

உங்களுக்கும் இந்த மாதிரி ஏதாவது தகவல்கள் தெரிஞ்சா எழுதுங்க.

***

தமிழ்நாட்டில ஆட்சி மாற்றம் போலிருக்கு… என்சாய், மக்களே!  வடிவேலுவுக்கும் குஷ்புவுக்கும் ஆப்புதான் போலிருக்கு. ஐயோ… பாவம்…

மேலைநாட்டு அரசியலைப் பார்க்கும்போது சில சமயம் இந்தியாவில இந்த அரசியல் நாகரீகமெல்லாம் எப்போதான் வரப்போகுதோன்னு இருக்கும். ஒரு ராஜா போனா இன்னொரு ராணிங்கற அடிமைத்தனம் போய் கொள்கை அடிப்படையிலான அரசியல் எப்போதான் வரும்?

சில சமயம் மரியாதைங்கற பேர்ல நாம ஈகோவை வளர்த்துவிடறோம்னுதான் தோணுது. மரியாதை வேற; அடிமைத்தனம் வேற. நாம அரசியல்வாதி, ஆன்மீக குருக்கள், அதிகாரிகள் போன்றவங்களையெல்லாம் உயரமான மேடையில தூக்கி உக்கார வச்சுட்டு கீழேருந்து கையெடுத்துக் கும்பிட்டு, கால்ல விழுந்து சரணாகதி ஆயிட்டு அங்கேயே நின்னுடறோம். எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில பிரபஞ்சத்தைப் பூர்த்தி செய்யறோம்னா ஒரு பெரிய புதிரோட சிறுசிறு துண்டுகள்தானே நாம ஒவ்வொருத்தரும்! அப்போ எல்லாருமே சமம்தானே? பரஸ்பர மரியாதைதானே அங்கே இருக்கணும்?

இங்கே எவ்வளவு பெரிய அரசியல்வாதியா இருந்தாலும் மக்கள்தான் அவங்களுக்கு பாஸ். நடுத்தெருவுல கூட நிக்க வச்சு கேள்வி கேப்பாங்க. பதில் சொல்லிதான் ஆகணும். சொல்லுவாங்க இந்த ஊர் அரசியல்வாதிகள். தொலைக்காட்சில கிழிகிழின்னு கிழிப்பாங்க… பவ்யமா பதில் சொல்லத் தெரியணும். இல்லைன்னா நீ லாயக்கில்லைன்னு மக்கள் ஒதுக்கிடுவாங்க.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க தனியா காரை எடுத்துட்டு வராம பொது போக்குவரத்துகளைப் பயன்படுத்துங்கன்னு சொல்லிட்டு அரசியல்வாதிகள் பத்துக் கார்கள் புடை சூழ பவனி வரமுடியாது. முன்னாள் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்டன் பதவில இருக்கும்போதே ரயில்லதான் சாமானியரா பயணம் செய்வார். நானே பார்த்திருக்கேன். யாரும் அவரைச் சூழ்ந்துகிட்டு வேடிக்கை பார்க்க மாட்டாங்க… கால்ல விழமாட்டாங்க… விண்ணப்பம் சமர்ப்பிக்க மாட்டாங்க…

அதே போல எவ்வளவு பெரிய சுகவரா அல்லது ஆன்மீக குருவா இருந்தாலும், பேர் சொல்லிதான் கூப்பிடுவாங்க. சமமாதான் உட்காருவாங்க. மனுஷனோட மனுஷனாதானிருப்பாங்க.

அதுதான் சரி, இதுதான் சரின்னு எதுவுமில்லை. எது யாருக்குப் பிடிக்குதோ அதைப் பின்பற்றலாம். ஆனா மற்ற நடைமுறைகளைப் பற்றித் தெரிஞ்சுக்கறது நமக்கு இன்ன பிற ஜன்னல்களைத் திறக்கலாம். அதனால உங்ககிட்டே பகிர்ந்துக்கறேன். எது எப்படி இருந்தாலும் எல்லாம் ஒரு அனுபவமே!

On that note… உங்களுக்கு அரசியல்ல ஆர்வமிருந்தா… West Wingனு ஒரு சீரியல் வந்தது அமெரிக்காவில. அதனோட டிவிடி பாருங்க. எங்களுக்கு அது ரொம்ப ரொம்பப் பிடிச்சது. வெள்ளை மாளிகைல நடக்கற அரசியல் நாடகம். ரொம்ப நல்ல பாத்திரப் படைப்பு; திரைக்கதை. அதிபரா நடிச்ச மார்டின் ஷீன் இன்னும் எங்களுக்கு ‘President Bartlet’தான். அவ்வளவு அற்புதமா நடிச்சிருந்தார். அழுவாச்சி காவியங்களை விடுத்து இந்த மாதிரி வித்தியாசமான படைப்புகள் தமிழ்ல வரவே முடியாதான்னு ஏக்கமா இருக்கு. எடுக்கறதுக்கு நான் ரெடி… தயாரிக்கறதுக்கு நீங்க ரெடியா?

நானே இறங்கி தயாரிக்கற காலம் வராமலா போயிடும்? எனக்கு டிவி சேனல் நடத்தணும்னு கூட ஆசை… ஆமாப்பா… எனக்குச் சின்னச் சின்ன ஆசையெலாம் கிடையாது… எல்லாம் பெரிய பெரிய ஆசைதான்

***

பொதுவாவே நாம ரொம்ப உணர்ச்சிவசப்படற இனமா இருந்தாலும் ஏனோ அன்பை வெளிப்படுத்தறதல மட்டும் ரொம்ப கஞ்சத்தனமிருக்கு. ‘ஐ லவ் யூ’ங்கறதை ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு சொல்ல மட்டும்தான் பயன்படுத்தறோம் – அதைக் கூட ஏதோ கெட்ட வார்த்தை போலத்தான் பார்க்கறோம் (ஒருத்தரைக் காதலிச்சா அதைச் சொல்றது அவ்வளவு பெரிய குத்தமா, சாமி?). ஒரு நண்பர்கிட்டே எப்போவாவாது வார்த்தைல அன்பை வெளிப்படுத்தறோமா? நண்பரை விடுங்க. அப்பா, அம்மா, சகோதரன், சகோதரிகிட்டேயே நம்மால ‘நான் உன்மேல அன்பா இருக்கறேன்’னு சொல்ல முடியுதா? ஏன்?

ஒருத்தரை ஒருத்தர் கட்டி அணைச்சு அன்பை வெளிப்படுத்தறது மேலை நாடுகள்ல ரொம்ப ரொம்ப சகஜம். சமாதானத்தைப் பரப்பறதுக்காக ஒரு கூட்டம் ‘Free hug’னு ஒரு இயக்கமே ஆரம்பிச்சிருக்காங்க… பாருங்க:

http://www.youtube.com/watch?v=vr3x_RRJdd4

இந்த வீடியோ 5000+ மக்களுக்குப் பிடிக்கலையாம். இவங்க எல்லாம் நம்ம ஊர் கலாசாரக் காவலர்களா இருப்பாங்களோ?

ஆனா ‘hugging saint’னு அழைக்கப்படற அம்மா அமிர்தானந்த மயீ எதைப் பற்றியும் கவலைப்படாம எத்தனையோ இலட்சக்கணக்கான மக்களை எந்த வித்தியாசமும் பார்க்காம அணைச்சு ஆறுதல் தர்றதைப் பாராட்டியே ஆகணும். நான் கூட அவங்ககிட்டே ஒரு அன்பம் (Hugக்கு நம்மளோட சங்கேத வார்த்தை ) வாங்கிருக்கேன். (ஒரு குருவை விடறதில்லை, போங்கோ )

நம்ம வட்டாரத்தில முதன்முதலா எனக்கு அன்பம் கொடுத்து அசர வச்சது சங்கம் சித்ரா… கலக்கிட்டாங்க சங்ககாலத் தோழி போலவே!

"ஒரு huggie கொடு செல்லம்"னு எல்லாக் குட்டிப் பசங்ககிட்டேயும் நான் கேட்டே வாங்கிடுவேன். ‘ஒரு அணைப்பு கொடு’ன்னு தமிழ்ல கேட்க முடியாது. ஏன்னா உடனே ‘இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடு’ போன்ற காட்சிகள் எல்லார் மனக்கண்லேயும் வந்திடும். என்ன செய்ய…. நடைமுறையில சில சமயம் வார்த்தைகள் கொச்சைப்படுத்தப்பட்டுடுது… அதுக்காகப் புலம்பாம அன்பம் மாதிரி நாமளா புதுசு புதுசா கண்டுபிடிச்சுக்க வேண்டியதுதான்.

அது சரி, நீங்க உங்க வட்டத்தில எத்தனை பேர்கிட்டே அன்பை வார்த்தைகளால அல்லது அன்பம் மூலமா வெளிப்படுத்திருக்கீங்க? இதுவரைக்கும் செஞ்சதில்லைன்னா, ஒரு சின்ன ஆரம்பமா உங்க குழந்தைகிட்டேயோ அம்மா கிட்டேயோ ஆரம்பிச்சுப் பாருங்களேன்!

அந்த உத்வேகம் வரதுக்கு நான் உங்க எல்லாருக்கும் இப்போ ஒரு இ-அன்பம் தர்றேன்

எத்தனை பேர்கிட்டே வெளிப்படுத்தினீங்கன்னு எழுதுங்க… யார் அதிகம் செய்யறீங்களோ அவங்களுக்கு ஒரு மின்னூல் பரிசு (மினி, கீதா, கலை மூணுபேரும் ஒண்ணு மண்ணா ஆயிட்டதுனால ஆட்டத்துல சேர்த்தி கிடையாது ) – வூட்டுக்காரர்கிட்டேயே பத்துமுறை சொன்னேன்னு அழுகுணி ஆட்டமெல்லாம் ஆடப்படாது… சரியா?

***

Slumdog Millionnaireக்கப்பறம் அனில் கபூர் ’24’ங்கற அமெரிக்க சீரியல்ல நடிச்சிருக்காரு ஒரு இஸ்லாமிய குடியரசின் அதிபரா வர்றாரு. முக்கியமான கதாபாத்திரம். சமாதான உடன்படிக்கை செய்யறதுக்காக அமெரிக்கா வர்ற அவரைச் சுற்றி தீவிரவாதிகள் பின்னுற வலைதான் கதைக் கரு. நல்லாவே இருக்கு. 24 – Season 8. முந்தின சீசன்லாம் பார்க்கலைன்னாலும் கதை புரியும்.

***

இந்த வாரக் கொடைகள்: (நான் கொடை எழுதலைன்னா நீங்களும் நிறுத்திடறதா?)

1.ஒரு வாரத்தில ரெண்டு ஜாலியான படம் பார்த்தது (நேரமில்லை, நேரமில்லைன்னு சொல்லிட்டு படம் பார்க்கறியான்னு நிலாக்குழு என்னை முறைப்பாங்க – மக்களே, இதெல்லாம் பயண நேரத்திலேயோ, வார இறுதிலேயோ, வெந்து நொந்து இதுக்கு மேல வண்டி ஓடாதுன்னு ஓய்ஞ்சப்பறமோ பார்க்கற 1.5 மணி நேரப் படங்கள். அதனால கோச்சுக்காதீங்க, ப்ளீஸ்)

2.நண்பர் கூட சாப்பிட்ட மதிய உணவு

3.இன்னொரு நண்பருக்கு சுகமளிக்கும் உத்திகளை அறிமுகப்படுத்தினது

4.பழைய நண்பர்கள் சிலர் தொலைபேசினது

5.ஷுவுக்கெல்லாம் பாலிஷ் போட்டது (எவ்வளவு நாளா தள்ளிப் போச்சு!) – எனக்குப் பிடிக்கவே பிடிக்காத வேலை. அமெரிக்காலருந்து சித்தப்பா, சித்தி வரதுன்னால பயந்து செஞ்சேன் (மரியாதை!!! ). இதோட இன்னும் நிறைய வீட்ல சுத்தமாச்சுங்க அவங்க புண்ணியத்தில (வாழ்க சித்தப்பா, சித்தி). அவங்க ரெண்டு பேரும் பொறுப்புன்னா பொறுப்பு. நானெல்லாம் எப்போதான் கத்துக்கப் போறேனோ!
6.ஃபேஸ்புக்ல போட்ட புது ப்ரொஃபைல் ஃபோட்டோ (ஈகோ… ஈகோ ) – இந்த வாரம் அதை இங்கேயும் போட்டு ஒப்பேத்தியாச்சு. இந்த ஃபோட்டோ செயின்ட் லூசியா போயி இறங்கின மறுநாள் காலைல காஷுவலா எடுத்தது. படத்தைப் பற்றி ‘நான் மைனஸ் மேக்கப்’னு ஃபேஸ் புக்ல ஜாலியா சொல்லிருந்தாலும் நான் பெருசா மேக்கப் எல்லாம் போட்டுக்கறதில்லை. வெளியே போகும் போது மட்டும் Lakme compact! (ஊர்லருந்துதான் வாங்கிட்டு வர்றேன்!) – சேச்சே… இதை இங்கே சொல்றதுனால எனக்கு கமிஷனெல்லாம் கிடையாதுங்க… அவ்வளவு பெரிய பிரபலமா நம்ம?!.

சொன்ன மாதிரியே நீ….ளமா எழுதிட்டேன்… நீங்களும் நீ….ளமா பதிலெழுதுங்க.

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும்… அன்புக்குரியவங்களுகெல்லாம் அன்பைச் சொல்லி அன்பம் கொடுத்து அன்பைப் பரப்புங்க…

அபரிமிதமான அன்புடன்,

நிலா

About The Author

7 Comments

  1. viji

    னன் என்னொட மகலுகு(13 வயசு) எப்பவும் அன்பம் செய்துதான் முத்தம் குடுத்து தான் அலுவலகம் போவென். ஆனால் நிரய சமயம் நினைச்சிருக்கேன் நம்ம அம்ம எல்லாம் எப்படி எல்லாம் நமக்கு குடுததெய் இல்லையேநு நினைச்சி ஏங்கி இருக்கென். என்னுடைய மகலுக்கு கடைசி வரைக்கும் இதெய் மாதிரி கடைசி வரைக்கும் கொடுக்குனும்னு நினைக்கிரேன். அனால் எங்க வீட்ல எல்லாரும் கின்டல் செய்ராங்க. நான் கூட நினைச்சேன், நாம செய்ரது தப்போன்னு. இதை படிச்சவுடந்தான் நான் செய்ரது தப்பு இல்லன்னு எனக்கு தொனுது.

  2. Suhanya

    Hi Nilla
    How are u,Anbam nalla varthai(tamil la thazuval nu oru varthai irukku),Intha tamil unicode rombha kashtama iruku pa,help pop up madiri podakoodatha,tamil la type pannum pothu typing error niraya varamadiri iruku(Dinamani la irukara madiri iruntha uthaviya iruku monu ninaikaren).Tamil la comment podanumra aasaila sonnen.Just a vendugol.
    Enn ponnu oru anbam pisasu,oru nalaiku oru nooru thadavai anbam koduthuduva,athuvum nama mood out nu tharincha pothum nam sirikara varai hug ,kiss ella eathavathu pasi sari panniduva.Eathu nan use pannura sugham akikkara uthi.
    Anbha velipadutharathu pathi solli iruntheengha,Nan puthusa hug pannuna palaya friends lam enna saivangha nu thariyala,Atleast varthai yala yavthu velipaduthalamnu plan pannuren.Eathana parunu appauram solluren.
    Bye now.

  3. கீதா

    நிலா,

    அன்பம் பத்தி அழகாச் சொல்லியிருக்கீங்க. சுகன்யாவின் மகள் மாதிரிதான் என் மகனும் மகளும். ஒரு நாளைக்கு எத்தனை முறைன்னு கணக்கெல்லாம் இல்லை, தோணும்போதெல்லாம் அல்லது என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஐ லவ் யூ சொல்றதும், அன்பம் கொடுக்கிறதும் …. அப்பப்பா…. நான் சலிச்சுக்குவேன்.

    பசங்களா…. ஸ்கூல் பேகை ஓரமா வக்கக்கூடாதா? வழியில வச்சிருக்கீங்க பாருன்னு கோவமா சொன்ன நிமிஷம் ரெண்டுபேரும் கோரஸா சாரிம்மா…. ஐ லவ் யூ அம்மான்னு சொன்னா எப்படி இருக்கும். ஐ லவ் யூ அம்மான்னு சொல்லும்போதெல்லாம் வெளியில சலிச்சுக்கற மாதிரி காட்டினாலும் உள்ளுக்குள் அத்தனை சந்தோஷமா இருக்கும். அன்பா இருக்கிறது மட்டும் முக்கியமில்லை, அன்பை வெளிப்படுத்தவும் தெரியணும் என்பதையே என் குழந்தைகளிடமிருந்துதான் கத்துகிட்டேன். நம் பெற்றோரிடம் எத்தனை அன்பாக இருந்தாலும் அந்த அன்பை வெளிப்படுத்த நாம் அறிந்திருக்கவில்லையென்பதை நினைக்கும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

    உங்க போட்டோ இயல்பாவும் எளிமையாவும் ரொம்ப நல்லா இருக்கு.

  4. maleek

    யூ மீன் கட்டிப்பிடி வைத்தியம்?.
    மடை திறந்தால்…….வெல்லம்!

  5. kumar

    “”வடிவேலுவுக்கும் குஷ்புவுக்கும் ஆப்புதான் போலிருக்கு. ஐயோ… பாவம்…””
    ……………..

    kindly avoid such comments

    nila rasigan”kumar””

  6. SubasriSriram Bahrain

    வணக்கம் நிலா
    என்னை பொறுத்தவரை நம்முடைய உணர்வை எப்படி எல்லாம் வெளிபடுத்த முடியுமோ அப்படி வெளிபடுத்தலாம். என் அனுபவத்தில் நான் அனைவரிடமும் ஆண்,பெண் பேதம் பார்க்காமல் தான் பழகுவேன். அன்பை அளந்து கொடுக்காமல்,சந்தோஷமாக கொடுக்கலாம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. என்கணவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கிளினிக் சென்றோம். அப்பொழுது ஒரு கணவன் மனைவி ஒரு பெண்குழந்தை வந்து இருந்தனர். அவர்கல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவில். அந்த பெண்குழந்தையின் பெயர் பவிகா. அங்கு அவளுடைய அம்மாவுக்கு ட்ரிப்ஸ் ஏற்றிக்கொன்டு இருந்தனர். அந்த குழந்தை என்னிடம் வந்து உட்கார்ந்து கொண்டு விளையடா ஆரம்பித்துவிட்டது. இந்தியிலும்,ஆங்கிலத்திலும் தன்னுடைய மழலை மொழியால் பேசிக்கொண்டே இருந்தது. அக்குழந்தைக்கு நான்கு வயதுதான். ஒரு மணி நேரம் கழித்து நாங்கள் கிளம்பியபோது அந்த குழந்தை என்னுடைய,கணவருடைய சுண்டிவிரலை பிடித்துக்கொண்டு நானும் வருவென் என்று அவள் அடம்பிடித்தாள். அவள் அப்பாவிடம் நான் அவர்களுடன் போவேன் என்று அடம்பிடித்தாள். கடைசியில் கிளினிக்கில் கதறி ரொம்ப சத்தம் போட்டாள். என் கண்ணில் அழுகை வந்துவிட்டது. நான் ஒன்றும் பெரிய சாதனை செய்யவில்லை. ஆனால் அந்த குழந்தைக்கு என் அன்பை வெளிபடுத்தினேன். அந்த பிஞ்சு குழந்தையின் மனசில், அத்தூணூன்டு இதயத்தில் அன்பை புரிந்துகொண்டு வெளிபடுத்தியவிதம் என்னை என்னவோ செய்துவிட்டது. எனவே நான்கு வயதுஆனால் என்ன? நாற்பதுவயது ஆனால் என்ன? நம் கள்ளம்கபடம் இல்லாமல் தூய அன்புடன் யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்கள். மனதார அணைக்கும்போது அங்கு காமம் இல்லாமல் அன்புதான் வெளிப்படும். நல்லவர்களைபற்றி மட்டும் சிந்திப்போம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைபடவேண்டாம். நாம் உயர்வான எண்ணத்தை வளர்த்துக்கொள்வோம். அன்புக்கு அன்பையே விதைத்து அன்பையே அறுவடை செய்வோம். மிக்க நன்றி நிலா. அருமையான பதிவு இந்தவாரம் பதிவுசெய்ததற்க்கு. வாழ்க வளமுடன்.

  7. கலைய்ரசி

    அன்பு நிலா,
    http://savethewords.org/ என்ற இணைய தளத்தைப் பற்றி அண்மையில் தெரிந்து கொண்டேன். ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிடுவோர் துவக்கப்பட்டுள்ள இந்த தளத்தைத் திறந்து பார்த்தால் ஆங்கிலத்தில் அழிந்து வருகின்ற ஏராளமான சொற்கள் கண்முன் வலம் வருகின்றன. அந்த வார்த்தைகளுள் ஒன்றை நாம் தத்து எடுத்துக் கொண்டு அதனை நம் சொந்தக் குழந்தை போல் பாவித்து அன்றாடம் பயன்படுத்தி அதை அழியாமல் காப்பாற்ற வேண்டுமாம்.

    உலகில் பெரும்பான்மையோரால் பேசப்பட்டு முதல் இடத்தில் இருக்கும் ஆங்கிலத்தில் அழிந்து வரும் சொற்களைக் காப்பாற்ற எப்படியெல்லாம் முயற்சி எடுக்கிறார்கள் என்பதை அறிந்து வியக்காமல் இருக்க முடியவில்லை. நாமோ அழகான தமிழ் வார்த்தைகள் பல்லாயிரம் இருந்தும், அவற்றை விட்டு விட்டு ஆங்கிலத்தைக் கையாள்கிறோம். எடுத்துக்காட்டாக அருவி என்ற அழகான தமிழ்ச்சொல் இருக்கும் போது ஆங்கில மொழிபெயர்ப்பில் நீர்வீழ்ச்சி (waterfall) என்கிறோம்.

    இப்படி தமிழ்ச் சொற்கள் அழிவதற்கு தமிழர்களாகிய நாமே காரணமாக இருக்கும் போது, அன்பம் என்ற புதுச்சொல்லை உருவாக்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கும் நிலாவுக்கு ஓராயிரம் இ-அன்பத்தை அளித்து மகிழ்கிறேன். பாராட்டுக்கள் நிலா.
    கலையரசி.

Comments are closed.