மடை திறந்து… (36)

எல்லார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்பா. நீங்க விரும்பற எல்லாமும் கிடைக்கவும் அதோட இன்னும் அதிக வளங்கள் உங்க வாழ்க்கைல வரவும் பிரார்த்திக்கிறேன்.

2012 எப்படி இருக்கும்னு பலவிதமான கணிப்புகள் இருக்கு. உலகம் அழிஞ்சிடும்னு ஒரு பக்கமும் மனித இனம் புதிய பரிணாமத்தை எட்டப் போகுதுன்னு இன்னொரு பக்கமும் விதவிதமான கணிப்புகள். என்னோட நம்பிக்கை பிரகாசமான எதிர்காலத்தைத்தான் காட்டுது. எது நடந்தாலும் நலமே!

‘Working with your soul’னு ஒரு நூல் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் – ஆன்மான்னா என்ன? ஆவின்னா என்ன? நம்ம வாழ்க்கையோட நோக்கத்தை எப்படி தெரிஞ்சிக்கறது? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தருது இந்த நூல். நம்மோட ஒவ்வொரு பிறப்புமே நம்ம ஆன்மாவை மேம்படுத்தற பாடங்களை கத்துக்கற ஒரு பயணம்தான்னு சொல்ற இந்த நூல், இந்தப் பாடங்கள் எந்தக் கருவை அடிப்படையா அமைஞ்சிருக்குங்கற க்ளூ நம்மோட பிறந்த சூழல்ல இருக்குன்னு சொல்லுது. அதாவது எந்த குடும்பத்தில, எந்த விதமான சூழல்ல, எப்படிப்பட்ட கலாசாரத்தில பிறந்தா நாம கத்துக்க வேண்டிய பாடங்களுக்கான களம் கிடைக்கும்னு நம்மோட ஆன்மா தீர்மானிச்சு அங்கே நம்மோட ஆவியை அனுப்பும். (தலை சுத்துதா?)

இன்னும் எளிமையா சொன்னா பெரும்பாலான சமயங்கள்ல நம்ம வாழ்க்கைப் பாடங்களோட சிலபஸ் நம்ம குடும்பப் பின்னணில இருக்கு. பிரதான ஆசான்கள் நம்ம குடும்பத்தினரா இருப்பாங்க.

பொதுவா நம்ம பெற்றோரை மதிக்கறதும் கவனிச்சிக்கறதும் நம்மோட கடமைன்னு ரொம்ப அழுத்தமா நம்ம மனசில பதிஞ்சிருக்கு. ஆனா நம்ம பெற்றோரோட நமக்கு ஆத்மார்த்தமான உறவு இருக்கான்னு நாம நம்மை பெரும்பாலும் கேட்டுக்கறதே இல்லை. கடமைக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. நாம வாழ்க்கைல இருக்கற சவால்களுக்கான மூல காரணம் நம்ம பெற்றோரோட நமக்கு இருக்கற உறவில இருக்குன்னு பல போதனைகள் சொல்லுது. உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்குமிருக்கற உறவு எவ்வளவு ஆத்மார்த்தமானதுன்னு தெரிஞ்சிக்க கீழ்க்கண்ட கேள்விகளை நீங்க கேட்டுப் பார்க்கலாம்:

என் தாய் எப்படிப்பட்டவர்?

என் தந்தை எப்படிப்பட்டவர்?

நான் என் பெற்றோரால் எவ்வளவு அன்பு செய்யப்பட்டேன்?

எனது சிறுவயது நினைவுகள் ஏற்படுத்தும் உணர்வுகள் எப்படிப்பட்டவை?

நிலாச்சாரல் வாசகர்களால மிகவும் விரும்பப்படும் பகுதிகளில் ஒண்ணு ஜோதிடம் கேளுங்கள். இந்த சேவையை எப்படி விரிவு படுத்தலாம்னு யோசிச்சிட்டிருந்தப்போ கைரேகையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைக் கணிப்பு பற்றி படிச்சேன். ரொம்ப சுவாரஸ்யமான சில தகவல்கள் தெரிஞ்சது:

கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்தான் முதன்முதலில் கைரேகை ஜோதிடம் பற்றிக் குறிப்பிட்டவர்; மாவீரன் அலெக்சாண்டருக்கும் மாவீரன் நெப்போலியனுக்கும் இதில் மிக நம்பிக்கை இருந்தது.

உங்களுக்கும் நம்பிக்கை இருந்து கைரேகை பார்க்க விரும்பினால் பரதன் உதவ தயாராக இருக்கிறார். விபரங்கள் கீழே:

http://nilacharal.com/palm_reading.asp

எனக்கு தனிப்பட்ட விதத்தில் ஜோதிடத்தில் விருப்பம் கிடையாது. தவிர, நான் சார்ந்திருக்கும் புதுயுக போதனைகள் விதியை நமது விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்னு சொல்லுது. இந்த நம்பிக்கை எனக்குப் பிடிச்சிருக்கு. நாம விதி ஆட்டுவிக்கற வெறும் பொம்மைகளா இருந்தா வாழ்க்கையில என்ன பிடிப்பு இருக்க முடியும்? ஆனாலும் ஆவியுலகத் தொடர்பில பல முறை எதிர்காலத்தைப் பற்றி சொல்ல நேர்ந்திருக்கு. என்னோட புரிதல் என்னென்னா தற்போதைய நிலவரப்படி எதிர்காலத்தை ஓரளவு கணிக்க முடியும். ஆனா நாமோ நம்மைச் சார்ந்தவங்களோ எடுக்கற முடிவுகள் ஒவ்வொண்ணும் நம்ம எதிர்காலம் எப்படி இருக்கும்கறதை நிர்ணயிக்கறதுல முக்கிய பங்கு வகிக்கும்.

அதாவது வாழ்க்கை ஒரு Co-creation – பிரபஞ்சம் அனைத்தும் சேர்ந்து எழுதற ஒரு நாடகம். அதாவது நீங்க கதையோட முதல் வரியை ஆரம்பிக்கிறீங்கன்னு வச்சுப்போம். நான் இதைப் பார்த்துட்டு கதை எப்படிப்போகும்னு கணிக்கலாம். ஆனா அடுத்த வரியை உங்களைச் சார்ந்தவங்க எழுதும்போது கதையோட போக்கு முற்றிலுமா மாறலாம்…

உதாரணத்துக்கு நான் ‘அந்த பங்களா பாழடைந்து பயங்கரமாயிருந்தது’ அப்படின்னு ஒரு கதையை ஆரம்பிக்கறேன்னு வச்சுப்போம். நீங்க என்ன நினைப்பீங்க? இது ஒரு பேய்க்கதைன்னு நினைக்கறதுக்கு நிறைய வாய்ப்பிருக்கில்லையா?
அடுத்த வரில நம்ம கீதா ‘ஆனால் அதனுள்ளே குடியிருந்த இதயங்களில் அன்பு அபரிமிதமாய்ப் பொங்கிப் பரவிக்கொண்டிருந்தது’ அப்படின்னு எழுதினாங்கன்னு வச்சுக்கங்க… கதையோட போக்கு முற்றிலுமா மாறிடுச்சு இல்லையா? அப்படித்தான் வாழ்க்கையும். அதனால ஜாதகம் சரியில்லை, அப்படி இப்படின்னு யாராவது சொன்னா, அதைப் பெரிசா எடுத்துக்கத் தேவையில்லை. ஜோதிடம் கேளுங்கள் காயத்ரி பாஸிடிவா, பரிகாரங்களோட, நம்பிக்கை ஏற்படுத்தற மாதிரி பலன் சொல்றாங்க. அந்த ஸ்டைல் எனக்கு பிடிச்சிருக்கு.

விடுமுறை கடகடன்னு ஓடிப்போச்சு. எவ்வளவோ செய்யணும்னு நினைச்சு எதுவுமே செய்யமுடியலை. நினைக்காத ஏதேதோ செய்ய வேண்டியதாகிப் போச்சு. சும்மா இருக்கற திறமை எனக்கில்லைன்னுதான் நினைக்கிறேன். டோலே சொல்வார், ‘Just Be’. ஆனா நான் Humanbeingஆ இல்லாம Humandoing ஆகவே இருக்கறேன். அதுக்குக் காரணம் ஈகோவோட பாதுகாப்பின்மைதான். எங்கே சும்மா இருந்தா தன்னோட இருப்பு தேவை இல்லாததாகிவிடுமோ என்கிற பயத்தில் ஈகோ எப்பவும் என்னை பிஸியாவே வச்சிருக்கு. அதை நான் உணர்றேன். அந்த விழிப்பு இந்த வலையிலேர்ந்து என்னை மீட்டு வரும்னு நம்பிக்கை இருக்கு.

போன வாரம் சுகந்தி மற்றும் அப்பாவி சொன்ன கருத்துக்கள் மேல எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனா அவங்களுடைய கருத்துக்களை மதிக்கிறேன். கருத்து வச்சிருக்கறதும் அதைப் பகிர்ந்துக்கறதும் அவங்களோட உரிமை. அதனால அந்தக் கருத்துக்கள் அதுபாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே எனக்கு உடன்பாடில்லைன்னா கூட! எனக்கு உடன்பாடுள்ள கருத்துக்கள் மட்டும்தான் என் உலகத்தில இருக்கணும்னா நான் பல வழிகளை அடைக்கிறேன்னுதான் அர்த்தம். ‘Agree to disagree’ – அதாவது வேறுபட ஒப்புக்கொள்வோம் என்கிற கொள்கை மேல எனக்கு ரொம்பப் பிடிப்பு உண்டு. இதைப் பற்றி முன்னால நிறைய எழுதி இருக்கேன். அமுதென்றும் நஞ்சென்றும் தலைப்பில எழுதின கட்டுரைத் தொகுப்புகள் இந்தக் கருத்தை அடிப்படைய வச்சு அமைஞ்சவைதான். கறுப்புக்கும் வெளுப்புக்கும் இடையில் பல சாம்பல் வண்ணங்களுண்டு என்பதை உணர்ந்தா வாழ்க்கை சுமுகமா இருக்கும்கறது என்னோட தாழ்மையான கருத்து. அமுதென்றும் நஞ்சென்றும் இன்னும் அச்சுல வரலை. ஆனா மின்னூலா கிடைக்குது:

https://www.nilacharal.com/ebooks_list.asp

சரிப்பா…. அடுத்த வாரம் சந்திக்கலாம்.

கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்புகொள்ளலாம்:

எல்எல்ஜ.நிலா@ஜிமெயில்.காம்
http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663
http://groups.google.com/group/neyam

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

4 Comments

  1. Maithreyi Nath

    Destiny is a broad framework. Within that framework we can make our own choices. We make those choices, depending on our beliefs, conscience, life values and circumstances. So, within our destiny the final outcome depends on us. For example, I am born into an orthodox, not-so-educated, middle class family, with 4 brothers and 3 sisters. My mom is a housewife and my dad is a state employee. Here my destiny is based on my karma – my family background, country, religion and culture into which I am born. If I want to go for higher studies, its up to me to make the most of what I have and work harder. If I believe that my destiny is to be born into middle class family with limited resources, and that I must become like my mom, then I will be married off at 20 years to a bank clerk or technical assistant and I will end up as yet another housewife…..

  2. Appavi

    //I will be married off at 20 years to a bank clerk or technical assistant and I will end up as yet another housewife…..//
    காதலும், அன்பும் தம்பதியினரின் வேலை/தொழில்/வருமானம் சார்ந்து மாறுமா? திருமணம் என்பது நல்ல குணநலன்களுடன் கூடிய ஆணுடனோ/பெண்ணுடனோ இணை சேர்வதுதானே? பரஸ்பரம் புரிதல்களுடன் கூடிய மகிழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதே அழகிய வாழ்க்கை எனில், அதில் பொருளாதார ரீதியான மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களிடையே மாறித்தான் இருக்குமா?

  3. பீட்டர்

    நிலாச்சாரல் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உலக அமைதிக்கும், அரசியல், பொருளாதார நிலைத்தன்மைக்கும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக!
    அன்புடன்
    பீட்டர்
    மலேசியா

Comments are closed.