மடை திறந்து… (8)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கே எல்லாம் வழக்கம் போலத்தான்.

புது சுகமளிக்கும் உத்தி ஒன்றுக்கு நேற்றைக்கு சான்றிதழ் வாங்கிய என்னை நானே பாராட்டிக்கிறேன் . Body Talk Accessங்கறதுதான் இந்த உத்தி. காலைல அந்த பயிற்சி வகுப்புக்குப் போகும்போது பயங்கர களைப்பாத்தான் போனேன். திரும்ப வந்தப்போ புத்துணர்ச்சியோட வந்த என்னைப் பார்த்து ராஜு ரொம்ப ஆச்சரியப்பட்டார். உடம்பில இருந்த தசைப்பிடிப்புகளெல்லாம் தன்னால போயிடுச்சு.

நம்ம உடலுக்கு இயற்கையாகவே இருக்கற சுகமளிக்கும் ஆற்றலை முழுமையாக வெளிக் கொண்டு வர்றதுதான் இந்த உத்தியோட நோக்கம். அதாவது நம்ம வாழ்க்கை ரொம்ப stressfullஆக இருந்தா மூளையால உடல்ல நடக்கற எல்லாத்தையும் கவனிக்க முடியாதாம். இந்த உத்தி என்ன செய்யுதுன்னா மூளையில இருந்து ஸ்ட்ரஸ்ஸை நீக்கி எந்த பாகத்தில பிரச்சினை இருக்கோ அதை மூளையோட கவனத்துக்குக் கொண்டு வருது. அதனால் இயற்கையாகவே சுகம் கிடைக்குது. சில வாரத்துக்கு முன்னால மூளையை சமநிலைக்குக் கொண்டுவர ஒரு உத்தி சொல்லிருந்தேனில்லையா… அதுதான் இந்த பயிற்சியின் முக்கியமான உத்தி. நான் இதை சில மாதங்களா பயன்படுத்தறேன். நல்ல பலனனிருக்கு. தூக்கம் அமைதியா இருக்கு (இல்லைன்னா தூக்கத்தில வேறொரு வாழ்க்கை வாழற மாதிரி இருக்கும்); கண்ணும் மூளையும் புத்துணர்ச்சியோட இருக்கு.(என்னை வச்சு ஒரு விளம்பரம் எடுத்துறலாமா?) அதனால நீங்களும் முயற்சி செய்யறதோட தெரிஞ்சவங்களுக்கும் அனுப்பி வைங்க. திரும்பவும் சுட்டி தர்றேன்…

http://www.youtube.com/watch?v=YYk7V4BxP-U

எத்தனை பேர் உங்களுக்கே உங்களுக்குன்னு கொஞ்சம் நேரம் ஒதுக்கி உங்களைப் பாத்துக்கறீங்கன்னு தெரியலை. பொதுவா நம்மமோட wellbeing மேல நமக்கு பெரிய அக்கறை இல்லையோன்னுதான் பல சமயம் தோணுது. Wellbeingனா அது முழுநலம்; வெறும் உடல்நலம் மட்டுமில்லை. உடலுக்கு ஒண்ணுன்னா உடனே டாக்டர்கிட்டே போறோம்; ஊர்ல இருக்கற எல்லா சோதனையையும் செஞ்சு உறுதிப் படுத்திக்கறோம். ஆனா மனம் நிம்மதியா இல்லைன்னா பணமோ நேரமோ செலவு செய்யத் தயங்கறோம். நானும் இப்படித்தானிருந்தேன். ஆனா ராஜுதான் என்னை மாத்தினார். அவர் எப்பவும் சொல்றது என்னன்னா ‘எல்லாத்துக்கும் தீர்வு இருக்கு. எப்பவும் எல்லாமும் கிடைக்காது. எப்போ எது முக்கியமோ அதுக்காக மற்ற சிலதை விட்டுக் கொடுக்கணும்’. பல சமயம் அவரோட இந்த ‘அப்ரோச்’ நல்ல பலன்களைத் தந்திருக்கு.

உங்களுக்கு நாலு வீடு இருக்கலாம்; ரொம்ப அதிகாரமான பதவி இருக்கலாம்; அன்பான குடும்பம் இருக்கலாம் – ஆனா இதையெல்லாம் முழுமையா அனுபவிக்க ஏதுவான மனம் இருக்கா? இல்லைன்னா இதெல்லாம் இருந்து என்ன பயன்? யோசிச்சுப் பாருங்க. மகிழ்ச்சியான மனிதர்களாலதான் மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்க முடியும்னு ஒரு அறிஞர் சொல்லிருக்கார். அதையும் நினைவில வச்சுக்கங்க.

மினி என்னோட எழுத்துக்களைப் பற்றி கேட்டிருந்தாங்க. நான் நிறைய எழுதலை. இதுவரைக்கும் எழுதினது:

கருவறைக்கடன் (27 சிறுகதைகள், சந்தியா பிரசுர நூல்)
காதல் போர்க்களம் (கண்மணி, நிவேதிதா பிரசுர நூல்)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் (ராணி முத்து, சந்தியா பிரசுர நூல்)
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? (சந்தியா பிரசுர நூல்)
அழகிய மிருகம் (குறுநாவல், நிலாச்சாரல்)
மாற்று (பல இதழ்களில் வெளிவந்த 15 -20 சிறுகதைகள். நூலாக இன்னும் வெளிவரவில்லை. மின்னூலாக நிலாச்சாரல் மூலம் விரைவில்)
வாத்து இளவரசர்கள் (சிறுவர் நாடோடிக் கதைகள், விகடன் பிரசுரம்)
மாயக் குதிரை (சிறுவர் நாடோடிக் கதைகள், அச்சில்)
மனசே சுகமா? (சுயமேம்பாட்டுத் தொடர், நிலாச்சாரல் – செப்பனிட வேண்டி இருப்பதால் நூலாக்க இன்னும் முயலவில்லை)
அமுதென்றும் நஞ்சென்றும் (புதியபார்வையில் எழுதிய சமூகக் கட்டுரைகளின் தொகுப்பு, ஒரு நல்ல பதிப்பகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்)
கலக்கல் காவ்யா, மலையிலே மலையிலே போன்ற பல சிறுவர் கதைகள்
கையெழுத்தும் தலை எழுத்தும், அச்சம் தவிர் போன்ற சில கட்டுரைகள்.

(அப்பா, சுயதம்பட்டம் அடிக்க ஒரு வாய்ப்பு!!!

இன்னும் எழுதறதுக்கான சரக்கு தலைக்குள்ளே ஓடிட்டே இருக்கு. எழுதறதுக்குத் தோதான சூழல் அமைய மாட்டேங்குது.
அமானுஷ்யனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்! நான் நினைக்கிறேன் என்.கணேசனுக்கு ‘அமானுஷ்யன்’னு அடைமொழி ஒட்டிக்கும்னு. அமானுஷ்யன் கணேசன் எங்கேயோ போயிட்டார். பல பெரிய இதழ்கள்ல முதலிடம் பிடிக்கற அளவுக்கு வளர்ந்துட்டார். ஆனாலும் கடமை தவறாம நிலாச்சாரலுக்கு இலவசமா எழுதறாருன்னா அது அவரோட பெருந்தன்மை. எல்லாரும் அவருக்கு நன்றி சொல்லுங்கப்பா… அவரோட போன நாவல் மட்டும் 470 பக்கங்கள்… எழுத எவ்வளவு நேரம் பிடிச்சிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தா நாம அத்தனை பேரும் இதையெல்லாம் இலவசமா வாங்கிக்கறோமேன்னு கொஞ்சம் குறுகுறுன்னு இருக்கு.

அமானுஷ்யனுக்கப்பறம் அவரை நிலாச்சாரல்ல வேறொரு தொடர் எழுதறதுக்குக் கேக்கறதுக்கே எனக்குத் தயக்கமா இருக்கு. என்ன செய்யலாம்னு சொல்லுங்க. நல்ல யோசனைக்கு தொலைபேசில என்னோட ஒரு குட்டி அரட்டையடிக்கற பரிசு. (உலகத்தில எந்த மூலையில இருந்தாலும்)

உங்களுக்கு அமானுஷ்யன் கணேசனைப் பற்றித் தெரியாத இன்னொரு செய்தி: அவரும் ஒரு சுகவர். ரேய்கி முறையிலயும் ஜோதிடத்திலேயும் கை தேர்ந்தவர்.

போனவாரம் நண்பர்கள் குடும்பங்களெல்லாம் சந்திச்சோம். அதுல நாங்க விளையாடின ஒரு விளையாட்டு பயங்கர சுவாரஸ்யமா ரொம்ப நேரம் போச்சு. எப்படின்னா ஒரு குழுவில ஒருத்தர்கிட்டே ஒரு பிரபலத்தோட பெயர் தருவோம். அவங்ககிட்டே குழுவில இருக்கற மற்றவங்க கேள்விகள் கேட்டு சரியான பதிலை கண்டு பிடிக்கணும். (இது இலங்கை வானொலில அப்துல் ஹமீது நடத்தின ‘உதயாவின் ஏழு கேள்விகள்’ நிகழ்ச்சிலருந்து வந்ததுன்னுதான் நினைக்கிறேன்.)

பதில் ‘ஆம்’ ‘இல்லை’ ‘இருக்கலாம்’ ‘தெரியாது’ இந்த நாலுக்குள்ள ஒண்ணாத்தானிருக்கணும். முதல்ல ஏழு கேள்விகளோட ஆரம்பிச்சோம். சரி வரலை. அப்பறம் நேரக்கெடு வச்சோம். அப்பறம் பயங்கர ஆர்வம் வந்து குழு, நேரத்தையெல்லாம் மறந்து எல்லாரும் பங்கெடுக்க ஆரம்பிச்சோம். ஜார்ஜ் க்ளூனி, சானியா மிர்ஸா, ஜேம்ஸ் பாண்ட், கமல்ஹாசன், ஜாக் ஷிராக் இப்படி ஒரு விதமா போயிட்டே இருக்கும்போது ஒரு பிரபலத்தை மட்டும் எங்களால கண்டே பிடிக்க முடியலை. நேரக்கணக்கை எல்லாம் மறந்து பலவிதமான கேள்விகள். ஆனா முடியவே முடியலை.

அந்த சவால் உங்களுக்கு இப்போ. கேள்விகளை நீங்க கேளுங்க. நான் சொல்ற பதில்ல இருந்து அது யாருன்னு கண்டு பிடிங்க. முதல்ல கண்டுபிடிக்கறவங்களுக்கு ஒரு அன்புப் பரிசு காத்திருக்கு. ஆனா நீங்கதான் எல்லாரும் ‘கம்’முன்னு இருக்கீங்களே! அதனால் கண்டு பிடிச்சுக்க மாட்டீங்கன்னுதான் நினைக்கிறேன். அட, துறுதுறுன்னு உயிர்ப்போட வாங்கப்பா… கண்டுபிடிக்கற வரைக்கும் இந்தப் போட்டி தொடரும்…

சமீபத்தில காவலன், பயணம் படங்கள் பார்த்தேன். நாகார்ஜுனா நல்லா ஃபிட்டா சுறுசுறுப்பா பாத்திரத்துக்கு பாந்தமா பொருந்தியிருந்தார். சில காட்சியமைப்புகள் நல்லா இருந்தன. நடிகர் – ரசிகர் பாத்திரங்களை ரொம்ப ரசிச்சேன். பஞ்ச் டயலாக்ஸ் சூப்பரப்பூ …

ஆனா ஒட்டு மொத்தத்தில படத்தில கொஞ்சம் Professionalism missing. உதாரணத்துக்கு விமானத்துக்குள்ள முகமூடியில்லாம இருக்கற தீவிரவாதி, பிரகாஷ்ராஜ்கிட்ட தொலைபேசும்போது முகமூடி போட்டுப்பானேன்? அப்பறம் முதன்முதலா யூசுஃப்கானைக் காட்டும்போது எனக்கு எங்கேயோ இடறிச்சு. அப்படி ஒரு பயங்கர தீவிரவாதிக்கு ஏத்த முகமா இது தெரியலையேன்னு தோணுச்சு. ரங்கனாதனைப் பார்த்தப்பறம் விஷயம் புரிஞ்சது. ரங்கனாதனா அந்த நடிகர் ரொம்ப ரொம்ப நல்லா செஞ்சிருந்தார். ஆனா அவருக்கு தீவிரவாதி வேஷம் பொருந்தலைங்கறது என்னோட கருத்து. ரொம்ப சிலருக்கு மட்டும்தான் எதிர்மறையான பாத்திரங்கள் பொருந்துது. அப்படிப் பொருந்தற சில நடிகர்களையும் பாத்திரங்களையும் பற்றி யாராவது எழுதுங்களேன். நானும் யோசிக்கறேன்.

காவலன் பார்த்தப்போ காலத்தின் கோலமா நேரக் கொடுமையான்னு தெரியலை… விஜய் ரொம்ப ரொம்ப ஏமாத்திட்டார். கதை ஓகே. ஆனா ஒரு காட்சி கூட நல்லா இருக்குன்னு சொல்ல முடியலை. காட்சி அமைப்பும் சரியில்லை. நடிப்பும் சரியில்லை. விஜய் ஏன் இவ்வளவு செயற்கையா நடிச்சிருக்காருன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியலை. அசின் அதுக்கு மேல. ஒரு கிராமத்துப் பெரியவரோட பொண்ணுக்கேத்த நடை, உடை, பாவனை… ஏதாவது? ம்ஹும்… முந்தின நிமிஷம் ‘Straighten’ செய்த முடியோட, எப்பவும் lip gloss வழியிற உதட்டோட… தமிழ்த் திரை உலகமே… கொஞ்சம் யதார்த்தத்தைக் கையிலெடுக்கப்படாதா? அது சரி, இவ்வளவு களைப்பா, சோர்வா, கவலையா, தளர்ந்து போன மாதிரி இருக்காறே இளைய தளபதி… இதுக்கே இப்படின்னா எப்படிப்பா அரசியல்ல தாக்குப் பிடிப்பார்? ரசிகர்கள் அவர்கிட்டே நிலாவோட அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு சுகமளிக்கும் செஷனுக்கு அழைச்சிட்டு வாங்க. அடுத்த படத்தை கில்லி மாதிரி சூப்பர் ஹிட்டா கொடுத்துடலாம்… அல்லது 2016ல அவரை முதல்வரா ஆக்கிடலாம்

Directorஇந்த வாரம் நிறைய படங்கள் பற்றி பேசினதுனால… சிச்சுவேஷனுக்குத் தகுந்த ஃபோட்டோ… (புடவைக்கு விடுமுறை) எல்.ஏ யுனிவர்சல் ஸ்டூடியோஸ்ல எடுத்தது. நமக்குன்னு இப்படி ஒரு நாற்காலி என்றைக்காவது கிடைக்காமல போயிடும்? போட்டிருக்கற டாப்ஸ், கூல்ஸ் பாஸ்டன் kohl’sல வாங்கினது (விடுமுறையில இந்தக் கடையில பழியா கிடந்ததால ராஜு குடும்பக் கடை கோல்ஸ்னு கிண்டல் செய்வார்!)

போனவாரம் எழுதிருந்த கொடை உத்தி ஆரம்பிச்சிட்டீங்களா? உங்களுக்கு நினைவூட்டறதுக்காகவே எனக்கு இந்த வாரம் கிடைச்ச அஞ்சு கொடைகளை உங்க கூட பகிர்ந்துக்கறேன்:

1.Body Talk Access Technician Certificate
2.ரயில்ல பார்த்த ஒரு குட்டிப் பையன். ஒண்ணேகால் வயசுதானிருக்கும். துறுதுறுன்னு அங்கேயும் இங்கேயும் ஓடிட்டே இருந்தது.
3.ஒரு புது நண்பர்கிட்டே ஆன்மீகம் பற்றி நிறைய நேரம் பேசினது. அவர் எனக்கு ரேய்கி ஹீலிங் அனுப்பிச்சது.
4.எனக்குப் பிடிச்ச Lindt dark chocolate சாப்பிட்டது
5.செமை குத்தாட்டம் போட்டு என்னை மகிழ்வித்த ஒரு பாட்டிம்மா (என்னோட ஆட்டத்தை நீங்க பார்த்ததில்லையே)
http://www.youtube.com/watch?v=TWCgE6l4R90&feature=player_embedded

இந்தப் பாட்டிம்மா மாதிரியான சுதந்திர உணர்வு எத்தனை பேருக்கு இருக்கும்? இதைப் பார்த்து ரசிச்ச மனிதர்கள் மூலமா உலகத்தோட positive vibe கண்டிப்பா ஏறியிருக்கும். பாட்டிம்மா வாழ்க!

உங்க கொடைகளையும் எழுதுங்க. அல்லது படமா அனுப்பி வைங்க. சுவாரஸ்யமான கொடைகளுக்கு என்னோட மின்னூல் அனுப்பி வைக்கிறேன்…

சரி, அடுத்த வாரம் பார்ப்போமா? அதுவரைக்கும்உங்களை நன்னாப் பாத்துக்குங்கோ…

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

17 Comments

  1. Mini

    Nila, Thanks for giving the list.

    Ganesan sirku manamarantha nandrigal. Sivakami charactera marakavae mudiyathu Ganesan sir. Romba thanks sir.

    Last week . kodaigal.

    1. Nilacharal prize
    2. India poitu vantha friend vangikittu vantha kadalamittai,cocomittai,then mittai.
    3. Idli romba softa supera vanthathu.(athuvum friend family veetuku vanthapa)
    4. internetm,phone rendum work agama oru 4 hours friday kidachapa veedu cleaning work ellam panna mudinchathu.
    5. Nethu night kidaicha arumaiyana thukkam. dinner sapidama paiyana thunga vaika poi appadiyae thungi kalaiyala 7.30 maniku paiyan elupra varikum onum theriyatha nimmathiyana thukkam. Kadvaluku nandri.

    Nila,nangalum in tha game vilaiyaduvom. questions inga ketkalama? illa email anupunuma?

  2. mini

    Questions for the game.

    1. Is that male?
    2. is the person alive?
    3. Is he/she belong to India?
    4. Field -Politics
    5. Field – Sports
    6. Field – Cinema
    7. Field – TV personality

    Hi ellam niraya questions kelungapa. seekiram kandu pidichu vidalam. Nila ,Questionsku ethuvum limitation iruka?

    Nila, Unga interviewla detached attachment pathi soli irunthinga. Can you pl tell something more on that?

  3. கீதா

    சென்றவாரக் கொடைகள்:

    1. புதிதாக வலைப்பூ ஆரம்பித்து நண்பர்களைப் பெற்றது.
    2. என் மகன் வரைந்த படங்களை இணையத்தில் பகிர்ந்து நண்பர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள்.
    3. எங்கள் வீட்டுத் தோட்டத்துப் பூக்களில் தேன் குடிக்கும் தேன்சிட்டுகளின் தரிசனம்.
    4. அம்மாவிடம் தொலைபேசியில் பேசிய நிமிடங்கள்.
    5. நீங்கள் சுட்டியுள்ள பாட்டியின் ஆட்டம் பார்த்துக் கிடைத்தப் புத்துணர்வும் தன்னம்பிக்கையும்.

    அப்புறம் பிரபலத்தைக் கண்டுபிடிக்க நான் எழுப்பும் கேள்விகள் இதோ..
    1. அவர் ஐம்பது வயதுக்குட்பட்டவரா?
    2. ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவரா?
    3. திருமணமானவரா?
    4, கலைத்துறையைச் சார்ந்தவரா?
    5. அறிவியல் துறையைச் சார்ந்தவரா?

    அவ்வளவுதான் இப்போதைக்கு. பதில் கிடைத்தபின் தொடர்கிறேன்.

    தொடர்ந்து மடை திறந்து உற்சாக எழுத்துவெள்ளம் பாயட்டும். நன்றி நிலா.

  4. மகி

    மடை திறந்து பகுதியை மறக்காம படிக்க முயற்சிக்கிறேன்,ஆனாலும் அப்பப்ப மிஸ் ஆகிடுது..இன்ட்ரஸ்டிங்கா எழுதறீங்க நிலா!

    கொடைகள் பற்றி யோசிக்கும் மனநிலை இப்போதைக்கு இல்ல..அந்தப்பகுதியையும் இன்னும் படிக்கல..படிச்சுட்டு வரேன்.

    நீங்க சொல்லும் பிரபலம் ப்ரின்ஸ்.வில்லியம்ஸா? ச்ச்சும்மா…ஒரு வைல்ட் கெஸ்!!!!!!!!!!! 🙂

  5. கீதா

    என் அடுத்த கேள்வி அவர் ஆன்மீகத்துறையைச் சார்ந்தவரா என்பது.
    ஆம் எனில் அவர் போப் பெனடிக்டாக இருக்கலாம் என்பது என் கணிப்பு. சரியா நிலா?

  6. கலையரசி

    அப்பா! பாட்டி என்னமா அனுபவிச்சி ஆடறாங்க! உடம்புக்கு தான் வயசாகுதேயொழிய மன்னசுக்கில்லன்னு நிரூபிச்சிட்டாங்க அவங்க! என் பொண்ணு திடீர்னு சொல்லாம கொள்ளாம ஊரிலேர்ந்து வீட்டுக்கு வந்து நின்னது தான் போன வாரக் கொடை.
    ஆஸ்திரேலியாவில இருக்கிற தம்பி குடும்பத்தோட போன்ல அரட்டை அடிச்சது இன்னொரு கொடை.
    என் கேள்வி: அந்தப் பிரபலம் ஓர் எழுத்தாளரா?

  7. nila

    கீதா, நேத்து உங்க கேள்விகளைப் பார்த்த உடனே நினைச்சேன் – நீங்க கண்டுபிடிச்சுருவீங்கன்னு. வெல் டன். மினி, ஜஸ்ட் மிஸ்ட். ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்

  8. nila

    மகி, வாங்க வாங… நம்ம கேங்ல ஐக்கியமாகுங்க. விட்டா கலை, கீதா, மினி மட்டுமே பரிசு வாங்கிட்டே இருப்பாங்க. உங்க கைவரிசையையும் காட்டுங்க.

  9. nila

    Hello… Hello… 123… Mic testing… Anybody out there? (Other than my girls mini, kalai & Geetha?)

  10. கீதா

    ஓ! அப்படினா என் கணிப்பு சரிதானா? நன்றி நிலா. இதுபோன்ற விளையாட்டுகள் நம்மை யோசிக்கவைத்து உள்ளத்தில் ஒரு புத்துணர்வைத் தோற்றுவிக்கின்றன.

    உண்மையில் மினியின் முந்தைய கேள்விகளும் எனக்கு உதவியிருக்கின்றன. அதற்கு மினிக்கும் நன்றி சொல்லவேண்டும். நன்றி மினி.

  11. Ganesh

    Its refreshing to see a good friendship underlying between mini and geetha from there comments.. Nila its was indeed a great article and energy boosting one.. The Game is very good.. i will start this game in my family this weekend and will let u know how we enjoyed. keep the good work going…….

Comments are closed.