மத்தூர் வடை

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கோப்பை,
மைதாமாவு – 1 கோப்பை,
ஒப்பட்டு ரவை – 1 கோப்பை,
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிது,
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கோப்பை,
மிளகாய்த்தூளும், உப்பும் – தேவைக்கேற்ப,
சூடாக்கிய நெய் – சிறிது.

செய்முறை:

இரண்டு மாவையும் ஒரு தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தையும், கொத்துமல்லி – கறிவேப்பிலையையும் மாவுடன் சேர்த்துக் கலந்து விடுங்கள். சூடாக்கிய நெய்யை ஊற்றி உப்பும், மிளகாய்த்தூளும் சேர்த்த பிறகு, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொண்டு, எண்ணெயைக் காய வைத்துச் சிறு சிறு உருண்டைகளாகத் தட்டிப் பொறித்தெடுங்கள். சுவையான ‘மத்தூர் வடை’ தயார்!

சாப்பிட்டுப் பார்த்து உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்!

About The Author