மன அமைதி பெற..

நாம் அனைவரும் மிகவும் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் நம்முள்ளே தோன்றும் எண்ணங்களும், அதன் விளைவாக ஏற்படும் முரண்பாடுகளே.

நம் மனதிற்கு அமைதியளிப்பதன் மூலமாகவே மன அழுத்தத்தைப் போக்க முடியும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது அமைதியைக் கடைபிடித்தல் நன்று.

நம்முள்ளே தோன்றும் எண்ணங்களை நிறுத்த முடியாது. அவ்வாறு தோன்றும் எண்ணங்களுடன் போரிடுவதை விடுத்து, மூ‎ன்றாம் நிலையில் இருந்து ஏற்படும் எண்ணங்களைக் கவனித்தல் வேண்டும். இதற்கு ஓஷோ அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

பற்றற்ற நிலை

எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஒரு நாளில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்களுள் எழும் எண்ணங்களில் பங்குபெறாமல், இருவர் பேசும் உரையாடலைக் கேட்பது போல இருங்கள். உங்களுள் ஏற்படும் எண்ணங்களை தவிர்க்காமல், எதிர்க்காமல் உங்கள் எண்ணங்கள் வெளிப்பட முழு சுதந்திரம் அளியுங்கள்.

மனோவேகம்

பல காலங்களாக உங்கள் உள்ளத்தில் சேர்ந்துள்ள அனைத்து விதமான எண்ணங்களும் இதன் மூலமாக வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற எண்ணங்களை வெளியேற்ற உங்கள் மனதிற்கு நீங்கள் சுதந்திரம் அளித்திருக்க மாட்டீர்கள். இது நம் எல்லோரிடமும் காணப்படுகின்ற இயல்பான ஒரு குணம். அவ்வாறான சுதந்திரத்தை உங்கள் எண்ணங்களுக்கு அளிக்கும் போது, அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து அவை வெளிப்படும்.

அமைதியாக உட்கார்ந்து அவைகளைக் கவனியுங்கள். அவ்வாறு வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.

எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் தனித்திருக்கும் போது உங்களுள் ஏற்படும் எண்ணங்களை உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்லிப் பழகுங்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் எண்ணங்கள் மேல் உங்களுக்கிருக்கும் பயம் மற்றும் அவநம்பிக்கை நீங்கும். மேலும் எண்ணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளப் பழகுவீர்கள். எண்ணங்களை நடுநிலையிலிருந்து உணர முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறலாம்.

About The Author

40 Comments

  1. R.SRINIVASAN

    மிகவும் அருமை.அனைவருகும் உதவியாக இருக்கும்.

  2. sivarasu

    இந்த மதிரி நல்ல கருதுகல் படிக்க ஆசை

  3. M. Chandrasekar

    மன அமைதி அடைந்தது – நிம்மதியாக உள்ளது

  4. D. Yuvarani

    மன அமைதி அடைந்தது – நிம்மதியாக உள்ளது

  5. S.Sendil Kumar

    காயத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி…
    வாழ்க வளமுடன்………

  6. Anandh

    மனம் என்பது ஒரு புரியாத புதிர் அதை எப்படி கையாலுவது என்ரு மிக எழிமையாக சொல்லியுல்லீர் மிக்க நன்றி

  7. syed

    எனக்கு தவரான என்னம்கல் தோன்ட்ருகிரது ……. ஆதனால் எனக்கு மன நிம்மதி இல்லை ……… எனக்கு எதாவது வழி சொல்லுஙல் ……………….

  8. durga

    nenga soldratha na pani pathurken but irunthalum manasu la kastam iruke sir??????? na thiyana class ku ellam poirken but epo enala mudiala? what reason sir? solla pona valkaiye veruppa iruku ena panalam pl oru sollution solungalen

  9. karthikeyan

    என்னக்கு என் மனது என்னுடன் பெசி கொன்டெ இர்ருக்குது. எதாவது சிந்தன்னை வருது. கை கால் நட்டுக்கம் வருது. என்ன செஇயல்லம்.

  10. Malini

    என்னகு அடிக்கடி டென்சன் ஆவேன் என்னெகு என்ன பன்டரதுனு தெரிலா,ஒரு சின்ன விஷயம் குட மனச கச்டபடடுது,கோபம் துல திடரங என்னௌ சொன்ன புருன்சுகமடெஙரஙா என்னகு ரோம்ப கச்டம இருகு எத்னல நெஞு வலி வருது என்ன பன்ன்டரதுனு தெரில நேங சொலுங ப்ல்ச்

  11. m.sathish kumar

    இது உன்மை நல்ல விஷயம் தன்க்ச் காயத்ரி

Comments are closed.