மாங்காய் வேப்பம்பூ பச்சடி

தேவையான பொருள்கள்

ஒரு மேசைக்கரண்டி – வேப்பம்பூ,
ஒரு கப் – துருவிய வெல்லம்,
ஒரு கப் – துருவிய மாங்காய்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் – 1
எண்ணெய் – தாளிக்க

செய்முறை:

அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வற்றல் மிளகாய் தாளித்து துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.

மாங்காய் வெந்தவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். மாங்காய் நன்றாக மசிந்ததும் வெல்லத்தூளைப் போட்டு கொதி வந்ததும் இறக்கவும்.

வேப்பம்பூவைத் தனியாக சட்டியில் வறுத்தோ அல்லது வறுத்ததைப் பொடி செய்தோ பச்சடியில் சேர்க்கவும்.

About The Author