மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் – பத்து,
அரிசி மாவு – 1 கோப்பை,
கடலை மாவு – ½ கோப்பை,
தோசை மாவு – ஒரு கரண்டி,
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி,
நெய் – ஒரு தேக்கரண்டி,
உப்பு – தேவைக்கேற்ப,
சிறிது புளித் தண்ணீர் (அ) மோர்,
வறுத்த கடலைப் பருப்பு, சீரகம், கரகரப்பாகப் பொடித்த உப்பு (மிளகாய்களுக்குள் திணிக்க) – தேவைக்கேற்ப.

செய்முறை:

மிளகாய்களை நன்றாகக் கழுவி நடுவில் கீறி விதைகளை நீக்கிக் கொள்ளுங்கள். காரத்தைக் குறைக்கப் புளிக் கரைசலிலோ, மோரிலோ ஊற வைக்கலாம் அல்லது எண்ணெயில் பொறிக்கலாம். வறுத்த கடலைப்பருப்பு, சீரகம், உப்பு போன்றவற்றை மிளகாய்க்குள் திணித்த பிறகு, அனைத்து மாவுகளையும் கலந்துகொண்டு கரைக்கவும். மிளகாய்களை இம்மாவுக்கலவையில் தோய்த்துப் பொறித்துச் சூடாகப் பரிமாறுங்கள். இந்தத் திடீர் மழையைக் காரசாரமாக அனுபவியுங்கள்!

உங்கள் கருத்துக்களையும் தவறாமல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author