மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! (3)

ஏ/சி:

உங்கள் அறையின் அளவு மற்றும் அதிலுள்ள பொருட்கள், மனிதர்களைப் பொறுத்து ஏசியின் மின்சாரப் பயன்பாடு இருக்கும். 1.5 டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 2-2.5 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

ஏசியிலுள்ள ஏர் ஹோல்கள் ஹெர்மேடிக்கல் சீல்ட் ஆப் (hermetically sealed off) செய்யப்படுவதால் அதன் மின்சாரப் பயன்பாடு குறையும். மிகச் சிறந்த பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். குறிப்பாக அறையின் மேற்கூரை முழுவதும் பாதுகாப்பு உறை போடுவதால் குளிரூட்டியின் வேலைத் திறன் அதிகரிக்கும். வெப்பநிலையைக் கட்டுப்படுத்த சரியான தெர்மோஸ்டாட் (thermostat) பயன்படுத்துதல் அவசியம். இல்லையென்றால் ஆற்றல் விரயமாகும்.

முடிந்தளவு சீலிங் பேனை பயன்படுத்துதல் ஏசி பயன்பாட்டினைக் குறைக்க எளிய வழி. ஏசிக்கு பத்து ரூபாய் செலவாகிறதென்றால், மின்விசிறிக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். மின்விசிறியின் விசிறிகள் உலோகமாக இருக்கும் பட்சத்தில் 20% மின்னாற்றல் சேமிக்கப்படும்.

ஏசி மட்டும்தான் உங்களிடம் இருக்கிறதா? அப்படியெனில் 22 டிகிரிக்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு வெப்பநிலையும் 3-5% குறைந்த மின்னாற்றலை எடுத்துக் கொள்ளும். 25 டிகிரி செல்சியஸ் என அமைப்பதன் மூலம் மின்னாற்றல் மற்றும் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

உங்களின் புதிய அலுவலகத்தில் சென்ரலைஸ்டு (Centralised) ஏசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படும் வகையில் ஸ்பிலிட் ஏசி முறையைப் பயன்படுத்துங்கள். அலுவலகம் முழுவதும் ஏசி பயன்படுத்தப்படாமலும், வேலை நேரம் முடிந்தவுடன் ஏசியின் பயன்பாடு நிறுத்தப்படவும் உதவும் இந்த ஏற்பாடு. ஏசியின் பில்டரை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதால் மின்சாரச் செலவை குறைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கோட்டிங் முறையை ஜன்னலில் பயன்படுத்துவதால் குளிர்காற்று வெளியேறுவதைத் தடுக்கலாம். கதவு, ஜன்னல்களில் weather strips பயன்பாட்டால் காற்றுக் கசிவைத் தவிர்க்கலாம். பல கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி ஜன்னலைப் பயன்படுத்துவதால் ஏசியின் பயன்பாடு 40% குறையும்.

கீரின் மெஷெஸ் எனப்படும் சூரிய ஒளியைத் தடுக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளை அமைப்பதன் மூலம் நேரடியாக சூரிய ஒளி அதிக நேரம் உங்கள் வீட்டினுள் வருவதைத் தவிர்க்கலாம். அதன் மூலம் ஏசியின் பயன்பாடு குறையும். குளிர்காலங்களில் இத்தகைய ஜன்னல் மற்றும் கதவை எளிதில் கழற்ற முடிவதால் காலை நேரக் குளிரைக் குறைக்கவும், அதன் மூலம் ஹீட்டரின் பயன்பாட்டைக் குறைக்கவும் அது உதவும். டிரிப் ஈரிகேஷன்(drip irrigation) முறையின் மூலம் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கையில் வெப்பத்தைக் குறைக்க முடியும். பெரிய தொழில் நிறுவனங்களில் இத்தகைய முறை கடைபிடிக்கப்படுகிறது.

விளக்கு:

மடிக்கணினி உபயோகிக்கும் போது அதிக வெளிச்சம் தேவைப்படாததால் 40W, 60W விளக்குகளுக்குப் பதில் USB(5 V DC) விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

இரவு விளக்குகளுக்கு 0 W or LED விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

சூரிய ஒளி நேரடியாக படும் விதத்தில் உள்ள சுவர்களுக்கு மென்மையான நிறங்களால் வர்ணம் பூசுவதால் சூரிய ஒளியை எதிரொளிக்கச் செய்து செயற்கை விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

(தொடரும்)

About The Author