முடிவிலா சாத்தியங்கள் (1)

என்னப்பா, நலம்தானே எல்லாரும்? மடைதிறந்து நிறுத்தி பல மாதங்கள் கழிச்சு மீண்டும் உங்களையெல்லாம் சந்திக்கறதுல மகிழ்ச்சி. இந்த இடைவெளில எனக்கு நிறைய சுவையான அனுபவங்கள். அதையெல்லாம் உங்களோட பகிர்ந்துக்கறதோட நாம எல்லாருமா சேர்ந்து முடிவிலா சாத்தியங்களை நம்மோட வாழ்க்கையில உருவாக்கலாம்கறதுதான் எண்ணம். அதுக்கு உங்களோட பங்களிப்பும் இருக்கணும். செய்வீங்களா?

சரி, என்னோட ஜெயா டிவி நேர்முகம் பார்த்தீங்களா? பார்க்கலைன்னா, இங்கே பார்க்கலாம்… இதைப் பார்க்கச் சொல்றதுக்கு முக்கியமான காரணம் அதுல சொல்லிருக்கறதை நான் இங்கே திரும்ப எழுத வேண்டாமேன்னுதான்.

http://www.youtube.com/watch?v=XjqUhYgcsXM

நான் ஒரு பதினைஞ்சு வாரம் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, மலேசியான்னு சுத்திட்டு ரெண்டு வாரம் முன்னாலேதான் திரும்ப வீடு வந்து சேர்ந்தேன். ஆனாலும் நிலாச்சாரல் எந்தத் தடங்கலும் இல்லாம வெளிவந்ததுக்குக் காரணமான நம்ம குழுவுக்கு ஒரு ஓ போடலாமா?

முக்கியமா ரிஷி, யஷ், ஜிபி, ரம்யா மற்றும் ராமுக்கு நன்றி.

இந்த விடுமுறை எனக்குக் கிடைக்க முக்கியமான காரணம் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்? (நேர்காணலை நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா சொல்லிடுவீங்க)

நான் கற்றுக்கொண்ட சுகமளிக்கும் உத்திகள்தான் முக்கிய காரணம். ஆங்… மேல எழுதறதுக்கு முன்னால இன்னொரு முக்கிய கேள்விக்கு பதிலளிக்கணும்…. நேர்காணல்ல ஹீலிங், ஹீலிங்னு சொல்றீங்களே அது என்னன்னு சிலர் கேட்டாங்க. ஹீலிங்னா சுகமளிக்கிறது… அதாவது வாழ்க்கையை மேம்படுத்தறது. உடல் நலத்தைத் தாண்டி வாழ்க்கை நலத்தைக் கொண்டுவருவதுதான் சுகமளிப்பதன் நோக்கம். இது மடை திறந்து வாசகர்களுக்கு முன்னமே புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

சரி…. உங்களோட வாழ்க்கையை எப்படி சரி பண்றதுன்னுதானே கேக்கறீங்க? இந்தக் கேள்வி வரும்னு தெரிஞ்சுதான் மன அழுத்தத்தை உடனடியா மாத்தறதுக்கு ஒரு வழிகாட்டியைத் தொகுத்திருக்கேன்:

http://www.infinitehealing.co.uk/2013/02/10/quick-stess-relief-guide/

இது ஆங்கிலத்தில இருக்கு. தமிழ்ல இருந்தா இன்னும் பலருக்கு உதவியா இருக்கும்னு நினைச்சீங்கன்னா, யாராவது மொழிபெயர்த்துத் தர முன்வாங்கப்பா….

இந்த வழிமுறையை எந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் பயன்படுத்தலாம். நம்பிக்கை தேவையில்லை. ஆனால் கொஞ்சம் விடா முயற்சி தேவைப்படலாம். பயன்படுத்திப் பார்த்துட்டு சொல்லுங்க எப்படி பலனளிச்சதுன்னு. பிடிச்சிருந்ததுன்னா அன்பர்களோட பகிர்ந்துக்கோங்க.

வர்ற சனிக்கிழமை (23ம் தேதி) இலண்டன்ல ஆக்ஸஸ் பார்ஸ் வகுப்பு எடுக்கப் போறேன். உங்க யாருக்காவது ஆர்வமிருந்தா கலந்துக்கோங்க. விபரங்கள் இங்கே:

http://www.infinitehealing.co.uk/events/

நினைவிருக்கா, நாம கொடைகளைப் பட்டியலிடுவோமே? திரும்பவும் ஆரம்பிச்சிரலாமா?

என்னோடது:

1.ஜோஸாலின் பரிசா தந்த புடைவையைக் கட்ட முடிஞ்சது (படம்)
2.தொடர்ந்து இந்தியாலிருந்து வரும் ஜெயா டிவி நேயர்களின் தொலைபேசி அழைப்புகள்
3.ஆக்ஸஸ் கான்ஸியஸ்னஸ் அடுத்த கட்டப் பயிற்சி
4.ஆக்ஸஸ் பார்ஸ் மற்றும் எம்டிவிஎஸ்எஸ்
5.சில சூப் வகைகள் செய்து சாப்பிட்டது.

உங்களோட கொடைகளை இங்கே பகிர்ந்துக்கறீங்களா?

சரிப்பா, சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்… வாரவாரம் எழுத முயற்சிக்கிறேன்… முடியலைன்னா பொறுத்துக்கோங்க…

அபரிமிதமான அன்புடன்,
நிலா”

About The Author

2 Comments

  1. NANDHITHA

    வணக்கம்
    நான் சென்ற முறை வ புதுப்பட்டி என்ற ஊர்க்குச் சென்றிருந்தேன், அங்கிருந்து தங்கள் ஊரான மம்சாபுரத்திற்குச் சென்று விட்டு அண்ணாமலையார் திருக்கோயிலுக்கும் சென்று வந்தேன். முன்பு ஒரு முறை தாங்கள் ஜெயா தொலைக் காட்சியில் பேட்டி கொடுத்திருந்தீர்கள், அதைப் பதிவு செய்திருந்தேன், தங்களுக்கு அனுப்பட்டுமா என்றும் கேட்டிருந்தேன், ஆனால் தாங்களே அதனைப் பதிவு செய்து விட்டீர்கள்.
    தங்கள் பேட்டி மிகவும் சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி
    அன்புடன்
    நந்தி

Comments are closed.