முடிவிலா சாத்தியங்கள் (2)

என்னப்பா? போன வாரம் எப்படிப் போச்சு? எனக்கு ரொம்ப சுவாரஸ்யமாவே இருந்தது.

Chinese Proverb

இலண்டன் தீபம் தொலைக்காட்சில 21ம் தேதி ஒரு நேரலை நேர்காணல்ல பங்கெடுத்தேன். அதுக்கப்பறம் நேயர்கள்கிட்டேர்ந்து நிறைய அழைப்புகள்.

அழைச்ச எல்லாருக்கும் நிறைய பிரச்சினைகள். அதுல பொதுவான பிரச்சினையா என் சிற்றறிவுக்குப் பட்டது என்னன்னா, தான் எதைத் தேடறோம்னே தெரியாம தேடறது. பலரும் என்கிட்ட கேட்டது, "எனக்கு இது இப்படி நடக்கணும். உங்களால உதவி செய்ய முடியுமா?"

"சரி, இது இப்படி நடந்தா உங்களுக்கு என்ன கிடைக்கும்?"

"அதெல்லாம் தேவை இல்லாதது. உங்களால நடத்தித் தர முடியுமா, முடியாதா?"

நாம எல்லாருமே எதைத் தேடி ஓடறோம்னு நினைக்கிறீங்க? மன நிம்மதியையும் சந்தோஷத்தையும்தான். அது வெளில கார், பங்களா, மனிதர்கள், புகழ் இப்படி ஏதோ ஒண்ணுல இருக்கறதா நாம நினைக்கற வரைக்கும் வாழ்க்கை வெறும் தேடலாவேதான் இருக்கும். ஒன்றை மட்டும் ரொம்ப ரொம்ப அழுத்தமா சொல்ல விரும்பறேன்:

மகிழ்ச்சி வெளியில் இல்லை. இல்லவே இல்லை  

நம்ம கிட்டேதான், உள்ளேதானிருக்கு. அதைக் கண்டுபிடிக்க வேணா மற்றவங்க உதவமுடியும். அப்படி உங்க வெளிச்சம் வெளில வர்றப்போ நீங்க ‘இது இப்படி நடக்கணும்’னு இப்போ கேக்கறீங்க இல்லையா, அது ரொம்ப சில்லியா படலாம். அல்லது நீங்களே அது முக்கியமில்லைன்னு விட்டுடலாம். அல்லது உங்க ஆற்றலைப் பயன்படுத்தி நீங்களே அதை நடத்திக்கலாம். அப்போ நானோ மற்ற சுகவர்களோ தேவையில்லை.

ஒரு உதாரணம் சொல்றேன். நீங்க தீவுல தனியா மாட்டிக்கிடீங்கன்னு வச்சுப்போம். ஒரு படகு செய்யணும்னு நினைச்சு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கறீங்க. அந்தப் பக்கமா இன்னொரு மனிதர் வர்றார். அவர்கிட்ட படகு செய்ய உதவி கேக்கறீங்க. அவர்கிட்டே ஹெலிகாப்டர் இருக்கு. அந்தத் தீவிலருந்து நீங்க போகவேண்டிய இடத்துக்கு ஹெலிகாப்டர்ல கொண்டு விடறதா சொல்றார். ஆனா நீங்க படகு கட்டணும்கற நோக்கத்திலேயே இவ்வளவு நாள் இருந்ததனால உங்களுக்கு பெரிய ஏமாற்றமா போயிடுது. அவரைப் புறக்கணிச்சிட்டு திரும்ப படகைக் கட்டறதுல கவனம் செலுத்த ஆரம்பிக்கிறீங்க. யோசிச்சுப் பாருங்கப்பா… நீங்க படகு கட்டறீங்களா இல்லை வீட்டுக்குப் போறதுக்கு வழி தேடறீங்களா?

தொலைக்காட்சி நேர்காணலுக்கு ரெண்டு நாள் முன்னால லேசா தொண்டை கட்டி இருமலும் வந்திடுச்சு… ஆக்ஸஸ்ல இருக்கற சில செயல்முறைகளும் கீழே இருக்கற சுட்டில இருக்கற அக்குபிரஷரும் செஞ்சேன்… சரியாயிடுச்சு:

http://www.youtube.com/watch?v=2SDUpBSIyOg

சுட்டியை சேமிச்சு வச்சுக்கோங்க… பயன்படலாம்.

டிசம்பர்ல சிட்னி போயிருந்தப்போ தோழி காந்திமதி மிகவும் விருப்பப்பட்டு பெருமுயற்சி எடுத்து அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துக்காக ஒரு நேர்காணல் செய்தாங்க. ரொம்ப ரொம்ப காஷுவலா, என்னோட சிறுவயது அனுபவங்கள், நிலாச்சாரல் ஆரம்பிச்சது, சுகமளிக்கும் அனுபவங்கள்னு பேசிட்டிருந்தோம். இந்த வாரம் நம்ம குழு அதை வெளியிடறாங்கன்னு நினைக்கிறேன். விருப்பமிருந்தா முகப்புப் பக்கத்தில தேடிப்பாருங்க.

23ம் தேதி இலண்டன்ல ஆக்ஸஸ் பார்ஸ் க்ளாஸ் நடத்தினேன். ரொம்ப சுவாரஸ்யமாப் போச்சு. அஞ்சனாங்கற 11 வயசுப் பெண் முழு நேரமும் வகுப்பை கவனிச்சு என் மேல ப்ராக்டிஸ் செய்து ப்ராக்டிஷனரா ஆயிட்டா. வெரி ஸ்வீட்! பார்ஸ் மாணவர்களோட கல்விக்கு ரொம்ப உதவறதா சொல்லுது இந்தக் கட்டுரை:

http://northtexaskids.com/ntkblog/index.php/the-bars-technique-can-help-kids-study-better/#more-22197

15 வயதுக்குட்பட்ட உங்க குழந்தைகளும் இலவசமா பார்ஸ் கத்துக்கலாம். விருப்பமிருந்தா தொடர்பு கொள்ளுங்க. ஏபரல்ல நான் நடத்தவிருக்கற வகுப்புகள்ல இடமிருந்தா சேர்த்துக்கறேன்:

https://www.nilacharal.com/ocms/log/02181316.asp

சரிதானே?

‘நீங்கதான் ரிலாக்சேஷன். நீங்க யாரா இருக்கணும்னு நினைக்கறீங்களோ அதுதான் டென்ஷன்’னு சொல்லுது சீனப் பழமொழி.
நீங்க நீங்களா இருக்கீங்களா? அல்லது முகமூடிகள் போட்டுட்டிருக்கீங்களா?

வர்ற வாரம் வேறென்ன சாத்தியங்களை நாம உருவாக்கலாம்?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author