முட்டை மைதா ஆப்பம்

தேவையான பொருட்கள்:

மைதா – ஒரு கோப்பை,
அரிசி மாவு- ஒரு மேசைக்கரண்டி,
முட்டை – ஒன்று,
துருவிய தேங்காய் – நான்கு மேசைக்கரண்டி,
சர்க்கரை – அரை கோப்பை,
உப்பு – ஒரு சிட்டிகை,
எண்ணெய் – தேவையான அளவு,
நெய் – தேவையான அளவு.

செய்முறை:

மைதா, அரிசி மாவு, முட்டை, சர்க்கரை, உப்பு ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்துத் தோசை மாவு பதத்துக்குக் கரைக்க வேண்டும்.

தோசைக் கல்லைச் சூடுபடுத்திச் சின்ன சின்ன வட்டத் தோசைகளாக வார்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் துருவிய தேங்காயைத் தூவுங்கள். தோசையின் ஒரு பக்கம் தேவையான அளவு எண்ணெயைச் சுற்றிலும் ஊற்றி, ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு நெய் ஊற்றிச் சுட்டு எடுங்கள்.

அவ்வளவுதான், சுவையான ‘முட்டை மைதா ஆப்பம்’ தயார்! காலை, மாலைச் சிற்றுண்டியாக இதைச் சாப்பிடலாம்.

 சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author