முதுமை

எதுசொன்னா லுமதை ஏற்றிடார் பிறிதொன்றை
இடக்காக வேபேசுவார்
இனிய நல் அறிவுரைகள் கசப்பாகும் மறுப்பினில்
இளக்கார மேயிருக்கும்

அதுஇது எனவே பேசுவார் உறவுமுறை
அறிணை யாய்மாறி டும்
ஐந்துக்கும் பத்துக்கும் அலைக்கழிப் பார்சொத்தோ
அன்னனவர் கைமாறிடும்

பொதுவாக சபையினில் அமர்த்துவார் மரியாதை
பொய்யாக வே இருக்கும்
போங்காலம் எதுவென்று அறியாம லேமனம்
புலம்பியே பரிதவிக்கும்

முதுமையினில் மனைவிதுணை இலையெனில் வாழ்க்கையொரு
முட்புதர் போலாகுமோ
மொய்குழல் வள்ளிதெய் வானையுடன் அருள்புரியும்
முருகேசன் எனது துணையே !

About The Author

9 Comments

  1. P.Balakrishnan

    வாசக நண்பர்களே, வரி 6 -ல் அறிணை என்பதை அஃறிணை என்று திருத்திப் படிக்கவும். நன்றி!-அரிமா இளங்கண்ணன்

  2. geetha

    நம் நாட்டில் முதியவர்களுக்குத் தக்க மரியாதை தரப்படுவதில்லை. சொல்லப்போனால் மேல் நாடுகளைவிட நம் நாட்டில்தான் பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட விருப்பங்களைத் தாரை வார்த்து குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்காகவே வாழ்கிறார்கள். முதிய வயதில் அவர்களைக் கொண்டாடாவிடினும், குறைந்தபட்சம் உதாசீனப்படுத்தாமலாவது இருக்கலாம். தங்களின் ஆதங்கம் சரியே. இளைய தலைமுறை உணருமா?

  3. Rishi

    //முதிய வயதில் அவர்களைக் கொண்டாடாவிடினும், குறைந்தபட்சம் உதாசீனப்படுத்தாமலாவது இருக்கலாம். //

    ம்ம்…ம்… சரிதான்.
    எனக்குத் தெரிந்து சிலர்.. கொள்ளுப் பேரன் பேத்திகளை எடுத்த பெரியோர் பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு யாருடைய தயவும் இல்லாமலேயே – மட்டுமல்ல… பிறருக்கு உதவி செய்தும் – வாழ்ந்து வருகிறார்கள்!!

  4. P.Balakrishnan

    ரிஷி, கீதா உங்கள் விமர்சனங்களுக்கு நன்றி.

  5. s.rameshbabu

    எதி படிக்கும் பொது நாம் செய்யும் தவருகலை திருத்திக்கொல்ல வாய்ப்பு இருக்கு

  6. R.V.Raji

    உண்மையிலும் உண்மை பாலு சார்!
    மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்க்னியும் முன்னால் கசக்கும்; பின்னால் இனிக்கும்”. இதை பெரும்பாலானோர் அனுபவிக்கும்வரை உணர்வதில்லை.
    அனைத்து வரிகளும் அருமை. கற்பனைகள் தொடரட்டும்…….
    வாழ்த்துக்கள் பாலு சார்!,,”

  7. P.Balakrishnan

    ராஜி, ரமேஷ்பாபு, உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி!

  8. kiruthika

    Hai balu sir your kavithi very beautyful. manamairintha vailthukal. thaingal eneuim uinmy saimbavaigkalai kavithai nadayil aluthaveindoim. ethu ainudayu veindokoail.
    by
    kiruthika

  9. P.Balakrishnan

    பாராட்டுக்கு நன்றி கிருத்திகா. உண்மை சம்பவங்களைக் கவிதைகளாக வடித்துள்ளேன். பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இனி வரும் கவிதைகள் சில இவ்வாறு அமைய முயல்வேன்.

Comments are closed.