மௌனமாய் உன் முன்னே(6)

தகதக்கும் ஆகாயத்தின்
மாலைப் பொழுதின்
தங்கச் சூரியன்
மஞ்சள் கதிர் வீசி மறைகிறான்

கடற்கரையின் மணற் பரப்பில்
பலவிதங்களில் மனிதர்கள்

கடல் அலை
கரையைத் தொட்டுவிட
வந்து வந்து களைத்து
சோர்ந்து திரும்பும்

நண்டுகள் எதையோ தேடி
ஒரு பக்கமாய் ஓடும்

உப்புக் காற்று
நாசியின் வழியே சென்று
அடைந்து வியர்க்கும்
உன் நினைவுக்குச்
சாமரம் வீசும்

விண்ணைத் தொட்டுவிடும் மிதப்பில்
உயரே உயரே பறக்கும் பட்டம்

இத்தனையும்
உனக்கும் சொல்லவா வேண்டும்
உன்னுடன் தான் ரசித்தேனென்பதை

(‘மௌனமாய் உன் முன்னே’ -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author