லக… லக… ஜோக்ஸ் (11)

நபர் : எப்படியும் எல்லா ரயிலும் லேட்டாத்தான் வரப் போகுது. அப்புறம் எதுக்கு இந்த ரயில்வே டைம் டேபிள் வேற தண்டத்துக்கு?

தொடர்வண்டிநிலைய அதிகாரி : எந்த ரயில் எவ்ளோ லேட்டா வருதுன்னு தெரிய வேணாவா?

************

தலைமையாசிரியர் : பப்பு! உன்னைப் பத்தி எல்லா டீச்சரும் புகார் செஞ்சிருக்காங்க. என்னாச்சு?

பப்பு : நான் எதுவுமே செய்யலை சார். சும்மாதான் உட்கார்ந்திருக்கேன்

தலைமையாசிரியர் : அதையேதான் அவங்களும் சொல்றாங்க.

************

சங்கி : ராத்திரி முழுக்க நான் தூங்கவேயில்லை தெரியுமா?

மங்கி : ஏன்? என்னாச்சு?

சங்கி : உண்மையிலேயே எனக்கு இருக்கிறது அம்னீஷியாவா, இன்சோம்னியாவான்னு யோசிச்சிட்டு இருந்ததுலே தூங்க மறந்துட்டேன்.

************

வாடிக்கையாளர் : நான் இந்த ஹோட்டல்ல தங்க மாட்டேன். எவ்ளோ சின்ன ரூம்! இதுல எப்படிப் படுத்துத் தூங்கறது? என் பணத்தைத் திருப்பிக் குடுங்க!

அறை ஊழியர் : அடக் கடவுளே! இது லிப்ட்டு சார்!

***********

சங்கி : ஏய்! என்னடா இது? கதவைத் தெறந்து வெச்சிட்டுக் குளிக்கிறே!

மங்கி : குளிக்கும்போது யாராவது சாவி ஓட்டை வழியாப் பார்த்துட்டா? அதுக்குத்தான்.

About The Author