வார்த்தை வேட்டை (15)

என்னப்பா, போன வார வார்த்தை வேட்டையில ‘யோகாசனம்’ தொடர்பான எத்தனை வார்த்தைகள் உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுது? உங்க வேட்டையில் விட்டுப்போன வார்த்தைகளைக் கீழேயுள்ள படத்தைப் பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க!

Rangoli

சில வருடங்களுக்கு முன்பு நம்முடைய திரைப்படங்களில், மிகவும் அரிதாகக் கிடைக்கக்கூடிய பொருளை "ஈரேழுலகத்தில் தேடினாலும் கிடைக்காது" என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். ஈரேழுலகத்தில் நம் எல்லோருக்கும் தெரிஞ்சது பூலோகம். சரி, மீதமுள்ள உலகங்கள் என்னென்ன? அந்தப் பல்வேறு உலகங்களின் பெயர்கள்தான் நம்முடைய இந்த வார வார்த்தை வேட்டைக்கான தலைப்பு. என்ன, தலைப்பு வித்தியாசமா இருக்கில்லையா? மற்ற உலகங்களின் பெயர்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எதுக்குக் காத்திருக்கணும்? வேட்டையை உடனே ஆரம்பிக்கலாமே!

Rangoli

About The Author