விதைகளும் வேர்களும்

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்
இருட்டறைன்!

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து…
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

About The Author

4 Comments

  1. jesu

    பாராடுக்கல் இன்னும் உன்ஙல் மனம் யெனும் நிலத்தில் கவிதை முலைக்க வல்துகல்

  2. கருவெளி ராச.மகேந்திரன்

    எல்லோரும் அவ்வாறில்லை என்றாலும் பெரும்பான்மையோர் அவ்வாறு இருப்பது வருத்தமானதே…. வேர்களுக்கான என் வாழ்த்துக்கள்… வேர்களின்றி போனால் என்னவாகும் என்பதை அனைவரும் உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நம்புகிறேன். உங்களை போன்ற வேர்களிலிருந்து வரும் கனிகளும் விதைகளுமே அதற்கான ஆரம்பம்… விதைகள் தளிர்விடத்துவங்கிவிட்டன
    கருவெளியிலிருந்து ராச.மகேந்திரன்

  3. abira

    னல்ல டமிலில் கவிதை எலுதிய உஙல்க்கு என் வாழுதுக்கல்.

  4. sivashankary

    கவிதை படித்தேன்,

    வேர்கலின் பெருமை… எனும்
    கருத்து அருமை…
    பென்மையின் பெருமை
    சொன்னமைக்கு பாரட்டு

Comments are closed.