விரல் தொட்ட வானம் (15) -வாழ்க்கைப் பயணத்தில்

வாழ்க்கைப் பயணத்தில்

அதன் பார்வையே சரி இல்லை.
நடையும் கொஞ்சம்
கலவரத்தைத் தருகிறது.
வெறி பிடித்ததோ
வெறி பிடிக்காததோ
நன்றி உள்ளதோ
நாலும் கெட்டதோ
பதுங்கிப் பாயுமோ
முன் விட்டுத் துரத்துமோ?
அசந்தால் பாய்ந்து குதறுமோ?
பயத்தினூடாக எழும் கேள்விகளில்
சிக்கித் தவிக்கிறது மனது
அவற்றைவைகளைக் கடக்கும் போது.

என்னுள் வளரும் செடி

கூடுதலாய்
பால் தருவேன்
என் காம்புகள்
வலிக்க வலிக்க…

மல சல வாசம்
முகர்ந்தபடி அள்ளுவேன்
என் கைகள்
சலிக்கச் சலிக்க…

பால் பேதம் பாராமல்
பேணி வளர்ப்பேன்
என்னுள் வளரும் செடிக்கு
அவன் முகம் மட்டும்
இருந்துவிட்டால்…

தொட்டுத் தொடரும்...

About The Author