விரல் தொட்ட வானம் (26)

கல்லெறிந்து
வேடிக்கை பார்க்கிறது
அமைதியாய் இருந்தால்
குளத்தின் மீதும்
ஆர்ப்பரித்து எழுந்தால்
கற்பின் மீதும்!

*********

தானாய் நிரம்பி
வழிகிற நீரில்
நடத்துகிறோம் வாழ்க்கை.
வழி இல்லையென்றால்
தள்ளுகிறோம் நாக்கை.
நனைக்கவாவது
நீர் தேவை என வேண்டுகையில்
வாய் திறக்கின்றன
அரசும்
ஆகாயமும்
எங்கள் உயிரைக் குடிப்பதற்கு.

*********

புதுவெள்ளம் பாய்ந்தபோது
ஓட்டமெடுத்தது
தேங்கிய நீர்.

–தொட்டுத் தொடரும்

About The Author