விரல் தொட்ட வானம் (7)-வலி

வலி – 1

மலடிப்பட்டம்
தந்த வலியை
உறிஞ்சி எடுக்கிறது
குழந்தை.
எனது காம்புகளின் வழியே.

வலி – 2

வெறுமையாய்
இருக்கிறதெனச் சம்மதித்தேன்
என் வெள்ளைத் தாளில்
அவன்
எழுதுவதற்கு.
எழுதும்போது இருந்த வலி
கூடுதலாகிறது
வளரும் படைப்பை
ஊர் பார்த்துச் சிரிக்கும்
ஒவ்வொரு நொடியும்.

வலி – 3

கொடியை அசைத்தவருக்கும்
நகரும் புகைவண்டிக்கும்
எங்கே புரியப்போகிறது
பெட்டிக்கு
உள்ளேயும் வெளியேயும்
கை அசைத்துப் பிரியும்
மனசுகளின் வலி?

தொட்டுத் தொடரும்…

About The Author