விழிப்பு; அழைப்பு

விழிப்பு

வாயில் துரும்புடன்
சின்னஞ்சிறு குருவி
கூடு கட்டிக் கொண்டிருக்க
விழித்துக் கொள்கிறாய் நீ.

இப்போது நீயும்
வீடுகட்ட ஆரம்பித்திருக்கிறாய்
நீயாக-
உனக்காக
உனக்காக மட்டும்.

*****

அழைக்கிறாய்
வரவேண்டாமென
அழுத்தமாய்
மீண்டும் மீண்டும் சொல்லி”

About The Author