வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)

ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரை: தொழில்நுட்பம் பழகுங்கள்!

ஐ-போன் இல்லாத உலகம் இனி இல்லை

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவருள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் கடுமையான உழைப்பாளி! இரவு பகல் நேரம் பாராமல் உழைத்து ‘ஐ பாடை’ப் படைத்தார். ஒன்றைக் கண்டுபிடித்து முடித்த பின்னர், அந்த சந்தோஷத்துடன் அவர் தன்னைத் தானே கேட்டுக் கொண்ட கேள்வி, ‘அடுத்தது என்ன?’ அடுத்த தயாரிப்பில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்து, தொழில்நுட்பத்தின் அடுத்த நிலைக்கு அனைவரையும் இட்டுச் செல்வார்.

தொழில்நுட்பம் பழகி முன்னேறுவதை அவர் மூலமாகத்தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரைப் பற்றிய நிறைய ஜோக்குகள் அவரது கண்டுபிடிப்புகளின் புகழைப் பரப்புகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்று இதோ:-

Q: What do the latest I-phone applications do?

A: Whiten teeth and perform lasik eye surgery!

தொழில்நுட்ப முன்னேற்றக் கருவிகள் செய்யாத வேலையே எதிர்காலத்தில் இனி இருக்காது போலும்!

மாறி வரும் உலகம்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் இன்றியமையாத ஒன்று. மாறிக் கொண்டே இருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் உலகம் ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டத்திற்கு ஈடு கொடுத்து அதனுடன் சேர்ந்து ஓடுபவனே வெற்றியைப் பெற முடியும்; பெற்ற வெற்றியைத் தக்க வைக்க முடியும்.

சில எளிய உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். காமிராவில் பிலிம் போட்டு, புகைப்படம் எடுத்த பின்னர் அதை டெவலப் செய்து, கறுப்பு – வெள்ளைப் படமாகப் பிரிண்ட் போட்டு, அதைப் பல மணி நேரம் கழித்து வாங்கியது அந்தக் காலம். அவ்வப்பொழுது படங்களை மொபைல் போன் மூலம் நூற்றுக்கணக்காகச் ‘சுட்டுத் தள்ளி’ அதை உடனடியாக ஃபேஸ்புக்கில் போட்டுப் பல ஆயிரம் மைல் தூரத்தில் இருக்கும் நண்பர்களும் அவற்றைப் பார்க்கச் செய்வது இந்தக் காலம்! கணினி இல்லாத, மொபைல் போன் இல்லாத வாழ்க்கையை இன்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

காரில் ஏறி உட்கார்ந்து வரைபடம், மைல் கற்களைப் பார்த்து இடத்தை அறிந்து கொண்ட காலமெல்லாம் போய், போக வேண்டிய இடத்தைக் காரில் ‘செட்’ செய்து விட்டால் ஜி.பி.எஸ் நம்மை உரிய இடத்திற்குக் கொண்டு போய் விடுகிறது.
மருத்துவத்தில் விளைகின்ற அற்புதங்கள் வாழ்நாள் எல்லையை நீட்டிக்கின்றன. வான் பயணத்தில் நிகழும் அற்புதங்கள் பல்லாயிரக்கணக்கான மைல் தூரத்தைக் கற்பனை செய்ய முடியா குறுகிய நேரத்தில் அடைய வழி வகுக்கின்றன.
இப்படி இன்றைய மாற்றங்களை ஆயிரக்கணக்கில் உதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆக, எதிலும் மாற்றம்; எங்கும் மாற்றம். இதற்கான தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு நாம் இணைந்து சென்றால்தான் வெற்றி!

மாறும் உலகில் தொழில்நுட்பம் – நன்மையும் தீமையும்

கவிதைகளை அனைவரிடமிருந்தும் பெற்று வெளியிடும் இணையத்தளம் ஒன்றில் (நன்றி: http://www.poetrysoup.com/poems/best/technology) வந்த கவிதை இது. எழுதியவர் Jimmy Mxxxxx. கவிதையைப் பார்ப்போம்:-

Technology is Changing the World

Note: Written from the perspective of a teenager.

Our older brothers and sisters
Were the last to live without technology
Our generation wouldn’t last a day
Without a cell phone in their hands
It’s too late for most.

Our younger brothers and sisters
Are growing up with technology
A ride in the car requires an IPad
Without a screen life is unbearable
It’s too late for most.

Our moms and dads
Are already adjusted to technology
There lives wouldn’t function without their computer
Technology is not a problem
The way we are getting used to it is.

அம்மாக்களும் அப்பாக்களும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியோடு வாழக் கற்றுக் கொண்டு விட்ட நிலையில், 80 வயதான பாட்டிமார்களும் ஃபேஸ்புக்கில் அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளப் பழகி விட்டனர்.

அபரிமிதமான தொழில்நுட்ப முன்னேற்றத்தால் அபாயங்களும் உண்டு. மறைவிடத்தில் உள்ள காமிராக்கள் நம்மைப் படம் எடுக்கின்றன. நமது புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டுத் தவறாகக் காண்பிக்கப்படுகிறது. ஆகவே, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் உள்ள தீமைகளையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ROBIN DAVIS என்பவர் எழுதிய Torturous Technology என்ற தலைப்பிலான கவிதை ஒன்று இந்தப் புலம்பலை அழகுற சித்தரிக்கிறது. கவிதையின் சுருக்கம் இதுதான்:-

Hidden cameras you don’t see
Creeps that watch you on T.V.
I-Pods taking photographs
Put on twitter for a laugh
Video streaming on you tube
Of teens being very crude
Facebook postings not so nice
Innocent people pay the price
Pushing someone way to far
Causing them another scar
This kind of madness needs to end
Technology should never send
This kind of mean uncaring evil… …

இனி வரும் மாற்றங்கள்

கணினித் துறையை அடுத்துப் பெரும் புரட்சி செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸிலும், ரொபாட் துறையிலும், மூளை பற்றிய ஆராய்ச்சியிலும், விண்வெளிப் பயணத் தொழில்நுட்பத்திலும் ஏற்பட உள்ளது. ஆகவே, அந்தத் துறைகளில் வரும் முன்னேற்றத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதோடு நம் நண்பர்கள், குழந்தைகளையும் ஆயத்தப்படுத்த வேண்டும்.

தொழில்நுட்பம் பழகுங்கள்


உலக ஓட்டத்துடன் அதன் வேகத்தை விஞ்சி ஓடு – முடியுமானால்!
உலக ஓட்டத்துடன் அதற்கு இணையாக ஓடு – நிச்சயமாக!
கூடவே கண்களை அகல விரித்துப் பார்த்துத் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கற்றுக் கொள்!

இதுதான் இன்று வாழும் அனைவரும் – குறிப்பாக இளைஞர்கள் – கற்றுக் கொள்ள வேண்டிய வெற்றிக் கலையின் முக்கிய உத்தி!

–வெல்வோம்…

About The Author