ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள்

1. பாலில் ஊற வைத்த நெற்பொரி போன்று வழ வழ கொள கொள என்றிருப்பவன் வாழ்க்கையில் எதற்கும் உதவான். உறுதிப்பாடே வடிவெடுத்திருப்பவன் வீரன். அவனால் எதையும் சாதிக்க முடியும்.

2. நெஞ்சில் உள்ளதையே சொல்லு. உனது சொல்லுக்கும் சிந்தைக்கும் அத்யந்த ஒற்றுமை இருக்கட்டும். அப்படி ஒற்றுமை ஏற்படாவிட்டல் உனக்கு யாதொரு நன்மையும் ஏற்படாது.

3. கழுகு ஆகாயத்தில் உயரப் பறக்கிறது. ஆனால் கீழே எங்கு அழுகிய பிணம் கிடைக்கிறது என்பதிலேயே அது கண்ணும் கருத்துமாக இருக்கிறது. வேத சாஸ்திரங்களை எவ்வளவு கற்றிருந்தாலும் காம வசப்பட்டிருக்குமளவு அந்த சாஸ்திரிகள் கழுகு போன்றவர்களேயாவர். காமமும் காசு ஆசையும் உள்ளத்தில் கொண்டிருக்குமளவு அவர்கள் ஈஸ்வர லாபத்தை அடைய முடியாது.

4. அரசனுடைய காமக்கிழத்தி தெருப் பிச்சைக்காரனை கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். அது போல் ஈஸ்வர சந்நிதானத்தில் பேரின்பம் அடையப் பெற்ற ஆத்மாவானது அற்பமாகிய உலக இன்பங்களில் ஆசை வைப்பதில்லை.

5. பணக்காரன் வீட்டுப் பணிப்பெண் போன்று நீ உலகத்தில் இரு. எஜமானனுடைய செல்வத்தையும் செல்வர்களையும் தன்னுடையவைகளென்று வேலைக்காரி சொல்லிக் கொள்கிறாள். ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் வேலையினின்று விலகி வெளியேற அவள் ஆயத்தமாயிருக்கிறாள். சாதகன் உலகில் அங்ஙனம் கருமம் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

6. முதலில் ஈஸ்வரனை நாடு. அப்பால் உலகப் பொருள்களை தேடு. இதற்கு மாறாகச் செய்யாதே. ஆத்ம ஞானத்தை அடைந்த பிறகு நீ உலக வாழ்க்கையில் பிரவேசித்தால் உனக்கு மன சஞ்சலமே இராது.

7. உயிருடனிருக்கும்போதே எவனொருவன் இறந்தவன் போல் ஆகிறானோ – அதாவது அவனுடைய ஆசாபாசங்கள் பிணத்திடமிருப்பது போன்று நசித்திருக்கின்றனவோ அவன்தான் உண்மையான ஆத்ம ஞானியாவான்.

8. உனது காம இச்சைகளை நன்றாக அடக்கியாள பிரயத்தனப்படு. அதில் ஜயம் அடைந்தால் சரீரத்தில் ஒருவித மாறுபாடு உண்டாகும். அதாவது இந்திரிய சக்திகளை ஆத்ம ஸ்வரூபத்தில் ஈடுபடுத்தும் ‘மேதை’ என்ற ஒரு நாடி வளர்கிறது. இந்த மேதை நாடி வளர்ச்சியடைந்த பிறகே ஆத்மாவைப் பற்றிய உயர்ந்த ஞானம் உண்டாகிறது.

About The Author

4 Comments

  1. jeya

    Hi Sir / Madam,
    I like religious message like this whatever I read, If you have any different tghings send me too Please.
    Truly
    Jeya

  2. t kumaresan

    இந்த எட்டுகட்டலைகல் மிகவும் ஒவ்வொருவரும் கன்டிப்பாக பின்பட்ரவேன்டிய ஒரு அர்புதமான விசயம்

Comments are closed.