ஜோதிடம் கேளுங்கள்

என்னுடைய துன்பங்கள் எப்போது நிவர்த்தியாகும்? நல்ல வேலை கிடைத்து எப்போது திருமணமாகும்? – ஸ்ரீராம், திருச்சி

அன்புள்ள நிலாச்சாரல் வாசகர் திரு. ஸ்ரீராம் அவர்களே!
30 வயதாகும் தங்களின் நட்சத்திரம் உத்திராடம், ராசி மற்றும் லக்னம் மகரம் ஆகும். தங்கள் ராசி மற்றும் லக்னத்தில் இருக்கும் குரு மே மாதம் இரண்டாம் வீட்டுக்குப் போகிறார். இதிலிருந்து தங்களின் நல்ல காலம் ஆரம்பம் ஆகிறது. மேலும், செப்டம்பர் மாதம் சனி, அஷ்டமச் சனி என்ற நிலையிலிருந்து மாறுவதால், முழு அளவில் நற்பலன்கள் கிடைக்கும். தங்களின் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். பொருளாதார விருத்தியும் உண்டு. நல்ல வேலை கிடைப்பதற்கான காலம் மே மாதம் முதல் ஆரம்பம் ஆகிறது. குரு பகவான் டிசம்பர் மாதம் நிகழும் பெயர்ச்சி மூலம் 2-ம் வீடான குடும்ப ஸ்தானத்திற்கு வரும் காலம் திருமண பாக்கியத்தை அளிப்பார்.

*****

என் காதல் நிறைவேறுமா? என் திருமண வாழ்க்கை பற்றிச் சொல்லவும்? – சுஜா, சென்னை

அன்புள்ள நிலாச்சாரல் வாசகி சுஜா அவர்களே!
24 வயதாகும் தங்களின் நட்சத்திரம் சதயம், ராசி கும்பம், லக்னம் துலாம் ஆகும். சிறிது போராட்டத்திற்குப் பின் காதல் கை கூடும் வாய்ப்புக்கள் உள்ளன. குரு 3-ல் இருந்து கொண்டு தங்களின் 7, 9, 11-ம் வீடுகளைப் பார்ப்பதால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

*****

தொழில், குடும்பம், அரசியல் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்குமா? – ராஜாராம், விழுப்புரம்

அன்புள்ள நிலாச்சாரல் வாசகர் திரு. ராஜாராம் அவர்களே!
32 வயதாகும் தங்களின் நட்சத்திரம் திருவோணம், ராசி மகரம், லக்னம் விருச்சிகம் ஆகும். தொழிலில் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஏற்ப பலன்கள் இருக்கும். சற்றே அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்வு நன்றாக இருக்கும். அரசியலில் நிதானமான முன்னேற்றம் கிடைக்கும். குரு பகவானை வழிபட்டு வாருங்கள். எதிலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.

***********************

வாசகர்கள் தாங்கள் கேட்க விரும்பும் கேள்வியை கீழே உள்ள படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பவும். பொதுவான கேள்விகளைத் தவிர்த்து குறிப்பான கேள்விகளாகக் கேட்டல் நலம்.

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர் :

திருமதி. காயத்ரி பாலசுப்ரமணியன், B.Sc., P.G.Dip. in Journalism,
ஜோதிடர், எண் 8, 2 வது குறுக்குத் தெரு,
மாரியம்மன் நகர், காராமணிக்குப்பம்,
புதுச்சேரி – 605 004.
செல்: (0) 99432-22022. (0)98946-66048. (0) 94875-62022.

Disclaimer: Astrological consultation in this section is provided by Mrs. Gayathri Balasubramanian for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author