கூந்தல் பராமரிப்பு – தெரிந்து கொள்ள வேண்டியவை

Hair Care

தற்காலத்தில் சுற்றுச்சூழல் வெகுவாக மாசடைந்திருக்கும் சூழலில் நம் கூந்தலை சிறப்பாகப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிட்டது. வாரம் ஒரு முறையாவது கூந்தலுக்கு ஆயில் மசாஜ் எடுத்துக்கொண்டால் கூந்தல் பராமரிப்பு எளிதாக இருக்கும்.

நம் தலையின் வெளிப்பகுதியில் நம் பார்வையில் படுகிற முடிகளுக்கு உயிர் கிடையாது. அங்கு இரத்தமோ, நரம்புகளோ கிடையாது. ஒரு மாதத்தில் ஒரு முடி சராசரியாக அரை அங்குலம் வளர்கிறது. வெயில் காலங்களில் வேகமாகவும், குளிர் காலங்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும்.

கூந்தலின் செழுமை உடலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருந்தால் கூந்தலும் அடர்த்தியாக, அழகாக இருக்கும். சரியான தூக்கமின்மையும் கூந்தலின் அழகு கெடக் காரணமாக அமைகிறது.

நம் கூந்தல் ‘கெராட்டின்’ என்கிற புரதத்தால் ஆனது. அழகான கூந்தல் வேண்டுவோர்,முதலில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும். நல்ல சாப்பாடு, ஆரோக்கியமான காற்று, போதுமான உறக்கம் இவையெல்லாம் ஆரோக்கியமான கூந்தலுக்கு அவசியமானது.

1.ஆரோக்கியத்தைத் தரும் உணவு உண்ணாமல், வெறுமனே விலை உயர்ந்த ஷாம்பு மற்றும் எண்ணைகளால் கூந்தலின் வளர்ச்சியையும், அழகினையும் அதிகரிக்க முடியாது.

2.வைட்டமின் B & C, மீன் எண்ணை, பீட்டர் கெரட்டின், செலோனியம் மற்றும் தாதுப் பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

3.அளவுக்கு அதிகமான வெயில், உப்புக்காற்று, குளோரின் கலந்த தண்ணீர் இவை கூந்தல் ஆரோக்கியத்தினைப் பாதிக்கக்கூடியன.

(Image courtesy : Publicdomainpictures.net)

About The Author