எண்ணெய்ச் சருமத்திற்கேற்ற முகப்பூச்சுக்கள்

எண்ணெய்ச் சருமம் உடையவர்களுக்கான சில முகப்பூச்சுக்களின் தயாரிப்பு மற்றும் செய்முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்!

ஆப்பிள் பூச்சு

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1
எலுமிச்சைச் சாறு – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

ஆப்பிளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் கெட்டியாக அரைத்து, அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்து முகத்தில் பூசிக் கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! ஆப்பிள் பூச்சு தரும் பலனைப் பாருங்கள்!

தக்காளிப் பூச்சு

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1
கோதுமை மாவு – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

தண்ணீர் சேர்க்காது தக்காளியை நன்றாக அரைத்து, அதில் கோதுமை மாவு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! சருமத்தின் மாற்றத்தை உணருங்கள்!

உருளைக் கிழங்குப் பூச்சு

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்குச் சாறு – 1 மேஜைக்கரண்டி
முல்தானி மட்டி – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

முல்தானி மட்டியுடன் உருளைக் கிழங்குச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! உருளைக்கிழங்குப் பூச்சின் பலனை அனுபவியுங்கள்!

முட்டை வெள்ளைக்கருப் பூச்சு

தேவையான பொருள்:

முட்டை – 1

செய்முறை:

முட்டையில் உள்ள வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து முகத்தில் தடவுங்கள். நன்றாகக் காய்ந்த பிறகு, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! உங்கள் மேனி அடைந்திருக்கும் மாற்றத்தை உணருங்கள்!

புதினாப் பூச்சு

தேவையான பொருட்கள்:

புதினா இலைகள் – 30
பன்னீர் – 1/2 மேஜைக்கரண்டி

செய்முறை:

புதினா இலைகளை நன்றாக அரைத்து, அதில் பன்னீர் சேர்த்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! புதினா தரும் புதிய மாற்றத்தை உணருங்கள்!

வெள்ளரிப் பூச்சு

தேவையான பொருட்கள்:

வெள்ளரிச் சாறு – 1 மேஜைக்கரண்டி
புதினாச் சாறு – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

வெள்ளரிச் சாற்றுடன் புதினாச் சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, முதலில் வெதுவெதுப்பான நீரிலும் பின்பு குளிர்ந்த நீரிலும் முகத்தைக் கழுவுங்கள்! பலனைப் பாருங்கள்!

********

Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கோ அல்லது இவற்றை செயல்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கோ நிலாச்சாரல் பொறுப்பல்ல. 

About The Author