மழையே மழையே வா வா

ஆங்கிலத்தில் ‘மழையே மழையே போய் விடு’ (Rain Rain Go Away) என்று மழலைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு பதில், மழையை வரவேற்கும் பாட்டு சொல்லிக் கொடுப்போமா?

மழையே மழையே வா வா

மழையே மழையே வா வா
இழையாய் இன்புற பொழிந்தே வா
வானம் பொழியும் புனிதமே வா
தானம் தர்மம் தழைத்திட வா
அமுதமாய் அள்ளிப் பருகிட வா
குமுதம் மலர்ந்திட குதித்தே வா
குளங்கள், ஏரி நிரம்பிட வா
வளங்கள் எங்கும் பொங்கிட வா
பயிர்கள் வளர்ந்து செழித்திட வா
உயிர்கள் வாழ்ந்து உயர்ந்திட வா
தாண்டித் தாவித் துள்ளியே வா
மண்ணின் தரத்தை உயர்த்திட வா
நன்றி சொல்லி நாள் தோறும்
என்றும் உன்னைப் போற்றிடுவோம்

About The Author

1 Comment

  1. Anand

    A very nice poem with beautiful meanings , appropriate to this time when there is scarcity of rain. Also it tells about the benefits of rain to kids.
    We all enjoyed it.
    – Anand

Comments are closed.