வானவில்!

கண்ணைச் சிமிட்டும் ஊதாவாம்

கவர்ச்சியான கரு நீலம்

விண்ணைப் போன்ற நீல நிறம்

வெற்றிலையைப் போல் பச்சை நிறம்

மங்களமாக மஞ்சள் நிறம்

மரப்பட்டைபோல் காவி நிறம்

செங்கமலம்போல் சிவப்பு நிறம்

சிரிக்கும் வான வில்லின் நிறம்!

("முதல் வசந்தம்" என்னும் என் கவிதை நூலிலிருந்து -1997)

About The Author